வெள்ளி, 14 மார்ச், 2014

வராகி பூஜித்த தலம்

.

 பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி,

சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன்

என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத்

தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன்

என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை

சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.



சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை

பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இவள் கருப்பு

நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக

ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது. வராஹியின் வரத,

அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம்

தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை

திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட

தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி

உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ

மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை

வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி,

வளமான வாழ்வு உண்டாகும்.


இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று

சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட 

தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி 

சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர்

என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த

தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர்

எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம்.

வராகி பூஜித்த தலம்.


திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை

உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன்

பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள்.

கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம்

உடையவள்.

வள்ளிமலை சுவாமிகள்



கொங்குநாட்டில் பவானி என்ற சிவத்தலம் உண்டு. அதன் அருகிலுள்ள

பூதநாச்சி கிராமத்தில் சிதம்பர ஜோதிடர், லட்சுமி அம்மாள் தம்பதியர்

வசித்தனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒருமுறை

லட்சுமி அம்மாள் முன் ஒரு நாகம் படமெடுத்து ஆடியது. அதற்கு கற்பூரம்

காட்டிய வுடன் மறைந்துவிட்டது. இதன்பிறகு நாகாசலம் எனப்படும்

திருச்செங்கோட்டிற்கு 12 அமாவாசைகள் தம்பதியர் சென்றனர். இறைவன்

அருளால் முதலில் ஒரு பெண் குழந்தையும், அடுத்து ஒரு ஆண்குழந்தையும்

பிறந்தது. ஆண்குழந்தை பிறந்தது 1870, நவம்பர் 25ல். குழந்தைக்கு அர்த்தநாரி

எனப் பெயரிட்டனர். இளம் பருவத்திலேயே தந்தையை இழந்தார் அர்த்தநாரி.

படிப்பில் நாட்டமில்லை. ஆனால் மல்யுத்தம், சிலம்பம் கற்றார்.



இளவயதிலேயே மைசூரு சென்று விட்டதால் தமிழ் தெரியாமல் போனது.

ஒன்பது வயதிலேயே அர்த்தநாரிக்கு திருமணம் நடந்தது. மனைவியைக்

காப்பாற்ற மைசூரு அரண்மனையில் சமையல்காரராக பணிபுரிந்தார்.

அப்போது இறைநாட்டம் இல்லை. 22 வயதில் மைசூருவில் நடந்த ஒரு

திருமணத்திற்குச் சென்றார்.அத்திருமணத்தில் பெண்ணிற்கு தாலிகட்டும்

சமயத்தில் மாப்பிள்ளைக்கு வலிப்பு வந்துவிட்டது. எனவே, பெண் வீட்டார்

அந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு வந்த அர்த்தநாரிக்கு

பெண்ணைக் கொடுத்து விட்டனர். இரண்டாம் திருமணம் நடந்த மூன்று

வருடங்களுக்குள்ளாக முதல் மனைவியும், அவருடைய மூன்று

குழந்தைகளும் இறந்து விட்டனர்.



இதையடுத்து சில நாட்களில் இரண்டாவது மனைவிக்குப் பிறந் இரண்டு

பெண் குழந்தைகள் ஒரே நாளில் இறந்து விட்டனர். இதனால் அர்த்தநாரிக்கு

தாளாத துக்கமும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. பட்ட காலிலேயே

படும் என்பதற்கேற்ப அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. எவ்வளவோ

வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. அரண்மனையில் இருந்த

வேலைக்காரனின் சொல்படி, தன் இரண்டாவது மனைவியுடனும்,

எஞ்சியிருந்த ஒரே மகன் நரசிம்மனுடனும் அவர் பழநி சென்றார்.



நான்கு வருடங்கள் அங்கே தங்கி கோயிலில் கூட்டி மெழுகுவது, மலர்

பறிப்பது ஆகிய கைங்கர்யங்களைச் செய்தார். 48நாட்கள் அபிஷேகப் பால்,

நிவேதன பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்த அர்த்தநாரிக்கு

முருகன் அருளால் வயிற்றுவலி நீங்கியது. ஒருமுறை, மதுரையிலிருந்து

பழநி வந்த தேவதாசி, திருப்புகழ் பாடல் ஒன்றைப் பாடி நடனமாடினாள்.

பாடலைக் கேட்ட அர்த்தநாரி தன்னை மறந்தார். ஆனந்தக் கண்ணீர்

பெருகியது. முருகன் அந்தப் பாடல் மூலம் அர்த்தநாரியை ஆட்கொண்டு

விட்டார். தமிழ் தெரியாத அர்த்தநாரி திருப்புகழை எப்படி படிப்பது என்று

வருத்தம் கொண்டார். ஒரு சிறுவனின் உதவியுடன் தமிழ் படித்து திருப்புகழ்

பாடும் திறன் பெற்றார். அவரை மைசூரு சாமி என மக்கள் அழைத்தனர். 1912ல்

அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியை தரிசித்தார். பின்

சென்னை சென்று, செங்கல்வராயபிள்ளை என்பவர் வீட்டில் தங்கி

அன்னதானம் வழங்கினார். ஒருசமயம் முருகனே சிறுவன் ரூபத்தில் வந்து

அன்னம் பெற்றுச் சென்றார் என கூறுவார்கள்.



இதன்பிறகு, வடஇந்திய யாத்திரை சென்றார். மீண்டும் திருவண்ணாமலை

திரும்பி ரமண மகரிஷியுடன் 15 நாட்கள் தங்கினார். பின், ரமணர் அவரை

அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். இதனால் வருத்தம்அடைந்த

அர்த்தநாரி வரும் வழியில் சேஷாத்ரி சுவாமிகளைச் சந்தித்தார். அவர்

அர்த்தநாரி யிடம், வள்ளிமலைக்கு சென்று தவம் செய். நான் அங்கு

வருகிறேன் என்றார். அதன்பிறகே ரமணர் திருவண்ணாமலை யிலிருந்து

அவரை வெளியேற்றியதன் அர்த்தம் புரிந்தது. சென்னை- பெங்களூரு

ரோட்டில் <உள்ள திருவல்லம் என்ற ஊரிலிருந்து 12கி.மீ., தொலைவில்

வள்ளிமலை உள்ளது. திருமாலின் மகளான வள்ளி, பூலோகத்தில்

நம்பிராஜனின் மகளாக வேடர் குலத்தில் பிறந்து, தினைப்புனம் காத்து,

தவமிருந்து முருகனை மணந்த பகுதியே வள்ளிமலை. முருகனின்

புனிதப்பாதங்கள் பட்ட அத்தலத்தில் தங்கிய அர்த்தநாரி, தவவாழ்வில்

ஈடுபட்டார். இதன்பின் வள்ளிமலை சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.



பல தலங்களுக்கும் சென் திருப்புகழின் பெருமையை மக்களிடம்

உணர்த்தினார். ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மக்கள் மேல்நாட்டு

நாகரீகப்படி தங்கள் நடைமுறையை மாற்றி வந்த காலம் அது. அதைத்

தடுக்கும் வகையில், அன்று மக்கள் முருகனைத் தரிசிக்கும் வழக்கத்தை

ஏற்படுத்த விரும்பினார். 1918 ஜனவரி முதல் நாள் திருத்தணியில் படிவிழா

என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினார்.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் அதைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.

பல இடங்களில் திருப்புகழ் சபை அமைத்தார். 1944ல் பழநியில் திருப்புகழ்

மாநாடு நடத்தினார். திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை என்ற நூலை

வெளியிட்டார். சங்கீத ஞானம் இல்லாத சுவாமிகளுக்கு வள்ளிநாயகி

ஒருமுறை காட்சியளித்தாள். தனது பெயரை பொங்கி என எழுதிக்காட்டினாள்.

சுவாமிகள் அதன் பிறகு, வள்ளி சிலை ஒன்றை வடித்த அதற்கு பொங்கி

வைஷ்ணவி என திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். 1950 நவம்பர் 22ல்

சமாதி அடைந்தார். அவரது திருமேனி வள்ளிமலையில் அவர் தவம் செய்த

குகை யிலேயே வைக்கப் பட்டது.

ஞாயிறு, 9 மார்ச், 2014

குரு


குரு ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தர் மற்றும் அவருடைய சீடரனுமான

ஸ்ரீ அப்பனாச்சார்யா வாழ்ந்த இடமாக பிக்ஷாலயா மிகவும் பிரபலமாக

அறியப்படுகிறது. அதோடு ராகவேந்திர சுவாமியும், அப்பனாச்சார்யாவுடன்

இந்த பிக்ஷாலயாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.



'பிச்சாலி' என்ற பெயராலும் அழைக்கப்படும் பிக்ஷாலயா, மந்த்ராலயம்

நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இது

துங்கபத்ரா நதிக்கரையில் பசுமையின் வனப்பும், அமைதியும் சூழ

அமைந்திருப்பதால் தங்கள் அன்றாட அலுப்பு சலுப்பும் மிகுந்த நகரத்து

வாழ்க்கையிலிருந்து நிவாரணம் தேடி இங்கு ஏராளமான சுற்றுலாப்

பயணிகள் வந்து செல்கின்றனர்.




மேலும் பிக்ஷாலயாவின் பேரமைதி மிக்க சுற்றுச் சூழல் அமைப்பு தியானம்

செய்ய விரும்புவோருக்கு வெகு பொருத்தமான இடமாக இருக்கும்.

பிச்சாலி என்று அழைக்கப்படுகின்றது. துங்கபத்ரா நதிக்கரையில் இங்கு

ஸ்ரீபாதராயர் தங்கி தவம், ஜபம் செய்யும் காலத்தில், ஹிரணியனை மடியில்

போட்டு வள்ளுகிரால் அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்ம தேவரை இங்கு

பிரதிஷ்டை செய்தார். அவர் இங்குள்ள ஜபாடகட்டே என்னும் கல் மேடையில்

அமர்ந்து உபன்யாசம் செய்துள்ளார். ஸ்ரீவியாஸராஜர் ஹனுமன் சிலையை

பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஸ்ரீஜிதாமித்ரர் இங்கு நாக பிரதிஷ்டை

செய்துள்ளார். இவ்வாறு பலமகான்களால் புனிதமடைந்த இடம் இந்த பிச்சாலி

ஜாபட கட்டே. இந்த பிச்சாலியில் குருதேவர் பன்னிரண்டு வருடம் தனது

சீடரும் நண்பருமான அபர்ணாச்சாரியாருடன் வசித்துள்ளார்.



இங்குதான் இராகவேந்திரரின் அத்யந்த சிஷ்யரும் நண்பருமான

அப்பணாச்சாரியார் வசித்து வந்தார். அவர் மிகச்சிறந்த ஹரி பக்தர், வேத

வேதாங்களில் கரை கண்டவர், சம்ஸ்கிருத ஞானி, அபார கருணை கொண்ட

ஆசிரியர். இவரது ஞானத்தை பற்றி கேள்விப்பட்டு இவரிடம் சிஷ்யராக

இருந்து கல்வி கற்க பாரத தேசமெங்கும் இருந்து எண்ணற்ற மாணவர்கள்

வந்து தங்கி கல்வி கற்றனர் அவர்களுக்கு ஞானதானம் வழங்கி வந்தார்

அப்பணாச்சாரியார் .



இவர் 300 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆயினும் அக்கால வழக்கப்படி

தனது சிஷ்யர்களுக்கு தானே உணவு அளித்து வந்ததால் வறுமையில்

வாடினார். எனவே இவரது சிஷ்யர்கள்உஞ்சவிருத்தி செய்து கொண்டு வந்த

அரிசியை ஒரு துணியில் கட்டி துங்கபத்ரா நதியில் நனைத்து ஆலமரத்தில்

கட்டி விடுவார். பாடம் முடிவதற்குள் இவரது யோக சக்தியால் அது சாதமாகி

விடும் அதை சிஷ்யர்களுக்கு அளிப்பார். அவ்வளவு சிறந்த யோகி அவர்.



துங்கபத்ரை நதிக்கரையில் ஆலமரத்தின் அடியில் உள்ள

கல்மேடையில்(ஜாபட கட்டே) அமர்ந்து வேதம், உபநிஷத் சாஸ்திரம்

ஆகியவற்றை இவர் தன் மாணவர்களுக்கு போதித்து வந்தார்.



இவ்வாறு அப்பணாச்சாரியார் பிச்சாலியில் சேவை செய்து வரும் காலத்தில்,

கும்பகோணத்திலிருந்து இராகவேந்திர சுவாமிகள் ஆதோனி வர முடிவு

செய்தார், அதற்காக தனது அருளால் எழுத்தறிவில்லாமல் இருந்து

ஞானியான வெங்கண்ணாவிடம் தான் அங்கு வருவதாக செய்தி

அனுப்பினார். திவான் வெங்கண்ணாவும் வெகு சிறப்பாக குருதேவரை

வரவேற்றார், இராகவேந்திரர் வெங்கண்ணா வீட்டில் மூல இராமருக்கு பூஜை

செய்யும் போது நவாப் வந்து மாமிசம் கொடுக்க அதை பழங்களாக மாற்றி

அற்புதம் செய்த இராகவேந்திரர் மாஞ்சாலியை பெற்றார்.



இச்சமயம் பிச்சாலிக்கு வந்த குருதேவர் அதன் இயற்கை அழகிலும் ,

அப்பணாச்சாரியரின் அப்பழுகற்ற பக்தியாலும் மகிழ்ந்தார்.

அப்பணாச்சாரியாரும் இராகவேந்திரரை தனது குருவாக ஏற்றுக்

கொண்டார். துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆகி துங்கபத்ராவானது

போல இராகவேந்திரரும், அப்பணாச்சாரியரும் இனைந்து ஹரி பக்தியை

பரப்பினர். குருதேவர் மந்திராலயத்தில் வசித்து வரும் போது பிச்சாலி

வருவார் அவர் கல்மேடையில் அவர் அமர்ந்திருக்க, அவரது

திருப்பாதங்களில் அப்பணாச்சாரியார் அமர்ந்து சேவை செய்வார். இருவரும்

பகவத் விஷயத்தில் ஈடுபடுவர். இவ்வாறு 13 வருடங்கள் இருவரும் ஹரி

பக்தியை பரப்பி வந்தார்கள். குருதேவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும்

நாள் வந்தது, அப்பணாச்சாரியார் இருந்தால் தன்னை அனுமதிக்க மாட்டார்

என்று அறிந்திருந்த இராகவேந்திரார் மத்வசத்சங்கத்திற்கு சென்று

வருமாறு அனுப்புகின்றார். மனதில்லையானாலும் செல்லுகின்றார்

அப்பண்ணாச்சாரியார்.



பின்னர் பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில்ஆழ்ந்தார். அவரது

கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும்

வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார்.

இராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக்

கடைசியாகக் கண்டு விடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார்

அப்பணாச்சாரியார்.



வழியில் துங்கபத்ரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை

மனதில் நினைத்துக்கொண்டு, சமஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு,

நதியில் இறங்கி ஓடிவருகிறார். சங்கரர் அழைத்ததும் நதியில் பாதம் பதித்து

வந்த பத்மபாதர் போல இக்கரை வந்தார் அப்பணாச்சாரியார், அவர் அங்கு

வந்த போது பிருந்தாவனத்தின் மேல் கடைக்கல் வைக்கப்பட்டு

கொண்டிருந்தது. ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார்.

அப்பண்ணாச்சாரியார்ன் பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு

எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க

முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுக்கின்றது.

ஆனால் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து

“ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும்

உரத்த ஒலி வெளிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நான் உனக்கு

காட்சி தருவேன் என்று வாக்கு கொடுக்கின்றார் இராகவேந்திரர்.



இராகவேந்திரர் பிருந்தாவனஸ்தர் ஆன பின்னும் தினமும்

பிச்சாலியிலிருந்து மந்திராலயம் வந்து குருதேவரை வணங்கிச்செல்வதை

கடமையாக கொண்டிருந்தார்.மழையிலும் வெள்ளத்திலும், துங்கபத்ரையில்

தன்
நண்பர் அலைந்து திரிவதைக்கண்டு இராகவேந்திரர் பிச்சாலியில் ஜபாட

கட்டேயில் ஒரு ஏக சிலா பிருந்தாவனம் அமைக்குமாறும் அங்கு வந்து தான்

காட்சி தருவதாகவும் அருளினார். அப்பணாச்சாரியார் அமைத்த ஏல சிலா

பிருந்தாவனத்தில் ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் குருதேவர்.

மந்த்ராலயம்




ஆந்திர மாநிலம் கர்ணூல்மாவட்டத்தில்அமைந்திருக்கும் சிறிய நகரமான

மந்த்ராலயம், 'மன்ச்சாலே' என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம்

அமைந்துள்ளது.


மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு குரு ராகவேந்திரா சுவாமியால்

கட்டப்பட்ட பிருந்தாவனம் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. அதாவது

தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ராகவேந்திர சுவாமிகள், அந்த

சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள்

அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி 339 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 361 ஆண்டுகள்

ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதன்

காரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மந்த்ராலயத்தை புனிதத் தன்மை

வாய்ந்த நகரமாக கருதுகின்றனர்.


மந்த்ராலயம் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக ஸ்ரீ ராகவேந்திர சுவாமி

கோயில், பிக்ஷாலயா மற்றும் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை

அறியப்படுகின்றன. இந்த சிறிய நகரில் விமான நிலையம்

இல்லையென்றாலும் ரயில் மற்றும் சாலை மூலமாக மந்த்ராலயம் நகரை

சுலபமாக அடையலாம்.மந்த்ராலயம் நகரின் மையத்திலிருந்து 16

கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு

மந்த்ராலயம் நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து நிறைய அரசு

மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்ற. 

ராகவேந்திரர் உரை



1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்குமுன்

தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.

அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:

• சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

• நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்

• சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு

அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும்

ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.

அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும்

எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ

இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால்

ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை

சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த

அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல்

செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும்.

அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு

நன்மையும் நேராது.


• கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு

நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு

மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை

உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும்.

நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும்

அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.


• இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை

ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில்

அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப்

புரிந்துகொண்ட அவர்சீடர்கள்அவரை சுற்றி பிருந்தாவன சுவர்எழுப்பத்

தொடங்கினார்கள்.

வியாழன், 6 மார்ச், 2014

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

                            ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்!     
                                      
  குரு வாழ்க! குருவே சரணம்! குருவே துணை! குருவின் திருவடி போற்றி!   







ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி


ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்





ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி



ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்



ஸ்ரீபதஞ்சலி காயத்ரி



ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்



ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி


ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்



ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி


ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி 
ப்ரசோதயாத்



ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி


ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்



ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி


ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்



ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் 



ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்



ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி


ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்


செவ்வாய், 4 மார்ச், 2014

சரணாகதி



  1. சரணாகதி  முடிவான  பலனை  முதலிலேயே  தரும்.
 நாம்  ஒரு  செயலை  மனத்தால்  நினைத்து  பிறகு  அதை  கற்று உடலால்  செய்கிறோம்.  மனம்  நினைக்கிறது.  புத்தகம்  வாங்குவது எண்ணமாக   மனதில்   தோன்றுகிறது.   உடல்   கடைக்குப்   போய் வாங்குகிறது.  புத்தகத்தின்  மீதுள்ள  அக்கறை  கடைக்குப்  போகும் உற்சாகத்தைத்  தருகிறது.  இது  நாம்  செயல்படும்  முறை.
மனம் என் எண்ணத்தை உணர்வாலும், உடலாலும் நிறைவேற்றுவதை நான்  செயல்படும்  முறையாகக்  கொண்டுள்ளேன்.
சமர்ப்பணம்,  சரணாகதி  எனில்  மனத்தின்  எண்ணத்தை ஆன்மாவுக்கும்,  அன்னைக்கும்  தருகிறோம்.  மௌனமாக  ஆன்மா மனத்தின்    எண்ணத்தை    எடுத்து    அன்னையிடம்    தருவது சமர்ப்பணம்,   சரணாகதி.   அன்னையின்   சக்தி   சத்திய   ஜீவிய சக்தியாகும்.  உண்மையில்  அதையும்  கடந்ததாகும்.  அங்கு  காலம் இல்லை.  அது  காலத்தைக்  கடந்த  நிலை.  காலத்தைக்  கடந்த  சக்தி எண்ணத்தை ஏற்று செயல்படுவதால் முடிவான பலன் முதலிலேயே வருகிறது. கடைக்குப்   போகும்   முன்   அப்புத்தகம்   வீட்டிற்கு   வருவதைக் காண்கிறோம்.

2.அடக்கத்தால் சரணாகதி பலிக்கும், சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
 நமக்கு திறமையுள்ள காரியத்தை செய்யப் பிரியப்படுகிறோம். அதை   செய்யாமலிருக்க   முடியாது.   புதியதாக   பெற்ற   பயிற்சி எதுவானாலும்  அதைச்  செய்ய  கை  துடிக்கும்.  ஒருவர்  கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலை எவரும் சொல்லாதபொழுது அதைத் தெரிந்தவரால்  சொல்லாமலிருக்க  முடியாது.  மனம்  அடங்காது. தன்   திறமையை   சரணம்   செய்வது   அருளைப்   பொருளாக்கும் என்கிறார்   அன்னை.   சரணாகதிக்கு   அந்த   அடக்கம்   தேவை. இறைவன்  முன்  நாம்  துரும்பு  என்பதே  அடக்கவுணர்வு  என்பது அன்னை  விளக்கம்.  அந்த  அடக்கமில்லாமல்  சரணாகதியில்லை. இது   எவ்வளவு   சிரமம்   என்பதை   அறிய   வேண்டுமானால்,   ஓர் எண்ணம்   யார் கதவைத் தட்டுகிறார்கள் என அறியும் எண்ணம்   மனத்தில்  எழுந்தபொழுது  அதைச்  சரணம்  செய்ய  முயன்றால் சிரமம்   தெரியும்.   அதைச்  சரணம்  செய்வது  யோகத்தில்  முதல்  அடி எடுத்து  வைப்பதாகும்.
 3.மனம்  எதை  ஏற்கிறதோ  அதைத்  தரவல்லது  சரணாகதி.
நாம்  எதையும்  அதிக  சிந்தனையின்றி  செய்கிறோம்.  படிப்பு  எனில், நான்  SSLC   படித்திருக்கிறேன்.  15  வருஷமாயிற்று.  இனி எனக்கு  வராது  என்பவர் வராது என்பதை ஏற்கிறார். அவருக்கு அது    பலிக்கிறது.      Ph.D.    எடுத்துவிட    வேண்டும்    என நினைப்பவருக்கு  இது  பலிக்கிறது.
சிறிய  உத்தியோகம்,  பெரிய  செல்வம்,  கற்பனைக்கெட்டாத  பதவி ஆகியவற்றை எட்டியவர்களை நெருக்கமாகத் தெரியுமானால், அவர் மனம் ஏற்றது  அதனால்  அவருக்குப்  பலித்தது  என்பது  தெரியும்.
  • மனம்  ஏற்காவிட்டால்  நிச்சயமாகப்  பலிக்காது.
  • மனம்  ஏற்றதால்  மட்டும்  பலிப்பதில்லை.
  • மனம்   ஏற்றால்,   திறமைக்கும்,   அதிர்ஷ்டத்திற்கும்   ஏற்றவாறு பலிக்கும்.
  • அன்பரின் மனம் ஏற்றால் திறமையிருந்தால் நிச்சயமாகப் பலிக்கும். திறமை  இல்லாதவர்க்கும்  பலித்ததுண்டு.
  • ஒரு  காரியம்  பலிக்க  மனம்  ஏற்பது  அவசியம்.
இது   முதற்   பகுதி.   மனம்   ஏற்றுப்   பலிக்கும்   காலத்தில் அதற்குரிய     நேரத்தில்     பலிக்கும்.     மனம்     ஏற்றபின், சரணாகதியிருந்தால்  உடனே  பலிக்கும்.  எதுவானாலும்  பலிக்கும் என்பது    கவனிக்கத்தக்கது.    ஸ்ரீ    அரவிந்தர்    கேட்ட    வரம் அளிக்கப்பட்டதால்,   நாம்   கேட்பதெல்லாம்   அதற்கு   உட்பட்டது என்பதால்,  எதுவும்  பலிக்கும்.  உடனே  பலிக்கும்.
4.  திருவுருமாற்றத்தை  முதற்பலனாகத்  தருவது  சரணாகதி,  அது அடக்கத்திற்குரியது.   நாம்   நல்லது   வேண்டும்.   கெட்டது வேண்டாம்   என்கிறோம்.   ஒரு   நாணயத்தின்   தலை   மட்டும் வேண்டும்  என்றால்  நாணயமில்லை.  தங்க  சுரங்கத்தில்  தங்கம் கனிப்பொருளாக இருக்கிறது. கனிப்பொருளை சுத்தம் செய்து, உருக்கி    தங்கம்    பெறவேண்டும்.    தங்கம்    வேண்டும், கனிப்பொருள்   வேண்டாம்,   எனில்   தங்கமில்லை.   ஞானம், அஞ்ஞானமானதால்,  இனி  ஞானம்  அஞ்ஞானத்திலிருந்து  எழ வேண்டும்.  அஞ்ஞானத்தை  ஒதுக்கினால்  எதிலிருந்து  ஞானம் வரும்? ஞானம் வருவது தடைப்படும். ஏழ்மையை ஒதுக்கினால் செல்வம்     எப்படி     ஒதுக்கப்படும்   எனலாம்.     ஏழை பணக்காரனாகாவிட்டால்  நாடு  ஏழையாக  இருக்கும்.
5.  வளராத ஆன்மா, வளரும் ஆன்மாவாக  மாறியது.  அதுவே சைத்திய  புருஷன்.  சத்  என்ற  அகம்  சத்தியம்  என்ற  புறமான பொழுது    ஆன்மா    அவற்றிடையே    ஏற்பட்டது.    அந்த ஆன்மாவுக்கு   ஆதி,   அந்தம்,   மாற்றம்,   வளர்ச்சியில்லை என்பது இந்திய மரபு. பிறப்பிலேற்பட்ட புத்தி வளராது, கர்மம் அனுபவிக்கப்பட    வேண்டியது    போன்றவை    இவை. சச்சிதானந்தம்   உலகமாக   மாறி,   பரிணாமத்தால்   மீண்டும் சச்சிதானந்தமாகும்பொழுது   ஆனந்தம்   வளர்கிறது   (Bliss becomes Delight) ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சத்,    சித்,    ஆனந்தம்    மூன்றும்    முதலிலிருந்ததைவிட உயர்ந்ததாகின்றன.  சிருஷ்டி,  பரிணாமம்  என்ற  பாதைகளில் சென்ற   பின்   வளர்ச்சியுண்டு.   பரிணாமத்தைப்   பற்றி   மரபு பேசுவதால்  அவர்கள்  வளராது  என்றனர். பிரம்மம்   எண்ணத்தால்   உலகை   சிருஷ்டித்தது   என்பதால் எண்ணம்  பிரம்மத்தை  எட்டும்  என்கிறார்.

6.எண்ணமே கெட்டது  என்கிறார்  அன்னை.
 உடல்   இருளாலானது.   இருள்   தீமை.   எண்ணம்   உடலில் எழுவதால்  அது  இருளின்  வெளிப்பாடு.  அதனால்  எண்ணமே தீமை  என்கிறார்.  அத்துடன்  எண்ணம்  பிரம்மத்தை  எட்டும் என   மரபுக்கு   எதிராகவும்   பேசுகிறார்.   சிருஷ்டியில்   இரு அம்சங்களுண்டு.
  • சத்திய ஜீவியம் சத் என்பதன் எண்ணத்தால் (Real Idea)   உலகை சிருஷ்டித்தது.
  • பிரம்மம்  தன்  எண்ணத்தால்,  இச்சையால்  உலகை  சிருஷ்டித்தது என்கிறார்  (Self-Conception). 
  1. குறைய  முடியாததும்,  வளர  முடியாததும்  பிரம்மம்.
 குறைய முடியாதது பிரம்மம் என்பதை அக்ஷய பாத்திரம் மூலம் அறியலாம்.   வளர   முடியாது   என்றால்   எப்படிப்   புரியும். பூவுலகம்   சலனத்திற்கு   உட்பட்டது.   அது   சலனத்தால்  எடுப்பதால்      குறையும்,   நிறையும்.   பிரம்மம்   சலனத்தால் பாதிக்கப்படாதது என்பதால் குறைவும், நிறைவும் அதற்கில்லை. பொருத்தமான உதாரணம் சொல்வது சிரமம். மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்றவர்களை உலகம் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.    குறை    சொல்வதால்    அவர்கள்    குறையப் போவதில்லை. நோபல் பரிசால் உயரப் போவதில்லை. அவர்கள் மனித நிலையைக் கடந்தவர் என்பதுபோல், பிரம்மம் மனித நிலையைக் கடந்தது.  பிரம்மம் குறையாது, வளராது என்ற கருத்தை மனம் கணிதத்தில் ஏற்பதுபோல் ஏற்க வேண்டும். மேலும் ஜடத்திலும் அதை ஏற்பது அவசியம். முக்கியமாகப் பணம் செலவு செய்தால் பெருகும் என்ற சொந்த அனுபவம் பிரம்மத்தை ஜடத்தில் அறிய உதவும்.  பணம்  செலவு  செய்தால்  பெருகும்  என்ற  அனுபவம்  தருவது பணமில்லை, பிரம்மம். பிரம்மத்தை மனிதன் திட்டவட்டமாக, தெளிவாக, ஐயம்  திரிபு  அற  ஜடத்தில்  அறிவதற்கு  இவ்வனுபவம்  உதவும்.