ஞாயிறு, 9 மார்ச், 2014

குரு


குரு ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தர் மற்றும் அவருடைய சீடரனுமான

ஸ்ரீ அப்பனாச்சார்யா வாழ்ந்த இடமாக பிக்ஷாலயா மிகவும் பிரபலமாக

அறியப்படுகிறது. அதோடு ராகவேந்திர சுவாமியும், அப்பனாச்சார்யாவுடன்

இந்த பிக்ஷாலயாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.



'பிச்சாலி' என்ற பெயராலும் அழைக்கப்படும் பிக்ஷாலயா, மந்த்ராலயம்

நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இது

துங்கபத்ரா நதிக்கரையில் பசுமையின் வனப்பும், அமைதியும் சூழ

அமைந்திருப்பதால் தங்கள் அன்றாட அலுப்பு சலுப்பும் மிகுந்த நகரத்து

வாழ்க்கையிலிருந்து நிவாரணம் தேடி இங்கு ஏராளமான சுற்றுலாப்

பயணிகள் வந்து செல்கின்றனர்.




மேலும் பிக்ஷாலயாவின் பேரமைதி மிக்க சுற்றுச் சூழல் அமைப்பு தியானம்

செய்ய விரும்புவோருக்கு வெகு பொருத்தமான இடமாக இருக்கும்.

பிச்சாலி என்று அழைக்கப்படுகின்றது. துங்கபத்ரா நதிக்கரையில் இங்கு

ஸ்ரீபாதராயர் தங்கி தவம், ஜபம் செய்யும் காலத்தில், ஹிரணியனை மடியில்

போட்டு வள்ளுகிரால் அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்ம தேவரை இங்கு

பிரதிஷ்டை செய்தார். அவர் இங்குள்ள ஜபாடகட்டே என்னும் கல் மேடையில்

அமர்ந்து உபன்யாசம் செய்துள்ளார். ஸ்ரீவியாஸராஜர் ஹனுமன் சிலையை

பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஸ்ரீஜிதாமித்ரர் இங்கு நாக பிரதிஷ்டை

செய்துள்ளார். இவ்வாறு பலமகான்களால் புனிதமடைந்த இடம் இந்த பிச்சாலி

ஜாபட கட்டே. இந்த பிச்சாலியில் குருதேவர் பன்னிரண்டு வருடம் தனது

சீடரும் நண்பருமான அபர்ணாச்சாரியாருடன் வசித்துள்ளார்.



இங்குதான் இராகவேந்திரரின் அத்யந்த சிஷ்யரும் நண்பருமான

அப்பணாச்சாரியார் வசித்து வந்தார். அவர் மிகச்சிறந்த ஹரி பக்தர், வேத

வேதாங்களில் கரை கண்டவர், சம்ஸ்கிருத ஞானி, அபார கருணை கொண்ட

ஆசிரியர். இவரது ஞானத்தை பற்றி கேள்விப்பட்டு இவரிடம் சிஷ்யராக

இருந்து கல்வி கற்க பாரத தேசமெங்கும் இருந்து எண்ணற்ற மாணவர்கள்

வந்து தங்கி கல்வி கற்றனர் அவர்களுக்கு ஞானதானம் வழங்கி வந்தார்

அப்பணாச்சாரியார் .



இவர் 300 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆயினும் அக்கால வழக்கப்படி

தனது சிஷ்யர்களுக்கு தானே உணவு அளித்து வந்ததால் வறுமையில்

வாடினார். எனவே இவரது சிஷ்யர்கள்உஞ்சவிருத்தி செய்து கொண்டு வந்த

அரிசியை ஒரு துணியில் கட்டி துங்கபத்ரா நதியில் நனைத்து ஆலமரத்தில்

கட்டி விடுவார். பாடம் முடிவதற்குள் இவரது யோக சக்தியால் அது சாதமாகி

விடும் அதை சிஷ்யர்களுக்கு அளிப்பார். அவ்வளவு சிறந்த யோகி அவர்.



துங்கபத்ரை நதிக்கரையில் ஆலமரத்தின் அடியில் உள்ள

கல்மேடையில்(ஜாபட கட்டே) அமர்ந்து வேதம், உபநிஷத் சாஸ்திரம்

ஆகியவற்றை இவர் தன் மாணவர்களுக்கு போதித்து வந்தார்.



இவ்வாறு அப்பணாச்சாரியார் பிச்சாலியில் சேவை செய்து வரும் காலத்தில்,

கும்பகோணத்திலிருந்து இராகவேந்திர சுவாமிகள் ஆதோனி வர முடிவு

செய்தார், அதற்காக தனது அருளால் எழுத்தறிவில்லாமல் இருந்து

ஞானியான வெங்கண்ணாவிடம் தான் அங்கு வருவதாக செய்தி

அனுப்பினார். திவான் வெங்கண்ணாவும் வெகு சிறப்பாக குருதேவரை

வரவேற்றார், இராகவேந்திரர் வெங்கண்ணா வீட்டில் மூல இராமருக்கு பூஜை

செய்யும் போது நவாப் வந்து மாமிசம் கொடுக்க அதை பழங்களாக மாற்றி

அற்புதம் செய்த இராகவேந்திரர் மாஞ்சாலியை பெற்றார்.



இச்சமயம் பிச்சாலிக்கு வந்த குருதேவர் அதன் இயற்கை அழகிலும் ,

அப்பணாச்சாரியரின் அப்பழுகற்ற பக்தியாலும் மகிழ்ந்தார்.

அப்பணாச்சாரியாரும் இராகவேந்திரரை தனது குருவாக ஏற்றுக்

கொண்டார். துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆகி துங்கபத்ராவானது

போல இராகவேந்திரரும், அப்பணாச்சாரியரும் இனைந்து ஹரி பக்தியை

பரப்பினர். குருதேவர் மந்திராலயத்தில் வசித்து வரும் போது பிச்சாலி

வருவார் அவர் கல்மேடையில் அவர் அமர்ந்திருக்க, அவரது

திருப்பாதங்களில் அப்பணாச்சாரியார் அமர்ந்து சேவை செய்வார். இருவரும்

பகவத் விஷயத்தில் ஈடுபடுவர். இவ்வாறு 13 வருடங்கள் இருவரும் ஹரி

பக்தியை பரப்பி வந்தார்கள். குருதேவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும்

நாள் வந்தது, அப்பணாச்சாரியார் இருந்தால் தன்னை அனுமதிக்க மாட்டார்

என்று அறிந்திருந்த இராகவேந்திரார் மத்வசத்சங்கத்திற்கு சென்று

வருமாறு அனுப்புகின்றார். மனதில்லையானாலும் செல்லுகின்றார்

அப்பண்ணாச்சாரியார்.



பின்னர் பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில்ஆழ்ந்தார். அவரது

கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும்

வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார்.

இராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக்

கடைசியாகக் கண்டு விடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார்

அப்பணாச்சாரியார்.



வழியில் துங்கபத்ரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை

மனதில் நினைத்துக்கொண்டு, சமஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு,

நதியில் இறங்கி ஓடிவருகிறார். சங்கரர் அழைத்ததும் நதியில் பாதம் பதித்து

வந்த பத்மபாதர் போல இக்கரை வந்தார் அப்பணாச்சாரியார், அவர் அங்கு

வந்த போது பிருந்தாவனத்தின் மேல் கடைக்கல் வைக்கப்பட்டு

கொண்டிருந்தது. ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார்.

அப்பண்ணாச்சாரியார்ன் பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு

எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க

முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுக்கின்றது.

ஆனால் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து

“ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும்

உரத்த ஒலி வெளிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நான் உனக்கு

காட்சி தருவேன் என்று வாக்கு கொடுக்கின்றார் இராகவேந்திரர்.



இராகவேந்திரர் பிருந்தாவனஸ்தர் ஆன பின்னும் தினமும்

பிச்சாலியிலிருந்து மந்திராலயம் வந்து குருதேவரை வணங்கிச்செல்வதை

கடமையாக கொண்டிருந்தார்.மழையிலும் வெள்ளத்திலும், துங்கபத்ரையில்

தன்
நண்பர் அலைந்து திரிவதைக்கண்டு இராகவேந்திரர் பிச்சாலியில் ஜபாட

கட்டேயில் ஒரு ஏக சிலா பிருந்தாவனம் அமைக்குமாறும் அங்கு வந்து தான்

காட்சி தருவதாகவும் அருளினார். அப்பணாச்சாரியார் அமைத்த ஏல சிலா

பிருந்தாவனத்தில் ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் குருதேவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக