முருகப்பெருமானுக்கு என இருப்பது கௌமார மடாலயம். இந்த மடாலயம் கோவை சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் கடந்த மிகப்பெரும் பழமை பெற்றது இந்த மடாலயம். நான்காம் குருமஹா சந்நிதானமாக இருக்கும் தவத்திரு. முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஆன்மீக, சமுதாய சேவை செய்ய விருப்பமுள்ளவர்களை ஒருங்கிணைத்து முருகப்பெருமானின் புகழை என்றும் பரப்பி முருகனுக்கே இருக்கும் கௌமார சமயத்தோடு ஆன்மீக சமுதாய சேவைகளைச் செய்யும் எண்ணமுடையவர்களை ஒன்று திரட்டி அவரவர்களின் பகுதியில் இருக்கும் முருகனது ஆலயங்களில் பல்வேறு விழாக்களை நடத்த திட்டம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்கள். எனவே விருப்பம் இருப்பவர்கள் பின்வரும் இணைப்பைச் சொடுக்கி தங்கள் விவரங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த இணைப்பில் சென்று கோவை கௌமார மடாலயத்துடன் இணைந்து ஆன்மீக, சமுதாய சேவை செய்ய விருப்பமா? என இருக்கும். அதன் கீழ் பதிவு செய்க என்பதை அழுத்தினால் தங்கள் விவரங்கள் கேட்கும். பதிவு செய்க.
                                          சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக