வெள்ளி, 25 டிசம்பர், 2015

கந்தர் கலிவெண்பா !


1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று
61

பகை கடிதல்!


பகை கடிதல்
"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!

படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ்வருமாறு:
திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.
1
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!!

(விசேடம்) திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண்  விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.
மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.
2
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!
இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.
3
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!
பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.
4
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
5
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!
இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.
6
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.
7
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.
8
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
9
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
10
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன் வலசைப் பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

வியாழன், 24 டிசம்பர், 2015

குமாரஸ்தவம்!


ஓம் குமரகுருதாச குருப்யோ நம :
குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி.

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம்.

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம்.

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்.

5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம:
அறுகோண (சக்கரத்தில் எழுந்தருளியுள்ள) தலைவனுக்கு வணக்கம்.

6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்.

7. ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஒன்பது வகையான நிதிகளின் தலைவனுக்கு வணக்கம்.

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம:
பேரின்ப முக்தி நிலையத் தலைவனுக்கு வணக்கம்.

9. ஓம் நரபதி பதயே நமோ நம:
அரசர் தலைவனுக்கு வணக்கம் (நரபதி - மக்கள் அரசன்).

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
தேவ ராஜனான தேவேந்திரனுக்கும் மகா தேவனான சிவனாருக்கும் முறையே ஆட்சியையும் உபதேசமும் அளித்த அண்ணலான சுரபதிக்கு வணக்கம்.

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
கூத்தப் பிரானான அறுமுகச் சிவனாருக்கு வணக்கம்.

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஆறெழுத்து இறைவனுக்கு அநேக வணக்கம்.

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ ராஜனாகிய தலைவனுக்கு வணக்கம்.

14. ஓம் தபராஜ பதயே நமோ நம:
தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்.

15. ஓம் இஹபர பதயே நமோ நம:
இவ்வுலகத்திற்கும் மறுமையிலடையும் சுவர்க்கம் முதலிய உலகத்திற்கும் தலைவனான குமரனுக்கு வணக்கம்.

16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம:
திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரினாதருடைய தலைவனுக்கு வணக்கம்.

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம:
வெற்றி மிக்க இறைவனுக்கு வணக்கம்.

18. ஓம் நயநய பதயே நமோ நம:
மிக்க இனிமையைச் செய்யும் தலைவனுக்கு வணக்கம்.

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
அழகு குருவான தலைவனுக்கு வணக்கம்.

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
தேவகுஞ்சரி என்னும் தெய்வானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்.

21. ஓம் வல்லீ பதயே நமோ நம:
வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்.

22. ஓம் மல்ல பதயே நமோ நம:
மல் போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்.

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
வேல் முதலிய தெய்வப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
சாஸ்திரங்கள் என்ற கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
சஷ்டி திதியில் அமைந்த கந்த விரதத் தலைவனுக்கு வணக்கம். 

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம:
(வேள்வி) யாகத் தலைவனுக்கு வணக்கம்.

27. ஓம் அபேத பதயே நமோ நம:
வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்.

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம:
மெய்யுணர்வு அருளும் தலைவனுக்கு வணக்கம்.

29. ஓம் (வ்) வியூஹ பதயே நமோ நம: (
சேனைகளின்) அணிவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்.

30. ஓம் மயூர பதயே நமோ நம:
மயூர நாதனுக்கு வணக்கம்.

31. ஓம் பூத பதயே நமோ நம:
பூதங்களின் தலைவனுக்கு வணக்கம்.

32. ஓம் வேத பதயே நமோ நம:
வேதநாதனுக்கு வணக்கம்.

33. ஓம் புராண பதயே நமோ நம:
பழமையான (புராணங்களுக்குத்) தலைவனுக்கு வணக்கம்.

34. ஓம் (ப்) பிராண பதயே நமோ நம:
ஆன்ம நாதனுக்கு வணக்கம்.

35. ஓம் பக்த பதயே நமோ நம:
அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்.

36. ஓம் முக்த பதயே நமோ நம:
பாச பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்.

37. ஓம் அகார பதயே நமோ நம:

38. ஓம் உகார பதயே நமோ நம:

39. ஓம் மகார பதயே நமோ நம:
மூல மந்திரமாகிய "ஓம்" என்ற பிரணவம் அகரம், உகரம், மகரம் என்று பிரியும். இம்மூன்று ஒலிகளும் முறையே ஆகல, காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் அவற்றை செய்யும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும் உணர்த்தும். அந்த மும்மூர்த்திகளையும் அதிஷ்டித்து நிற்கும் முருகனே மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆவான். அவனே பிரணவ வைசியன் என்க.

40. ஓம் விகாச பதயே நமோ நம:
எங்கும் துன்றி நிறைந்த இறைவனான குகபதிக்கு வணக்கம்.

41. ஓம் ஆதி பதயே நமோ நம:
எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்.

42. ஓம் பூதி பதயே நமோ நம:
சகல ஐஸ்வரியங்களுக்கும் அண்டங்களுக்கும் நாயகனுக்கு வணக்கம்.

43. ஓம் அமார பதயே நமோ நம:
மாரவேளை எரித்த மாதேவருக்குத் தலைவனுக்கு வணக்கம்.

44. ஓம் குமார பதயே நமோ நம:
குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

மங்கலவுரை

குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல் ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தெவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.
"பாம்பனடிகள் பதமலர்க்கே அடைக்கலம்"
"ஓம் குமாராய நம : "

ஜீவ நாடியில் வந்த மகேஸ்வர பூஜை!

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் பல பேருக்கு மகேஸ்வர பூஜை செய்யச் சொல்லி வருகிறது. அதை எப்படி எங்கு செய்வது என்று பலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக எனது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் ஆசியாலும் அவர் வழிகாட்டுதலாலும் இந்த பதிவு. திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.



குறிப்பு: பட்த்தில் நீங்கள் காண்பது 27.5.2014 அன்று ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடந்த மகேஸ்வர பூஜை, அந்த அற்புதமான பூஜையைச் செய்பவர் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் அவர்களாவார்.

இது எல்லாப்பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம் என்று  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள். அத்துடன்  நமது ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும் அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். கர்ம வினை தீர அன்னதானமே ஒரே வழி. யாருக்கு பிராப்தம் இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.
மகேஸ்வர பூஜை செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு  மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.)


                           
  ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !!!

புதன், 23 டிசம்பர், 2015

ஜெர்மனிக்காரருக்கு உரைக்கப்பட்ட ஜீவ நாடி பகுதி-2

A DEVOTEE'S NADI READING PART 2
My experience with the Sri Gnanaskandar Jeeva Nadi – Part 2
On 21.08.2015 I got my second Jeeva Nadi reading. I was still searching for a job and I was not successful with this. As I had also financial problems I moved from the city where I was living and shifted to my parents home, to a small town in northern part of Germany.
In the second Jeeva Nadi reading Muruga told me that I will get a Job in the Kaniṉi (Computer/Software) field and in the town where I am now staying. I was wondering and I could not believe this statement. As the town where I am living currently is very small to house a Software Company. Muruga also told me not to do any business now or go for a government job.
He told me to do a simple Pariharam with salt. Muruga also mentioned that in my town where I was now living that there is a Ambal Shestram of foreign religion and that I have to visit this Shestram regularly. Muruga is telling me to visit the Church of Maria in my hometown. A Hindu god is telling me to go to a Christian church?! The divine Play is great!
As I have a particular mark on my body which is a sign for the Siddhar path. Muruga told me that many Siddhas will bless me and I will get good spiritual development. I have to chat Shanmuga Kavasam everyday. In a few weeks I will get the next reading so I have to be patient.
One day I was searching for jobs on the internet. I found an advertisement of a small company in my hometown which was searching for a Software Engineer. Before that I did not know that there is such a company in my town.
 As predicted exactly by Muruga, I am now working as a Software developer in this company in my hometown. What can I say about the grace of Muruga and the Siddhas!
My wish is that every devotee gets the same blessing, protection and guides that I have got.
In the next reading I got amazing revelation about my spiritual heritage and a prediction about a divine visit...
 நன்றி:http://agathiyarvanam.blogspot.in/2015/12/a-devotees-nadi-reading-part-2.html
                   ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி, ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்
பகுதி 1 ஐப் படிக்க இங்கே http://kaumarapayanam.blogspot.in/2015/11/34.html
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஒங்கட்டும்!

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கடலூர் வெள்ள நிவாரணம் படங்கள்

ரூ.பத்து இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கௌமார மடாலயத்திலிருந்து   17.12.2015 வியாழக்கிழமை மார்கழி 1ம் தேதியில் கடலூருக்கு அனுப்பி வைக்கப் பெற்றது. கௌமார மடாலயம் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,அறக்கட்டளைகள்,தென்சேரிமலை திருமட கல்வி நிறுவனம்,கவுண்டம்பாளையம் சிவநகர் தொண்டர்கள்,இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் இந்த நிவாரணத்திற்கு பெரும் உதவி செய்துள்ளனர் என்று சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.அந்த நிவாரணப்பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதற்கான புகைப்படங்களை இங்கு வெளியிடுகின்றோம்.







 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

        படம்: அமர்நாத் குகைக்கோவில் குதிரைப்பயணத்தில் 

என்றென்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

29.12.2015 அன்று சிரவை ஆதீன முதல்வர் குரு பூஜை விழா

                                
சிரவை ஆதீனக் குரு முதல்வர் திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்களின் 59 வது ஆண்டு நிறைவுக் குருபூசை விழா மார்கழி மாதம் 13ம் நாள் ஆயில்யம் அன்று 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் கௌமார மடாலய சமாதி வளாகத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நூல் வெளியீட்டுடன் எம் ஞான தேசிகர் சிரவை ஆதீனம் முனைவர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், பழனிஆதீனம் தவத்திரு.சாது சண்முக அடிகளார்,தென்சேரி மலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார் தாராபுரம் தவத்திரு சிவாச்சல அடிகளார் போன்ற பெரியோர்கள் கலந்து கொள்கின்றார்கள். 
இந்த குருபூஜை விழாவில் வெளியிடப்படும் நூல்களின் விபரங்கள்

  1. அருணகிரிநாதரின் திருப்புகழ்த்திரட்டு
  2. சுப்பிரமணிய சப்தசதி ஹோம விதானம் (தமிழில்)
  3. ஒளவையாரின் நீதி நூல்கள் (ஆங்கிலத்தில்)
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றென்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.