வெள்ளி, 9 மார்ச், 2018

ஜாதகமே மாறிப் போகும் அளவிற்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம்!


அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்திக்கும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கும் சேவை செய்யும் அடியவர் ஒருவருக்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம். ஸ்ரீஞானஸ்கந்தர் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசைப் பூஜையும், வருடந்தோறும் வைகாசி விசாகமும், தைப்பூசமும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பட்டு பாலமுருகனைக் குழந்தையாக தாலாட்டும் ஊஞ்சல் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. ஜீவநாடியில் வந்த வாக்கின்படி குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தை அருள் திருவமுது வழங்கப்பட்டது. ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்யும் அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் திருவமுது வழங்கப்பட்டது. அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் ஜாதக ரீதியாக பெண் வாரிசு யோகமே உண்டு. ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து இருவருடைய ஜாதகத்திலும் பெண் வாரிசு யோகம் மட்டுமே உண்டு ஆனால் முருகன் அருளால் ஆண்வாரிசு கிட்டும் என்றும் அப்படி ஆண்வாரிசு கிட்டினால் இதுவரை அவர்கள் முருகனுக்கு செய்த சேவையின் பரிசு இல்லை பெண்ணாக இருப்பின் அவர்கள் ஜாதக கிரகங்கள் தரும் பரிசு என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது. முருகப் பெருமானுக்கு உள்ளன்போடு சேவை செய்து வந்ததால் ஆண்வாரிசு யோகத்தை முருகப் பெருமானே கொடுத்தார். ஜாதகமே மாறும் அளவிற்கு முருகப் பெருமான் அற்புதம் நிகழ்த்தியுள்ளார். மற்றுமொரு சிறப்புத் தகவல் என்னவெனில் அடியவரின் மனைவியை ஆரம்பம் முதலே பகவத் கீதை படிக்குமாறு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதுபோல் அவரும் பகவத் கீதையை உள்ளன்போடு படித்து வந்தார். அதன் பயனாக பகவான் கிருஷ்ணாரின் அருள் இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடுநிசியில் 12.05 மணிக்கு கிருஷ்ணரின் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் ஆண்குழந்தை பிறந்து உள்ளது. இதுபோல் ஏராளமான அதிசயங்கள் ஆலயத்திலும், ஜீவநாடியிலும் நடந்து கொண்டிருக்கிறது.  கந்தனை சரணடைந்தவரை கந்தன் என்றும் கைவிடுவதில்லை. அதேபோல் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் வாக்கும் அவர் செய்யும் உபதேசமும்  நடைமுறையில் கடைபிடிக்கும்போது 100% பலன் தருவதை இது போல் பலர் அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நன்றி!
@சம்பூரணம், கேரளா
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக