முருகப் பெருமானை வேண்டி முதல் நாடி கேட்கின்ற பொழுது
அவருக்கு வயது 40. தனது திருமணம் நடக்க வேண்டும் என்ற
கோரிக்கையை மனதில் வைத்து நாடி கேட்க வந்திருக்கின்றார். பெரிய
அளவில் படிப்பேதும் படிக்கவில்லை, அரசு உத்யோகமும் கிடையாது.
வெளிநாட்டு வேலையும் கிடையாது. பெரிய சம்பளமும் கிடையாது. பெரிய
அந்தஸ்தும் கிடையாது. வயதும் 40 ஆகி விட்டது. இதுவரை பார்க்காத
ஜோதிடம் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள்
இல்லை. பலன் 0 (சைபர்) தான். அதனால்தான் என்னவோ முருகப்பெருமான்
பரிகாரம் ஏதும் சொல்லவில்லை. எனது ஆலயத்திற்கு நீ வந்துவிட்டாய்.
இதுவே பெரிய பரிகாரம் என்று முருகப்பெருமான் நினைத்து விட்டார்
போலும், தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார். காரியம் கைகூடிய
சூழலே இல்லை. நண்பர்களும், உறவினர்களும் இவரை கிண்டலடிக்க
ஆரம்பித்தனர். கிழவனான பின்பா இவன் கல்யாணம் பண்ணப் போகிறான்
என்று ஏசினர், பேசினர், இவர் ஓயவில்லை மனம் தளரவில்லை. முருகன்
விட்ட வழி என்று அனைவருக்கும் சவால் விட்டார். மாதம் தவறாமல்
அமாவாசை தோறும் 27 முறை வலம் வருவார். ஒரே ஒரு 27 முறை வலம்
வந்தவர்க்கு ஓராயிரம் காரியங்கள் நடந்தேறியது. ஆனால் இவர் ஓயாமல்
வலம் வருவார். காரியம் நடந்தபாடில்லை. ஓராண்டு கடந்தது.
இரண்டாண்டு கடந்தது. மூன்றாண்டும் கடந்தது. காரியம் நடக்கவில்லை.
தனது குலத்தைவிட்டு அடுத்த குலத்தில் பெண் எடுக்கலாம் என்று கூட
பேச்சு எழுந்தது. ஆனால் இவர் மறுத்து விட்டார். ஆண்டு 4ஆனது
நடந்தபாடில்லை காரியம். முருகனை வணங்கி வணங்கி பாதி சாமியார்
ஆகிவிட்டான் என்று பலர் தூற்றினார்கள். இவர் போற்றினார் முருகப்
பெருமானை, ஆண்டு ஐந்தானது அவருக்கு வயது 45 ஆகியும் திருமணம்
ஆகவில்லை. ஆனால் நடந்தது அதிசயம். இவர் மனதிற்கு பிடித்தமாதிரி
மாலை சூட்டினாள் மங்கை. காலம் கனிந்தது. கந்தன் சொன்னது போலவே
கச்சிதமாய் முடிந்தது. ஆனந்தம் இவர் வாழ்வில் அரும்பியது. அல்லி
நகையாடியவர்கள் வள்ளி மணாளன் வடிவேல் கந்தன் முருகனை வாயாற
துதித்தார்கள். ஜீவநாடியின் பெருமையை ஊருக்கு ஊர் பேசி மகிழ்ந்தார்கள்.
அவர் 40 வயதில் என்னை சந்தித்த பொழுது நாடி கேட்டவர் இடையில்
எதுவும் கேட்கவில்லை. முருகனும் உரைக்க வில்லை. ஆறு
மாதங்களுக்கு மேலாகியும் வாரிசுயோகம் இல்லையே என்று முருகனது
ஜீவநாடி பார்க்க வேண்டுமென்று கேட்டார். பார்த்துவிட்டு சென்றவுடன் 3
நாளிலேயே அய்யா எங்கள் காரியம் அப்படியே தடையாகவே இருக்கின்றது
என்று கேட்பவர்கள் மத்தியில் இவர் விதிவிலக்கு என்பதால் உடனே
இவருக்கு நாடி படித்தேன். அதில் பின்வரும் பாடல் வந்தது.
“கைபிடித்த நங்கையுடன்
நலமாக வளமாக
நல்படி அது ஆக ஆசி!
கருதரிக்கும் காலமது
கச்சிதமாய் உண்டுண்டு
ஊஞ்சலது சேவை நாளில்
உமைபாலன் என்னை
ஊஞ்சலது ஆட்டிவிட்டு
உத்தரவு மருந்துண்டு வா
உருவாகும் போ கரு ஆசி!
என்று ஞானஸ்கந்தர் உரைத்தார். ஒவ்வொரு வருடமும் வைகாசி
விசாகத்தன்று நமது ஞானஸ்கந்த மூர்த்தியின் உற்சவ சிலையை
ஊஞ்சலில் வைத்து தீட்சை பெற்ற 50 அடியார்களும் தாலாட்ட ஓதுவார்
திருமுருக ரமேஷ் அடிகளார் கௌமாரச் செல்லமடி.. அம்மான் முருகன்..
கௌமாரச் செல்லமடி அம்மான்… என்று தாலாட்ட பக்தர்கள் அதையே பின்
தொடர அந்த கந்தலோகமே இறங்கி வந்தால்போல் பூஜை நடக்கும்.
அப்போது உற்சவர் விக்கிரகத்தின் முகத்தில் ஒரு தேஜஸ் ஒளி பெருகும்.
அதை அனைவரும் கண்டு ஆனந்தம் கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா.. எனும் கோஷத்தோடு பக்தி வெள்ளத்தில் திளைப்பார்கள்.
இவரை அந்த நாளில் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு ஊஞ்சலை
ஆட்டிவிட்டு உத்தரவு மருந்து எனும் திரவ வடிவில் பாயசம் போல்
தரப்படும். அதை அருந்தினால் கரு உருவாகும் என்று நாடியில் உரைத்தார்
நமது ஞானஸ்கந்த மூர்த்தி. உத்தரவு மருந்தில் ஏழு வித மூலிகை
கலந்து முருகனுக்கு நைவேத்யம் செய்து கொடுக்கப்படும். அந்த
மூலிகையை நாடியில் உரைப்பதும் முருகனே.
முருகப் பெருமான் நாடியில் சொல்கின்ற மூலிகைகளை சுண்டக்
காய்ச்சிப் பாலுடன் கலந்து தம்பதியாக வரக்கூடிய
குழந்தையில்லாதவர்களுக்கு சரிசமமாக கணவன் மனைவி இருவருக்கும்
பங்கிட்டு யாரும் பார்க்காத வகையில் உள்ளுக்குள் அருந்த
சொல்லப்படுகிறது. அவ்விதம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு
அடுத்த வைகாசி விசாகம் வருவதற்குள் கரு தரிக்கும் யோகம்
ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கடுமையான தோஷங்கள், கர்ம வினைகள்
இருப்பதால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது வைகாசி விசாகம்
தவறாமல் உத்தரவு மருந்து அருந்த முருகப் பெருமான் உத்தரவிட்டுள்ளார்.
அதுபோலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்பட்டுள்ளது.
காரணமென்னவெனில் இங்கு முருகப்பெருமானே குழந்தை வடிவில்
எழுந்தருளியுள்ளார். அது மட்டுமல்லாமல் சுயம்பு வடிவில்
முருகப்பெருமான் தோன்றியிருக்கின்றார். நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்
இங்கு முருகப் பெருமான் பாதம் பட்ட இடம் என்று 15 ஆண்டுகளுக்கு
முன்னரே குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில்
உள்ள ஸ்ரீ ஜோதிஅக்பர் சுவடிகளால் படிக்கப்படும் மீனாட்சி நாடியில்
சித்தர்கள் பலர் கூடி தங்கம் செய்த இடம் என்றும், சூரபத்மன் வதத்திற்கு
முன்பே முருகப் பெருமான் எழுந்தருளிய இடம் என்றும், வள்ளி,
தெய்வானை திருமணத்திற்கு முற்பிட்ட முருகன் என்பதால் மயில் வாகனம்
அல்லாமல் யானை வாகனம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும்
மீனாட்சி நாடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த மீனாட்சி நாடி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாடியாகும். அப்போதே
நமது ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் பெருமை
விளங்கும். அதுமட்டுமல்லாது 18 சித்தர்களும் அருவமாக முருகனுக்கு
பூஜை செய்ய வருவதும், முருகனின் 18 விழிகளில் இருந்து வரக்கூடிய
கருணைப் பார்வை இந்த ஆலயத்தின் மீது கந்தலோகத்திலிருந்து படுவதும்
மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைக் குறிக்கும் வகையில் 18 அடி வேல் பிரதிஷ்டை செய்யப்
பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் பாம்பு வடிவில் வந்து முருகப் பெருமானை
பூஜிப்பதும் மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்
இன்றும் அடிக்கடி நடப்பது கண்கூடு. ஆனால் அனைவர் கண்களுக்கும்
புலப்படுவது கடினம். ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்த
10 வயதுடைய அஸ்வத் கிருஷ்ணா என்ற சிறுவனுக்கு நமது ஆலய
கோபுரத்தின் மீது தங்கநிற வடிவில் மயில் மீது பெரிய ஒளி வடிவில்
உருவம் ஒன்று வந்து இறங்கியதைக் கண்டு அச்சிறுவன் அதிர்ந்து
கூறியது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்
குழந்தை வரம் வேண்டி நாடி கேட்ட அவர் உத்தரவு மருந்து வாங்கி
குடித்து அவர் மனைவியையும் குடிக்கச் செய்தார். அடுத்த வைகாசி
விசாகம் வருவதற்குள் நிறைமாத கர்ப்பிணி ஆகி தற்பொழுது அழகான
பெண் குழந்தைக்கு தாயாகி விட்டார். முதன் முதலாக அவருக்க்கு 40
வயதில் நாடி உரைத்த போது ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி என்று
அன்று உரைத்தது 100% அப்படியே சத்தியமாக பலித்தது. இந்த சம்பவம்
முருகப் பெருமான் திருக்கை வேலின் மீது ஆணையிட்டு உண்மை,
உண்மை, உண்மையை தவிர வேறேதுமில்லை என்பது அனைவரும்
அறிந்ததே.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”
very good articles
பதிலளிநீக்குwhere is this gnana skandha temple?
பதிலளிநீக்குI need the full address of the temple
பதிலளிநீக்கு