சனி, 15 மார்ச், 2014

சிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி

சிவன் மலை :

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில்பெட்டியில்சொம்பில்தண்ணீர்

வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என

அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய

தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு

அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும்

பலிவாங்கிவிட்டது.



அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும்

அதிகமானது. அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு

காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு

மார்க்கெட்டில் விற்பனையானது.




முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச்

சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு

கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல

இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம்

வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது. அதே போன்று மற்றொரு பக்தரின்

கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்

பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100

ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக

புழக்கத்தில் உள்ளது.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின்கனவில்வந்து அரைப் பவுன்

தங்கத்தை வைத்து பூசை செய்யச்சொன்னதாம். தங்கத்தின்விலை

தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். மற்றொரு பக்தரின் கனவில் வந்த

முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே

தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய்

விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து

அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது .



தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில்

தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே

அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச்

சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து

சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக