செவ்வாய், 30 அக்டோபர், 2018

நம்பினால் நடத்திக்காட்டும் ஜீவ நாடி அருள்


முழுமையாக 100% முருகன் மீது நம்பிக்கை வைத்து ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு மிகப்பெரிய அதிசய மாற்றங்கள் நடந்து வருவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நாடி ஜோதிடம் என்றாலே ஏமாற்று வேலை என்பது பலரின் கசப்பான அனுபவம். ஆனால் ஜீவ நாடியை தாங்கள் பார்த்து சலித்துப் போன நாடி சோதிடத்தோடு ஒப்பிட்டு  தவறாக நினைக்காமல் முருகனே உரைக்கும் வாக்கு என்று நினைப்பவர்கள் மிக மிகக் குறைவுதான். கலியுகத்தில் இறைவன் உண்டு என்று ஏற்றுக் கொள்வதே அபூர்வமாகும் போது ஜீவ நாடியில் இறைவன் வாக்கா? நிச்சயம் இருக்கவே இருக்காது என்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். அப்படி அவ நம்பிக்கையோடு ஜீவ நாடி பார்க்க வருவது தேவையில்லாத கால விரையம். இன்னும் சிலர் அவ நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்டுவிட்டு முருகப்பெருமான் உரைத்த வாக்குகள் பலிக்கத் துவங்கியவுடன் நம்பிக்கை கைவரப்பெறுகின்றார்கள். எனவே  ஜீவ நாடி கேட்கும்போது முழு நம்பிக்கையுடன் சென்றால் நிச்சயம் நடக்கும். எல்லாமே பொய்யில்லை அதே சமயத்தில் எல்லாமே உண்மையுமில்லை. ஆனால் உரிய நேரம் வரும்போது தானாகவே உண்மையான ஜீவ நாடியைத் தேடிப் போய் பலன் பெற்றுவிடுவார்கள் என்பது திண்ணம். அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திற்கு முதன் முதலாக ஜீவ நாடி கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஒரு சாதாரண நிலையிலேயே அனுகுகின்றார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து அது அனைத்தும் தனது வாழ் நாளில் நடக்கும் போதுதான் உண்மையை உணர்கின்றார்கள். பின்பு நிரந்தர பக்தர்களாக மாறி ஜீவ நாடியில் உத்தரவு கேட்காமல் எதையும் செய்வதில்லை எனும் நிலைக்கு வந்து இறுதியில் முருக பக்தர்களாகவே மாறிவிடுகின்றார்கள். அந்த அளவு முருகப்பெருமானும் சித்தர்களும் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பல்வேறு திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார்கள் என்பது 100% சத்தியமாகும். உண்மையான ஜீவ நாடிகள் அபூர்வம்தான் என்றாலும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வரும் பலன்கள் அப்படியே பலிப்பதும், ஜீவ நாடியில் சொன்ன ஆலய வழிபாடுகள் செய்த உடனேயே ஒரு மாற்றம் வருவதும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம். எனவே பிராப்தம் இருப்பின் உண்மையான ஜீவ நாடி கேட்கும் வாய்ப்பு அமையும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 29 அக்டோபர், 2018

இனிய அறிவிப்பு


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ளது மந்தை எனும் கிராமம். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் இருப்பதே மிகவும் வலிமைமிகு ஜீவ நாடி இருக்கும் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடமாகும். அங்கு மிகுந்த நம்பிக்கையுடன் பலர் வந்து ஜீவ நாடி கேட்டுச் செல்கின்றார்கள். இப்போது ஜீவ நாடி படிக்க நம் குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் அதிகமாக நேரம் ஒதுக்கி மக்களுக்கு ஜீவ நாடி படித்து வருகின்றார்கள். பக்தர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஜீவ நாடி வாசிக்க வேண்டும் என்பது நம் குரு நாதரின் விருப்பமாகும். பணத்தை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளாதவர் நம் குரு நாதர் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இப்படி ஜீவ நாடி பார்க்க பலமுறை தொடர்பு கொண்டும் பார்க்க இயலாமல் போனவர்கள் 9865848488 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஜீவ நாடி கேட்டுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற இனிய அறிவிப்பை முருகனது ஆசியோடும் அகத்திய முனிவரது அருளோடும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அதேபோல் ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு முதலில் ஜீவ நாடி மீதும் முருகன்மீதும் நம் குரு நாதர் மீது நம்பிக்கையோடு வருவது மிக மிக அவசியம். ஏதோ சந்தேக உணர்விலும் நம்பிக்கையில்லாமலும் ஜீவ நாடி கேட்க வந்தால் பெரிய அளவில் பலன் தருவதில்லை. முன்பதிவு செய்ய வழி கொடுங்கள் என்று பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதிற்கினங்க இங்கு தொலைபேசி எண் கொடுக்கப்படுகின்றது. இந்த எண் நம் சுவாமிகளின் அனுக்க தொண்டரது எண் ஆகும். எனவே முன் பதிவிற்கு மட்டுமே இந்த எண்ணில் அழைக்கும்படியும் மற்ற தேவையில்லாத கேள்விகளைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அதேபோல் இது வரை ஜீவ நாடி மூலம் பலன் அடைந்தவர்களும் பலன் அடைந்து வருபவர்களும் ஏராளம் என்பது கண்கூடு. ஜீவ நாடி கேட்க வரும் முன் ஜீவ நாடி என்றால் என்ன? என்றும் காண்ட நாடிக்கும் ஜீவ நாடிக்கும் உள்ள வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டு வந்தால் தங்கள் துன்பங்களைத் தீர்க்கும் விடைகளும் வழிகளும் கிட்டும் என்பது திண்ணம். எனவே இந்த கௌமாரபயணம் வலைப்பதிவில் உள்ள மற்ற ஜீவ நாடி குறித்த கட்டுரைகளை நன்கு வாசித்தாலே ஜீவ நாடியின் மகிமைகள் தெள்ளென விளங்கும். அதேபோல் ஜீவ நாடி பரிகாரங்கள் என்பது பெரும்பாலும் ஆலய வழிபாடுகளாகவே இருக்கும் என்பதும் வேறு எந்த பரிகாரங்களும் ஜீவ நாடி படிக்கும் குருவோ அல்லது ஜீவ நாடிபடிக்கப்படும் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திலோ செய்து தருவது கிடையாது என்பதும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசிய செய்தியாகும். எனவே ஜீவ நாடி கேட்டு நலன் அடையும் பக்தர்கள் 9865848488 என்ற எண்ணில் வியாழன் அன்று மட்டும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கின்றோம்.
                 ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 27 அக்டோபர், 2018

ஜபம் செய்ய சொல்லி குருவின் வடிவில் ஜீவ நாடியுடன் தோன்றிய முருகப்பெருமான்


அடியார் ஒருவர்  ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும்,  நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளுக்கும் சேவை செய்து வருகிறார். நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடமே முருக தீட்சை பெற்று  முருக உபாசனை செய்து வருகிறார். இவருக்கு  ஒரு அதிசயம் நடந்தது. விடியற்காலையில் எழுந்து ஜபம் செய்வது இவரது வழக்கம். நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளும்  அவ்விதமே செய்யச்சொல்லி இருக்கிறார். விடியற்காலையில் எழுந்து தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து தீட்சைகொடுக்கும் போது வலது செவியில் சொல்லப்பட்ட மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என்பது இவருக்கு உபதேசம். அதை மாறாமல் செய்து வந்தார். அன்று அதிகாலை ஜபம் செய்ய எழும் முன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இவரைத் தட்டி எழுப்பி எழுந்து ஜபம் செய் எனச் சொல்ல இவரும் அவ்விதமே செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகரும் இவர் அருகிலேயே ஜீவநாடி சுவடியுடன் அமர்ந்து கொண்டு ஜபம் செய்திருக்கிறார். ஜபம் முடிந்த பின் விடிந்துவிட்டது எனத் தெரிந்து அருகில் பார்க்க அங்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் இல்லை. இது கனவும் இல்லை. நன்கு விழிப்பு நிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பின் எப்படி இது சாத்தியம் என எண்ணிய அடியவர்ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் இந்த தகவல்களைச் சொன்னார். அப்போது அந்த நேரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் தனது வீட்டில்தான்இருந்ததாகவும் அன்று எங்குமே செல்லவில்லை எனவும் கூறி இது அந்த ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்களாகத்தான் இருக்கும் என்று எண்ணி உடனே முருகப்பெருமானை வேண்டி ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கேட்கலாம் என்ற யோசனை சொன்னார். சொல்லி முருகனைப்பூஜித்து ஜீவ நாடி சுவடியைப்பிரிக்க  ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் வந்தது முருகப் பெருமானே என்றும், உன் வீட்டின் வட கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு துளசி செடி முளைத்து இருக்கிறது என்றும்அதை வெள்ளி தோறும்விளக்கிட்டு பூஜித்து வா என்றும்,வீட்டில் சுவரில் மாட்டி வைத்துள்ள படம் ஒன்று விழுந்து சுக்கு நூறாக உடைந்தது என்றும் அதை சரி செய்து கொள் என்றும் முருகப் பெருமான் ஜீவ நாடியில் உரைத்ததுவும் அவருக்கு நம்ப முடியாப் பேரதிர்ச்சியாக இருந்த்து. முருகப் பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் இவர் வீட்டிற்கு சென்றது உண்மை என உறுதிப்படுத்தவே மேலே உள்ள தவல்களைச் சொல்லி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் துளசி செடி முளைத்து இருப்பதும், சுவாமி படம் சுக்கு நூறாக விழுந்து உடைந்து இருப்பதும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகருக்கு தெரியாது. மனத் தூய்மையோடு முருகனுக்கும் முருகன் அடியார்களுக்கும் சேவை செய்து பூஜித்து வந்தால் அந்த முருகன் இவ்விதமெல்லாம் திருவிளையாடல்களை நடத்துவார் என்பதும் நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகன் தோன்றி வாக்குரைக்கிறார் என்பதும் உறுதியாகிறது.


                                       ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!           

வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஜீவ நாடியில் எழுத்துக்களைக் கண்டு அதிசயித்த மருத்துவர்


சித்தர்கள் ஆசியாலும் முருகப் பெருமானின் கருணையாலும், நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களின் கண்களுக்கு காட்டி அவர்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. வெறும் ஓலைச்சுவடியில் தூய தமிழிலேயே எழுத்துக்கள் தோன்றி நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளின் கண்களுக்கு மட்டுமன்றி உண்மையான பக்தியுடனும் உள்ளன்புடனும், உறுதியான நம்பிக்கையுடனும் வருபவர்களுக்கு இந்த எழுத்துக்களை அவனிடம் காட்டு என்று முருகப் பெருமான் உத்தரவிடுவார். இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த எழுத்துக்களை பார்த்து படித்துள்ளனர்.  அந்த வகையில் ஒரு மருத்துவர் ஒருவர் ஜீவ நாடி பார்க்க வந்தார். வழக்கம்போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் முருகப்பெருமானை வணங்கி ஜீவ நாடி வாசிக்கத் தொடங்கினார். மருத்துவர் அவருக்காக கேட்க வரவில்லை. அவரது நண்பர் ஒருவரின் உடல் நோய் குறித்த குழப்பத்தில் இது கர்மவினையாக இருக்குமோ என்று எண்ணி ஜீவ நாடி குறித்து கேள்விப்பட்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் நாடி கேட்க வந்துள்ளார். நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பலன்களை சொல்லிக்கொண்டே வந்த ஜீவ நாடி திடீரென ஒரு உத்தரவைத் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மருத்துவரிடம் சொல் வந்து அவரது நண்பருக்கு எந்த இடத்தில் நோய் என்று அவரது கண்களுக்குத் தெரியும்படி காட்டுகின்றேன் என்றார் முருகப்பெருமான் ஜீவ நாடியில். சரி என்று மருத்துவரும் வந்து ஜீவ நாடியைப் பார்க்க அதில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது போல் தோன்றி மருத்துவரை திக்குமுக்காடச் செய்தது ஜீவ நாடி. ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் மூழ்கிப்போன மருத்துவர் தனது நண்பரின் நோய் அதுதான் என்று ஏற்கனவே அறிந்திருப்பதை இந்த ஜீவ நாடி காட்டிவிட்டதே என்று வாய்விட்டு சொல்லி முருகனைத் துதித்துச் சென்றார். அதுமட்டுமல்ல அந்த நோய் தீரும் காலத்தையும் நோய் தீரும் வழியையையும் ஜீவ நாடி உரைத்ததுதான் மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. வெறும் யட்சினி வசியம் வைத்துக் கொண்டு கடந்த காலம் மட்டும் சொல்லும் ஜீவ நாடி என்று விமர்சிப்பவர்களுக்கு முருகன் இது உண்மையான நாடி என்று உணர வைக்க நடத்திய திருவிளையாடல் என்றே தோன்றுகின்றது. பலன் கேட்க நாம் ஜீவ நாடியை அனுகாமல் நமது வாழ்வை வசந்தமாக்கும் வழிகளை ஜீவ நாடியில் தெரிந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும். வருவோர், போவோருக்கெல்லாம் சுவடியை காட்டாதே என்றும் எனது பக்தர்களுக்கும் எனது சீடர் அகத்தியர் பக்தர்களுக்கும் மட்டுமே எழுத்து வடிவில் காட்சியளிப்பேன் என்றும் முருகப் பெருமான் உரைத்திருக்கிறார். 
                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

முருக பக்தர்கள் 4 வது மாநில மாநாடு

                                                         
                                           அனைவரும் வருக.... அருள் பெறுக....

பதிப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம்...


#வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் எண்ணற்ற பக்தி இலக்கிய பாடல்களை ஓலைச்சுவடிகள் மூலம் நமக்கு அருளிச் செய்துள்ளார்கள். சுவாமிகளின் ஒப்பற்ற இலக்கியப் படைப்புகளை ஓலைச் சுவடிகளிலிருந்து கணினியில் பதிவேற்றும் பணி தற்பொழுது நமது சிரவையாதீனத்தின் முயற்சியால் நடைபெற்று வருகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அறிஞர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நமது சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் தலைமையில், கௌமார மடாலயத்தில் 16.09.2018 அன்று நடைபெற்றது.

க்கூட்டத்தில்
மேனாள் பேராசிரியர். முனைவர் சு. வெங்கட்ராமன் அவர்கள், மதுரைப் பல்கலைக்கழகம்.
மேனாள் பேராசிரியர். முனைவர். ஐ.கே.சுப்பிரமணியம் அவர்கள், கோவை அரசு கலைக் கல்லூரி.
இணைப் பேராசிரியர். முனைவர் சதீசு அவர்கள், சென்னை - உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்.
முனைவர் பட்ட ஆய்வாளர் சு. கலைவாணி ஆகியோர்கள் கலந்துகொண்டு பதிப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இக்குழுவின் முயற்சியால்
#வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் அருளிய நெல்லைப் பதிகங்கள் என்னும் 1300 பாடல்கள், ஓலைச் சுவடிகளிலிருந்து கணினியில் பதிவேற்றப்பட்டு தற்பொழுது 400 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டுள்ளது, அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடைபெறயிருக்கும் மாநில முருக பக்தர்கள் மாநாட்டில் இந்நூல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய 45000 பாடல்கள் ஏற்கனவே அச்சேற்றப்பட்டு, பல்வேறு தொகுதிகளாக புத்தகவடிவில் உள்ளது. கோவை - கௌமார மடாலயம், தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையத்தில் கிடைக்கும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

பேரூர் ஆதீனம் கௌமார மடாலயம் வருகை

பேரூர் ஆதீனமாக தற்பொழுது அருளாட்சி ஏற்றுள்ள சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் 22.09.2018 சனிக்கிழமை அன்று நமது கௌமார மடாலயத்திற்கு வருகை புரிந்தார்கள். ஆதீனம் அவர்களுக்கு மடாலயம் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது, கௌமார மடாலய ஆதி குருமுதல்வர்களுக்கு ஒளி வழிபாடு செய்து மடாலய அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அதில் சில படங்கள்.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!