வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அரசு பணி கிடைக்க அருள் புரிந்த ஜீவ நாடி

                                                  ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே 100% பலித்து வருகின்றது. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களுக்கு முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் வாக்குரைத்து வளமான வாழ்வைத் தந்தருள்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தமது 13 வயது முதலாகவே முருக உபாசனை செய்து இந்த ஜீவ நாடி படிக்கின்ற தவ வலிமையைப் பெற்று இருக்கின்றார்கள். இந்த விதமாக ஒரு இளைஞர் ஜீவ நாடி கேட்க ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளை வணங்கி அமர்ந்தார். அந்த இளைஞனுக்கு உடனடியாக அரசுப் பணி கிடைக்கும் என்று வாக்கு உரைத்தார். அந்த இளைஞர் மகிழ்ச்சியடைந்தார். அதே போல் அரைஞான் கயிறு அணியாமல் இருக்கின்றாய் அது உனக்கு நலமல்ல உடனே அரைஞான் கயிறு அணிந்து கொள்ளவும் என்று அறிவுரை முருகப்பெருமான் ஜீவ நாடியில் சொல்வதாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் உரைத்த உடனேயே அந்த இளைஞனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தாம் மட்டுமே அறிந்த இந்த இரகசியத்தை முருகன் உரைத்து விட்டாரே என்று சொல்லி கண்ணீர் மல்கினார் அந்த இளைஞர். இப்போது அந்த இளைஞனுக்கு ஜீவ நாடி மீது நம்பிக்கை வந்தது. அடுத்து சில ஆலயப்பரிகாரங்களை உரைத்து இதை செய்து விட்டு அடுத்து ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வந்து கேட்கும்படி முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தார். பரிகாரங்களைப் பொறுத்தவரை மக்களது கர்ம வினைகளைத் தீர்க்கும் நோக்கிலேயேதான் முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைக்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு சிறு வயது முதலாகவே பொருள் மீது பற்று இல்லை. அவர் நினைத்திருந்தால் ஜீவ நாடி மூலம் பல லட்சங்களை ஈட்டியிருக்க முடியும். எனவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் எந்த விதமான பரிகாரங்களையும் தாம் செய்து தருவது கிடையாது. அதேபோல் மூலிகை ரட்சைகள் போன்ற பொருட்களையும் உரிய நபர் மூலம் மக்கள் பெற வேண்டும் எனும் நோக்கில் உதவி மட்டுமே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செய்கின்றார். இந்த கலி யுகத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். இதைப் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை நேரில் சந்தித்துப் பயன் அடைந்தவர்கள் நன்கு அறிவார்கள். காணிக்கை இல்லாமல் ஜீவ நாடி உரைத்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்பட்டு ஜீவ நாடி உரைப்பவருக்கும் கேட்பவருக்கும் தோசம் ஏற்படும் என்பதால் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டே ஜீவ நாடி உரைக்க வேண்டும் எனும் குரு உத்தரவின்படியும் ஜீவ நாடியில் முருகனின் வாக்கின் படியும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொள்கின்றார்கள். அதையும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது கண்கூடு. தனது குடும்ப தேவைக்கு என தனது எம்.சி.ஏ எம்.பில் படிப்புக்கேற்ற தொழில் செய்கின்றார். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடியே அந்த இளைஞர் ஆலயப்பரிகாரங்களை செய்து உடனடியாக அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆச்சரியமான உண்மையாகும். அது மட்டுமல்லாது அரைஞான் கயிறையும் அணிந்து கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளையே குருவாக ஏற்று வாழ்வில் ஏற்றம் கண்டு வருகின்றார் அந்த இளைஞர். இது போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வழியாக முருகப்பெருமான் தினமும் இப்படி ஏதேனும் ஒரு திருவிளையாட்டை நடத்தி வருகின்றார்.
                      ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக