வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஜீவ நாடியில் எழுத்துக்களைக் கண்டு அதிசயித்த மருத்துவர்


சித்தர்கள் ஆசியாலும் முருகப் பெருமானின் கருணையாலும், நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களின் கண்களுக்கு காட்டி அவர்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. வெறும் ஓலைச்சுவடியில் தூய தமிழிலேயே எழுத்துக்கள் தோன்றி நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளின் கண்களுக்கு மட்டுமன்றி உண்மையான பக்தியுடனும் உள்ளன்புடனும், உறுதியான நம்பிக்கையுடனும் வருபவர்களுக்கு இந்த எழுத்துக்களை அவனிடம் காட்டு என்று முருகப் பெருமான் உத்தரவிடுவார். இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த எழுத்துக்களை பார்த்து படித்துள்ளனர்.  அந்த வகையில் ஒரு மருத்துவர் ஒருவர் ஜீவ நாடி பார்க்க வந்தார். வழக்கம்போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் முருகப்பெருமானை வணங்கி ஜீவ நாடி வாசிக்கத் தொடங்கினார். மருத்துவர் அவருக்காக கேட்க வரவில்லை. அவரது நண்பர் ஒருவரின் உடல் நோய் குறித்த குழப்பத்தில் இது கர்மவினையாக இருக்குமோ என்று எண்ணி ஜீவ நாடி குறித்து கேள்விப்பட்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் நாடி கேட்க வந்துள்ளார். நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பலன்களை சொல்லிக்கொண்டே வந்த ஜீவ நாடி திடீரென ஒரு உத்தரவைத் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மருத்துவரிடம் சொல் வந்து அவரது நண்பருக்கு எந்த இடத்தில் நோய் என்று அவரது கண்களுக்குத் தெரியும்படி காட்டுகின்றேன் என்றார் முருகப்பெருமான் ஜீவ நாடியில். சரி என்று மருத்துவரும் வந்து ஜீவ நாடியைப் பார்க்க அதில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது போல் தோன்றி மருத்துவரை திக்குமுக்காடச் செய்தது ஜீவ நாடி. ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் மூழ்கிப்போன மருத்துவர் தனது நண்பரின் நோய் அதுதான் என்று ஏற்கனவே அறிந்திருப்பதை இந்த ஜீவ நாடி காட்டிவிட்டதே என்று வாய்விட்டு சொல்லி முருகனைத் துதித்துச் சென்றார். அதுமட்டுமல்ல அந்த நோய் தீரும் காலத்தையும் நோய் தீரும் வழியையையும் ஜீவ நாடி உரைத்ததுதான் மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. வெறும் யட்சினி வசியம் வைத்துக் கொண்டு கடந்த காலம் மட்டும் சொல்லும் ஜீவ நாடி என்று விமர்சிப்பவர்களுக்கு முருகன் இது உண்மையான நாடி என்று உணர வைக்க நடத்திய திருவிளையாடல் என்றே தோன்றுகின்றது. பலன் கேட்க நாம் ஜீவ நாடியை அனுகாமல் நமது வாழ்வை வசந்தமாக்கும் வழிகளை ஜீவ நாடியில் தெரிந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும். வருவோர், போவோருக்கெல்லாம் சுவடியை காட்டாதே என்றும் எனது பக்தர்களுக்கும் எனது சீடர் அகத்தியர் பக்தர்களுக்கும் மட்டுமே எழுத்து வடிவில் காட்சியளிப்பேன் என்றும் முருகப் பெருமான் உரைத்திருக்கிறார். 
                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக