ஞாயிறு, 16 மார்ச், 2014

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்



1. கடவுள் ஒருவரே. அவர்அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

2. புலால் உணவு உண்ணக்கூடாது.

3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

7. பசித்தவர்களுக்கு  சாதி,  மதம்,  இனம்,  மொழி  முதலிய  வேறுபாடு  கருதாது உணவளித்தல் வேண்டும்.

8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

10. மத வெறி கூடாது .

எம்மத  நிலையும்  நின்  அருள்  நிலையில்  இலங்குதல்  அறிந்தனன்  எல்லாம்  சம்மதம் ஆக்கிக்  கொள்கின்றேன்  அல்லால்  தனித்து  வேறு  எண்ணியது  உண்டோ?  செம்மல் உன்பாதம்  அறிய  நான்  அறியேன்  சிறிதும்  இங்கு  இனித்துயர்ஆற்றேன்  இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய்

— திருவருட்பா , ஆறாம் திருமுறை ,3639


அதாவது  எந்த  சமயத்தின்  நிலைப்பாட்டையும்,  எல்லா  மத  நெறிகளையும்  சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

5. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

7. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

சனி, 15 மார்ச், 2014

சர்வ தோஷ நிவாரணமந்திரம்

                              ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்


‘ஓம் நமோ பகவதே விஷ்ணவே 

ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே 

சர்வா பீஷ்ட பலப்ரதாய 

சகல  துரித நிவாரினே 

சாளக்ராமாய  ஸ்வாஹா’ 



இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு

ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச்

செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து

கொள்ளலாம்.

குபேர சிந்தாமணி மந்திரம்


                                                             

                     




மந்திரம்நம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பல

வகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. அவை ஒருவரி மூலம், மூலமந்திரம்,

காயத்ரி மந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று

இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர்

சொன்ன சிந்தாமணி மந்திரம்.

 கேட்டதைத் தரும் சிந்தாமணி என்ற பழமொழி வழக்கத்தில்  இருக்கிறது.

அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி

முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக

பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள்.

சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து தனம் சேர்ப்பார்.


ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக 

கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி 

ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே 

ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே

தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா! 


பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதி படிப்பதாலும் தாமிரத்தகட்டில்

குபேர சக்கரமும் எழுதி ஐங்காயத்தைப் பூசி அதிகாலையில் ஜெபம் செய்து வர

வீடும், தொழிலகமும் அபரிமிதமான செல்வத்தைச் சேர்க்கும் என்பது

பெரியோர் வாக்கு- ரத்தின கோசர நூல்.

லட்சுமி நரசிம்மர் மந்திரம்

லட்சுமி நரசிம்மர் 




சிலரது வாழ்வில்பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள்வாட்டி

வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு

மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது

போன்ற சமயங்களில் சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில்

நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.


ஓம் நமோ நாரஸிம்ஹாய

வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே 

வஜ்ர தேஹாய வஜ்ராய 

நமோ வஜ்ர நகாய ச 


முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில்

இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய்,

பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை

ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து

நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில்

தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.


வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில்

நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18

முறை உச்சரித்து வர வேண்டும்.அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது

சிறந்த பலனை கொடுக்கும் 

சிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி

சிவன் மலை :

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில்பெட்டியில்சொம்பில்தண்ணீர்

வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என

அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய

தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு

அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும்

பலிவாங்கிவிட்டது.



அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும்

அதிகமானது. அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு

காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு

மார்க்கெட்டில் விற்பனையானது.




முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச்

சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு

கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல

இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம்

வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது. அதே போன்று மற்றொரு பக்தரின்

கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்

பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100

ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக

புழக்கத்தில் உள்ளது.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின்கனவில்வந்து அரைப் பவுன்

தங்கத்தை வைத்து பூசை செய்யச்சொன்னதாம். தங்கத்தின்விலை

தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். மற்றொரு பக்தரின் கனவில் வந்த

முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே

தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய்

விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து

அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது .



தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில்

தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே

அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச்

சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து

சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர்.


வெள்ளி, 14 மார்ச், 2014

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்சரித்திரச்சுருக்கம்



மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில்

அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று

வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு.

அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும்

வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற

ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார்.



அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன்

என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

குமரகுருபரர் ஐந்தாண்டு வரையிற் பேச்சின்றி ஊமைபோல இருந்து வந்தனர்.

அதுகண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச்

சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும்

பாடுகிடந்தனர்.



முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல்பெற்றுக்

கல்வியிலும் சிறப்புற்றனர். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப் பெற்ற

இவர், அப்பெருமான் விஷயமாகக் கந்தர் கலிவெண்பா என்ற பிரபந்தத்தைப்

பாடினார்.அப்பால் தம் ஊரிலெழுந்தருளியுள்ள ஸ்ரீ கைலாசநாதர்மீது

கைலைக் கலம்பகம் என ஒரு பிரபந்தம் இயற்றினார். இவருக்குக்

குமாரசுவாமிக் கவிராயரென ஒரு தம்பியார் இருந்தனர்.


குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞானசாத்திரங்களையும்

திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார்; மருவுக்கு வாசனை

வாய்த்தாற்போன்று பக்தி ஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி

வளரத் தொடங்கின. அப்பால் பல சிவ தலங்களுக்கும் சென்று சிவதரிசனம்

செய்யத்தொடங்கினர். மதுரையிலே சில காலம் தங்கியிருந்தார். அப்போது

ஸ்ரீ மீனாட்சியம்மையின் திறத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில்

மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில்

அரங்கேற்றினார்.



அதனை அரங்கேற்றுகையில்ஸ்ரீமீனாட்சியம்மையே குழந்தையுருவாக

எழுந்தருளி வந்து கேட்டு மகிழ்ந்தனரென்றும், குமரகுருபரர்முத்தப்

பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த

முத்துமாலை யொன்றை எடுத்து இவருக்கு அணிந்துவிட்டு

மறைந்தனரென்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத்தமிழைக் கேட்டு மனமுவந்த

திருமலை நாயக்கர் குமரகுருபரருக்கு பலவகையான ஸம்மானங்களை

அளித்து வழிபட்டனர். குமரகுருபரர் பின்னும் சிலகாலம் மதுரையிலே தங்கி

மதுரைக்கலம்பக மென்னும் பிரபந்தத்தை இயற்றினார். பிறகு சோழநாட்டு

ஸ்தலங்களைத் தரிசிக்கத் தொடங்கித் திருவாரூருக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ

தியாகப்பெருமானைத் தரிசித்துக்கொண்டு சிலகாலம் இருந்தனர்.



அக்காலத்தில் திருவாருர் நான்மணிமாலை யென்னும் பிரபந்தத்தை இவர்

இயற்றினார்.சிவஞான வுபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு

வரவர அதிகமாயிற்று. தமக்குரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து

சரண்புகவேண்டுமென்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில்

திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் 4-ஆம் பட்டத்தில்

குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் சிவஞானச்

செல்வராக இருப்பதை யறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில

குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியரென்பதை இவர் தேர்ந்தனர்.



அப்பால் தமக்குத் துறவுநிலை யருள வேண்டுமென்று அத்தேசிகர்பால்

குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் ஸ்தல யாத்திரை

செய்துவரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார்

காசியாத்திரை செய்துவரும்படி கட்டளையிட்டனர். காசிக்குச் சென்று

வருவதில் நெடுங்காலம் செல்லுமேயென்று கவன்ற குமரகுருபரரை

நோக்கிச் சில காலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.



ஞானாசிரியர் கட்டளைப்படி சிதம்பரத்துக்கு இவர் பிரயாணமாகி இடையே

ஸ்ரீ வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே

கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி விஷயமாக

ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப்

பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில்

சிதம்பர மும்மணிக்கோவையென்னும்பிரபந்தம்இவரால்இயற்றப்பெற்றது.

அதில் முதற்செய்யுளில்காசிக்குச்செல்வதில்உளவாகும்துன்பங்களையும்

சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் ”காசியினிறத்த

னோக்கி” (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார்.



அவ்வடிகள், தம்மை ஆசிரியர் காசிக்குச் செல்லப்பணித்ததும் அதன்

அருமையைத்தாம் விண்ணப்பித்துக் கொண்டபோது சிதம்பரவாசம்

செய்யும்படி கட்டளையிட்டதுமாகிய நிகழ்ச்சிகளின் நினைவிலிருந்து

எழுந்தனவென்றே தோன்றுகிறது.

சிவநேசச் செல்வர்களும் தமிழறிவுடையவர்களுமாகிய சில

அன்பர்கள், ”யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச்

செய்யுட்கள் பெரும்பாலும் ஜைன சமயச் சார்புடையனவாக விருத்தலின்,

அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக ஸ்ரீ நடராஜப் பெருமான்

விஷயமாக செய்யுட்களை இயற்றித்தர வேண்டும்” என்று பிரார்த்திக்க இவர்

அங்ஙனமே சிதம்பர செய்யுட் கோவை யென்னும் பிரபந்தத்தை இயற்றி

அளித்தார்.



இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே நீதிநெறி விளக்க மென்னும்

நீதிநூலும் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்றுதோற்றுகின்றது.

அந்நூலுக்குச் சிதம்பரம் நடராஜப் பெருமானது துதியை முதலிற் காப்பாக

அமைத்திருத்தல் இதற்கு ஓர் ஆதாரமாகும். திருமலைநாயக்கரது

வேண்டுகோளின்படி மதுரையில் இருந்தபொழுதே இது பாடப்பெற்றதென்றும்

கூறுவதுண்டு.



சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்துவந்த குமரகுருபரர் பின்பு தம்

ஞானதேசிகர்பாற் சென்று தம்முடைய வேட்கையை மீண்டும்

விண்ணப்பித்துக் கொண்டனர். இவருடைய பரிபக்குவத்தை யறிந்து

ஞானதேசிகர் இவருக்குக் காஷாயம் உதவினர். அதுமுதல் இவர் குமரகுருபர

முனிவரென வழங்கப் பெறுவாராயினர். அப்பொழுது தம் ஞான தேசிகர்

விஷயமாகப் பண்டார மும்மணிக் கோவை யென்ற பிரபந்தம் ஒன்றை

இயற்றினர்.


அப்பால் ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய

கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக்

கவர்ந்தார். அப் பாதுஷாவின்தாய்மொழியாகியஹிந்துஸ்தானியை

விரைவில் அறிந்துகொள்ள வேண்டுமென்றெண்ணிச்சகலகலாவல்லி

மாலை யென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார்.

கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப்

பாதுஷாவினிடம் பேசிப் பழகினார்.



அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின்படியே இவர் காசியில்

இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார்.

(இங்கே “பாதுஷா” என்று குறிக்கப் படுபவர் இஸ்லாமிய கொடுங்கோலன்

ஔரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ. பலமொழிகளில்

வித்தகராகவும், நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப் பட்டவராகவும்

விளங்கிய பட்டத்து இளவரசர் தாரா ஷுகோ இந்துமதத்தின் பால் ஆர்வமும்,

மதிபும் கொண்டிருந்தார். காசியின் பண்டிதர்களிடம் உபநிஷதங்கள்

உள்ளிட்ட பல நூல்களை சம்ஸ்கிருதத்திலேயே கற்றுத் தேர்ந்து, அவற்றை

பாரசீக மொழியில் மொழிபெயர்க்கவும் செய்தார்.



பிற்காலத்தில் மேற்குலகில் இந்து ஞானத்தின் பரவலுக்கு இந்த

மொழியாக்கங்களே பெரிதும் உதவின. அடிப்படைவாதத்திற்கு

எதிரான பிரகடனமாக “உலகம் முல்லாக்களின் சத்தங்களில் இருந்து

விடுதலை பெறட்டும்” என்ற வாசகத்தை உரைத்த தாரா ஷுகோ

“இஸ்லாமுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக” குற்றம் சாட்டப்பட்டு,

அன்றைய முகலாய அரசின் காஜிகள், மவுல்விகளால் ஷரியத் சட்டப் படி

மரண தண்டனை விதிக்கப் பட்டு, ஔரங்கசீபின் அரசாணையால் கொல்லப்

பட்டார்).



குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த ஸ்ரீ விசுவலிங்கப்

பெருமனை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து

நைமித்திகங்களும் குறைவற நடக்கும்படி செய்தார். கேதார கட்டத்திலுள்ள

கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைந்திருந்தன ரென்றும் குமரகுருபர

முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலய முதலியன கட்டுவித்து

நித்திய டைமித்தியங்கள் நடத்தச் செய்தனரென்றும் இன்றும் ஆகம விதிப்படி

தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன வென்றும்

சிலர் கூறுவர்.



குமரகுருபர முனிவரர்காசியில்தங்கியிருந்த மடத்திற்குக்குமாரசாமி

மடமென்று பெயர். அங்கே இவர்சிவயோகம்செய்து கொண்டு

வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக்

கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த

மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி

பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம

பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும்,

கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில்

இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.

குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தருமபுரம் வந்து ஞானாசிரியரைத்

தரிசித்து மீட்டும் காசிக்கே சென்று வாழ்ந்து விளங்கியிருந்து ஒரு வைகாசி

மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திருதியையிலே சிவபெருமான் திருவடி நீழலிற்

கலந்தனர்.

குமார சஷ்டி விரதம்



முருகனைத்தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள்

மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில்

வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார

சஷ்டி விரதம் எனப்படும்.


கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி'

என்றும், `ஆனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். ஆனந்த

சுப்பிரமணிய பூஜை: ஆனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர்

முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம்.



திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த (நாக)

சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.

முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம்.அல்லது, இணைந்த இரு

பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த

முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும்

விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது.

இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது.



இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை

வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள்

புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும்

நம்புகின்றனர்.