வியாழன், 31 ஆகஸ்ட், 2017

முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி


முருக வழிபாடு மிகவும் தொன்மையானது. முருகனை வழிபட்டு பேரருள் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம்…காலங்கள் செல்லச் செல்ல நமது தொன்மையான முருக வழிபாடு விடுபடாமல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் முருகனைக் குறித்து அருளாளர்கள் பாடிய தழிழ் என்றும் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்றும் கோவை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் எல்லா இடங்களிலும் தமது கருத்தைப் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழர்களின் பழமையான வழிபாடு தொடர நாமும் நம்மால் முடிந்த சேவைகளைச் செய்து முருக வழிபாட்டின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

 அந்த எண்ணத்தில்தான் சேவை விருப்பம் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில்  பதிவு செய்யும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம். பதிவு செய்த பின் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலமையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி முருக வழிபாடு குறித்து கருத்தரங்கள் நடத்தும் திட்டமும் இருப்பதால் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிவபெருமான், சக்தி, விஷ்னு, விநாயகர், சூரியன், முருகன் என அறு சமயத்தையும் ஒரு சமயமாக வழிபடும் கௌமார நெறியில் நின்று தங்கள் வாழ்வையும் பிறப்பையும் நல்வழியில் செலுத்தும் வாய்ப்பாக இதை ஏற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                    www.kaumaramutt.com

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக