கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றும் வைணவச் சேக்கிழார் என்றும் புகழப்படும் கோவை கௌமார மடாலயம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களால் பாடப் பெற்றது வைணவ அடியார்களின் வரலாற்றை விளக்கும் பக்தமான்மியம் எனும் நூல்.அருந்தமிழால் அற்புதமாகப் பாடப்பட்ட திருமால் அடியார்கள் புகழ்பாடும் பக்தமான்மிய அருந்தமிழ் வேள்வி 02.04.2016 சனிக்கிழமை அன்று கௌமார மடாலயத்தில் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் பெரும்புலவர்களால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பெரும்புலவர்களின் அருந்தமிழ் வேள்வி முடிந்த பின்பு சிரவையாதீனம் அவர்கள் அருளாசி வழங்கினார்கள். அந்த அருளாசியில் பெரியோர்கள் இந்த பக்தமான்மிய அமுதத்தை சுவைப்பது போல இந்த அருமையான பக்தமான்மியத்தைக் கற்றுக் கொள்ள இளைஞர்களும் முன்வர வேண்டும் என்றும் புலவர்களின் விருப்பம் போல் இந்த அருந்தமிழ் வேள்வியை இனி வரும் காலங்களில் நகரங்களிலும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான தமிழ் நூல் இருப்பது வைணவ சமயத்தின் பக்தர்களுக்குத் தெரிவதில்லை எனவே இது போன்ற நூல்களை அதன் பெருமையை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடைமையாகும் என்றும் கூறி பெரும்புலவர்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த அருளாசியை நிறைவு செய்தார்கள்.
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் கவி
எங்கும் பரவி எல்லோரும் கற்று
மங்காத மகிழ்ச்சியும் செல்வமும்
நீங்காமல் நிற்கவே நிறைந்து
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
பட்ட மரம் துளிர்க்கும்
பாறை கூட உருகும்
பார்வையால் பாவம் பொசுங்கும்
பகலவனே எம் குருபரனே
பாதம் பணிந்தேன் சரண்!
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
அருமையான பதிவு... சிரவை ஆதீனம் சொல்வது போல் இளைஞர்களும் பக்தமான்மியத்தைக் கற்றுக் கொள்ள முன்வரவேண்டும். இந்நூல் எங்கு கிடைக்கும் என்பதனை தெரிவிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு