வியாழன், 31 ஆகஸ்ட், 2017

முருகனை வணங்கினால் எல்லாமே தேடி வரும்

முருகனது உருவம் மனதில் தோன்றினால் போதும் நாம் எதுவும் அறியாமலேயே எல்லாமே நம்மைத் தேடி வரும். இதை ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் பாடி உள்ளார். அதை தமிழில் கோவை கவியரசு அவர்கள் பொருள் மாறாமல் பாடி உள்ளார்கள்.

ஜானாமி சப்தம் ஜானாமி சார்த்தம்
ஜானாமி பத்யம் ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்
                                  -ஆதிசங்கரர் புஜங்கம்
சொல்லேது பொருளேது கவியேது வசனந்
      துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
         எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
            திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.    
                                                                                        -கோவை கவியரசு அவர்கள்

   உன்னைத் துதிக்கக் குற்றமற்ற சொல்லோ, பொருளோ, கவியோ, வசனமோ நான் அறிந்தவனல்லன். ஆயினும் உன் ஒப்பில்லா ஆறுமுகங்களுடைய பெருஞ்சோதி எனது நெஞ்சில் குடி கொண்டு நல்ல தேனாகிய பாட்டை ஊற்றெடுக்கச் செய்கிறது. என்பது இரண்டு பாடல்களின் பொருளாகும்.
எனவே நமது கௌமாரபயணம் வாசகர்கள் தங்களுக்கு எந்தவிதமான துன்பம் நேர்ந்த போதும் அருகில் உள்ள முருகன் ஆலயம் சென்று இந்த இரண்டு பாடல்களையும் மனமுருகிப் பாடினால் நமது தலைக்கணம் நீங்கி முருகனது பாதத்தில் சரணாகதி அடையும் மனநிலை வந்து முருகனது அருளால் நமது துன்பம் எல்லாம் தூர விலகி ஓடும்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                       www.kumaramutt.com

படம்: கோவையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தினை சுவாமிகள் கொடியசைத்து துவங்கியபோது.

              ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக