வியாழன், 28 ஏப்ரல், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-47


அதிருகின்ற கழல்களை அணிந்திருக்கின்ற உனது திருவடிகளைப் பணிந்து வணங்கும் உனது அடியேனாகிய  நான் அபயம் நீயே  என்று உண்மையாகிய  நிலையைக் காணுமாறு எனது இதயத்தில் இருந்து கிருபையாகிய கருணை புரிந்து எனது இடர்களும் சங்கையாகிய சந்தேகங்களும் கலங்கி ஒழிந்துபோகுமாறு அருள்வாயே
                                           
உமக்கு எதிராக ஒருவருமில்லாமல்  நடனமாடும் இறைவனாகிய சிவபெருமானின் ஒரு பாகமாகிய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் பாலனே
                                                      
பதிகள் எங்கிலும் இருந்து விளையாடி, பல குன்றுகளிலும் அமர்ந்த பெருமாளே என்று நமது கௌமார குரு நாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடியே திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக மலர்கின்றது.
                                               
திருப்புகழ்
அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
     அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து  க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி  நடமாடும்
     இறைவன் தனது பங்கி  லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து  விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த  பெருமாளே 

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                          
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக