திங்கள், 22 டிசம்பர், 2014

கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்:


கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்




1.ஆறுமுகம்பனிரெண்டு கரங்களுடன் – அவினாசி, பூண்டியிலும்,
2.ஐந்து முகம் எட்டு கரங்களுடன் – பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3.நான்கு முகம்எட்டு கரங்களுடன் – திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,
4.மூன்று முகம் ஆறு கரங்களுடன் – கோபி, காசிபாளையம்குமரன்கரட்டிலும், 5.இரண்டு முகம் நான்கு கரங்களுடன் – சென்னிமலையிலும்,
 6.ஒருமுகம் – தண்டாயுதபாணியாக – பழனியிலும் நின்று

அருள்செய்யும்ஸ்ரீமுருகப்பெருமானின்மேற்கண்ட ஆறு தலங்களும்கொங்கு
நாட்டின்ஆறுபடை வீடுகளாகும்.



கொங்கு மண்டலத்தில் 6 மலைகளிலும் 6 கோயில்களில்ஆறுமுகன்

அருள்புரிவதால்இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள்என்பர். வைகாசி

விசாகத்தன்று காலை சென்னிமலை முருகன்; முற்பகல்சிவன்மலை

முருகன்; உச்சிவேளை கைத்தமலை வேலன்; மாலை அருள்மாலைமுருகன்;

அஸ்தமன சந்தியில்சீனாபுரமலை முருகன்; அர்த்த ஜாமத்தில்திண்டல்மலை

வேலவன் என ஒரேநாளிலேயே அனைவரையும்தரிசித்துவிடலாம். இதை

ஏகதினவழிபாடு என்பர். இதனால்நோயற்ற நீண்ட ஆயுள், நிறைந்த வாழ்வு,

பேரின்பம் பெறலாம்.



தமிழ்நாட்டில்அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல்இலங்கையிலும்

முருகனின்ஆறு கோயில்கள்விசேஷமாகக்கருதப்படுகிறது. இதை

முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர்

கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலிவேலி

என்பவையே அறுபடை வீடுகளாகப்போற்றப்பெறுகின்றன.


ஜீவ நாடியில்வந்த பேரதிசயம் ! ! !



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அந்த அம்மனுக்கு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

பிரதான அர்ச்சகர் மூலம் பூஜை செய்யப்பட்ட்து. அதன் படங்களைப் பார்த்து

அருள் பெருங்கள்.











சனி, 20 டிசம்பர், 2014

ஜீவ நாடியில் வந்த பேரதிசயம்

சென்ற பதிவின் தொடர்ச்சி:-



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அதில் அந்த அம்மன் காட்சி கொடுத்த வகையில் தன்னை

வெளிப்படுத்த அந்த அம்மன் செய்த திருவிளையாடல் இன்னும் மெய்

சிலிர்க்க வைக்கிறது. புற்று உள்ள இடத்தில் இருந்து சற்று அருகே திரு.ஜீவா

என்பவருக்கு ஒரு சிறிய பெண் ஒடுவது போல் தெரிந்து இருக்கிறது. யார்

ஓடுவது என்று பின் தொடர்ந்து சென்ற ஜீவா அவர்கள் திடீரென இந்த பெண்

மறைந்து விடுவதைக் கண்டு அதிசயப் படுவதற்குள் புற்றில் இருந்து

அந்த தெய்வம் வெளிப்பட்டிருக்கிறது. இதை உடனே ஜீவா அவர்கள் திரு.ராஜீ

அவர்களிடம் சொல்ல அதிசயம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திரு.ஜீவா

மற்றும்திரு.ராஜீஆகிய இருவரும்நமது ஞானஸ்கந்தர்ஜீவ நாடியை

தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல

ரகசியங்கள் வெளிவரும்.பொறுத்திருங்கள்.....

வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் பேரதிசயம்!


திண்டுக்கல்லில் இருந்து திரு.ராஜூ எனும் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடம் அடிக்கடி ஜீவ நாடி கேட்டு அதில் வந்தபடி செய்து

கொண்டு வந்தார். 17.12.2014 புதன் கிழமை அன்று திரு.ராஜீஅவர்களுக்கு ஸ்ரீ

ஞானஸ்கந்தர் நாடியில் பாலா மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. அதன்

பின்பு உனக்கு இனி அம்மன் திருவிளையாடல்கள் ஆரம்பம் என நாடியில்

உரைத்தார்


முருகப்பெருமான். 18.12.2014 அன்று அம்மன் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினாள்.

அவர் வசிக்கும் இடத்தின் அருகில் ஒரு புற்றில் இருந்து அம்மன் வெளிப்பட்டு

காட்சி கொடுத்துள்ளாள். அதன் படங்களை கௌமாரபயணம் வாசகர்களுக்கு

இங்கே தந்திருக்கிறேன். அடுத்து அந்த அம்மன் ஆலயம் கொள்வாளா அல்லது

என்ன நடக்கும் என்பதை ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியில் வரும் வாக்கின்படி

நடக்கும். அதன்ரகசியங்கள்இந்த கௌமாரபயணத்தில்வெளிவரும். இது

போல்  தினமும் ஏராளமான அதிசயங்களை நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி    

தனது ஜீவ நாடியின் மூலம் நடத்தி வருகிறார்.





திங்கள், 15 டிசம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 21




   முருகப் பெருமானை வேண்டி முதல் நாடி கேட்கின்ற பொழுது

அவருக்கு வயது 40. தனது திருமணம் நடக்க வேண்டும் என்ற

கோரிக்கையை மனதில் வைத்து நாடி கேட்க வந்திருக்கின்றார். பெரிய

அளவில் படிப்பேதும் படிக்கவில்லை, அரசு உத்யோகமும் கிடையாது.

வெளிநாட்டு வேலையும் கிடையாது. பெரிய சம்பளமும் கிடையாது. பெரிய

அந்தஸ்தும் கிடையாது. வயதும் 40 ஆகி விட்டது. இதுவரை பார்க்காத

ஜோதிடம் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள்

இல்லை. பலன் 0 (சைபர்) தான். அதனால்தான் என்னவோ முருகப்பெருமான்

பரிகாரம் ஏதும் சொல்லவில்லை. எனது ஆலயத்திற்கு நீ வந்துவிட்டாய்.


இதுவே பெரிய பரிகாரம் என்று முருகப்பெருமான் நினைத்து விட்டார்

போலும், தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார். காரியம் கைகூடிய

சூழலே இல்லை. நண்பர்களும், உறவினர்களும் இவரை கிண்டலடிக்க

ஆரம்பித்தனர். கிழவனான பின்பா இவன் கல்யாணம் பண்ணப் போகிறான்

என்று ஏசினர், பேசினர், இவர் ஓயவில்லை மனம் தளரவில்லை. முருகன்

விட்ட வழி என்று அனைவருக்கும் சவால் விட்டார். மாதம் தவறாமல்

அமாவாசை தோறும் 27 முறை வலம் வருவார். ஒரே ஒரு 27 முறை வலம்

வந்தவர்க்கு ஓராயிரம் காரியங்கள் நடந்தேறியது. ஆனால் இவர் ஓயாமல்

வலம் வருவார். காரியம் நடந்தபாடில்லை. ஓராண்டு கடந்தது.



இரண்டாண்டு கடந்தது. மூன்றாண்டும் கடந்தது. காரியம் நடக்கவில்லை.

தனது குலத்தைவிட்டு அடுத்த குலத்தில் பெண் எடுக்கலாம் என்று கூட

பேச்சு எழுந்தது. ஆனால் இவர் மறுத்து விட்டார். ஆண்டு 4ஆனது

நடந்தபாடில்லை காரியம். முருகனை வணங்கி வணங்கி பாதி சாமியார்

ஆகிவிட்டான் என்று பலர் தூற்றினார்கள். இவர் போற்றினார் முருகப்

பெருமானை, ஆண்டு ஐந்தானது அவருக்கு வயது 45 ஆகியும் திருமணம்

ஆகவில்லை. ஆனால் நடந்தது அதிசயம். இவர் மனதிற்கு பிடித்தமாதிரி

மாலை சூட்டினாள் மங்கை. காலம் கனிந்தது. கந்தன் சொன்னது போலவே

கச்சிதமாய் முடிந்தது. ஆனந்தம் இவர் வாழ்வில் அரும்பியது. அல்லி

நகையாடியவர்கள் வள்ளி மணாளன் வடிவேல் கந்தன் முருகனை வாயாற

துதித்தார்கள். ஜீவநாடியின் பெருமையை ஊருக்கு ஊர் பேசி மகிழ்ந்தார்கள்.

 

அவர் 40 வயதில் என்னை சந்தித்த பொழுது நாடி கேட்டவர் இடையில்

எதுவும் கேட்கவில்லை. முருகனும் உரைக்க வில்லை. ஆறு

மாதங்களுக்கு மேலாகியும் வாரிசுயோகம் இல்லையே என்று முருகனது

ஜீவநாடி பார்க்க வேண்டுமென்று கேட்டார். பார்த்துவிட்டு சென்றவுடன் 3

நாளிலேயே அய்யா எங்கள் காரியம் அப்படியே தடையாகவே இருக்கின்றது

என்று கேட்பவர்கள் மத்தியில் இவர் விதிவிலக்கு என்பதால் உடனே

இவருக்கு நாடி படித்தேன். அதில் பின்வரும் பாடல் வந்தது.



   “கைபிடித்த நங்கையுடன்

   நலமாக வளமாக

   நல்படி அது ஆக ஆசி!

   கருதரிக்கும் காலமது

   கச்சிதமாய் உண்டுண்டு

   ஊஞ்சலது சேவை நாளில்

   உமைபாலன் என்னை

   ஊஞ்சலது ஆட்டிவிட்டு

   உத்தரவு மருந்துண்டு  வா

   உருவாகும் போ கரு ஆசி!

   என்று ஞானஸ்கந்தர் உரைத்தார். ஒவ்வொரு வருடமும் வைகாசி

விசாகத்தன்று நமது ஞானஸ்கந்த மூர்த்தியின் உற்சவ சிலையை

ஊஞ்சலில் வைத்து தீட்சை பெற்ற 50 அடியார்களும் தாலாட்ட ஓதுவார்

திருமுருக ரமேஷ் அடிகளார் கௌமாரச் செல்லமடி.. அம்மான் முருகன்..

கௌமாரச் செல்லமடி அம்மான்… என்று தாலாட்ட பக்தர்கள் அதையே பின்

தொடர அந்த கந்தலோகமே இறங்கி வந்தால்போல் பூஜை நடக்கும்.



அப்போது உற்சவர் விக்கிரகத்தின் முகத்தில் ஒரு தேஜஸ் ஒளி பெருகும்.

அதை அனைவரும் கண்டு ஆனந்தம் கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு

அரோகரா.. எனும் கோஷத்தோடு பக்தி வெள்ளத்தில் திளைப்பார்கள்.

இவரை அந்த நாளில் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு ஊஞ்சலை

ஆட்டிவிட்டு உத்தரவு மருந்து எனும் திரவ வடிவில் பாயசம் போல்

தரப்படும். அதை அருந்தினால் கரு உருவாகும் என்று நாடியில் உரைத்தார்

நமது ஞானஸ்கந்த மூர்த்தி. உத்தரவு மருந்தில் ஏழு வித மூலிகை

கலந்து முருகனுக்கு நைவேத்யம் செய்து கொடுக்கப்படும். அந்த

மூலிகையை நாடியில் உரைப்பதும் முருகனே.




 முருகப் பெருமான் நாடியில் சொல்கின்ற மூலிகைகளை சுண்டக்

காய்ச்சிப் பாலுடன் கலந்து தம்பதியாக வரக்கூடிய

குழந்தையில்லாதவர்களுக்கு சரிசமமாக கணவன் மனைவி இருவருக்கும்

பங்கிட்டு யாரும் பார்க்காத வகையில் உள்ளுக்குள் அருந்த

சொல்லப்படுகிறது. அவ்விதம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு

அடுத்த வைகாசி விசாகம் வருவதற்குள் கரு தரிக்கும் யோகம்

ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கடுமையான தோஷங்கள், கர்ம வினைகள்

இருப்பதால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது வைகாசி விசாகம்

தவறாமல் உத்தரவு மருந்து அருந்த முருகப் பெருமான் உத்தரவிட்டுள்ளார்.



அதுபோலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்பட்டுள்ளது.

காரணமென்னவெனில் இங்கு முருகப்பெருமானே குழந்தை வடிவில்

எழுந்தருளியுள்ளார். அது மட்டுமல்லாமல் சுயம்பு வடிவில்

முருகப்பெருமான் தோன்றியிருக்கின்றார். நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்

இங்கு முருகப் பெருமான் பாதம் பட்ட இடம் என்று 15 ஆண்டுகளுக்கு

முன்னரே குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில்

உள்ள ஸ்ரீ ஜோதிஅக்பர் சுவடிகளால் படிக்கப்படும் மீனாட்சி நாடியில்

சித்தர்கள் பலர் கூடி தங்கம் செய்த இடம் என்றும், சூரபத்மன் வதத்திற்கு

முன்பே முருகப் பெருமான் எழுந்தருளிய இடம் என்றும், வள்ளி,

தெய்வானை திருமணத்திற்கு முற்பிட்ட முருகன் என்பதால் மயில் வாகனம்

அல்லாமல் யானை வாகனம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



இந்த மீனாட்சி நாடி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாடியாகும். அப்போதே

நமது ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் பெருமை

விளங்கும். அதுமட்டுமல்லாது 18 சித்தர்களும் அருவமாக முருகனுக்கு

பூஜை செய்ய வருவதும், முருகனின் 18 விழிகளில் இருந்து வரக்கூடிய

கருணைப் பார்வை இந்த ஆலயத்தின் மீது கந்தலோகத்திலிருந்து படுவதும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 அதைக் குறிக்கும் வகையில் 18 அடி வேல் பிரதிஷ்டை செய்யப்

பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் பாம்பு வடிவில் வந்து முருகப் பெருமானை

பூஜிப்பதும் மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்

இன்றும் அடிக்கடி நடப்பது கண்கூடு. ஆனால் அனைவர் கண்களுக்கும்

புலப்படுவது கடினம். ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்த

10 வயதுடைய அஸ்வத் கிருஷ்ணா என்ற சிறுவனுக்கு நமது ஆலய

கோபுரத்தின் மீது தங்கநிற வடிவில் மயில் மீது பெரிய ஒளி வடிவில்

உருவம் ஒன்று வந்து இறங்கியதைக் கண்டு அச்சிறுவன் அதிர்ந்து

கூறியது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்

குழந்தை வரம் வேண்டி நாடி கேட்ட அவர் உத்தரவு மருந்து வாங்கி

குடித்து அவர் மனைவியையும் குடிக்கச் செய்தார். அடுத்த வைகாசி

விசாகம் வருவதற்குள் நிறைமாத கர்ப்பிணி ஆகி தற்பொழுது அழகான

பெண் குழந்தைக்கு தாயாகி விட்டார். முதன் முதலாக அவருக்க்கு 40

வயதில் நாடி உரைத்த போது ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி என்று

அன்று உரைத்தது 100% அப்படியே சத்தியமாக பலித்தது. இந்த சம்பவம்

முருகப் பெருமான் திருக்கை வேலின் மீது ஆணையிட்டு உண்மை,

உண்மை, உண்மையை தவிர வேறேதுமில்லை என்பது அனைவரும்

அறிந்ததே.

                                 “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

திங்கள், 8 டிசம்பர், 2014


வலைப்பதிவு வாசகர்களுக்கு...

கீழே உள்ள பதிவுகளில் நமதுஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடி பற்றிய செய்திகள்

இடம்பெற்றுள்ளது. 

http://agathiyarvanam.blogspot.in/2014/03/lord-murugan-speaks-about-kallar-ashram.html

http://agathiyarvanam.blogspot.in/2014/03/promoting-agathiyar-siddhas.html



                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!


சனி, 6 டிசம்பர், 2014

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம் !



காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)

அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.


இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.

என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.


ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் எஎனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.


                                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் !