- கடவுள் தரிசனம் காண லட்சக்கணக்கானோர் கூடும் இடம் அது. ஆனால், வெகுசிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள். .
- சமீபத்தில் நம்மிடம் வாழ்ந்த ஒரு மகான் வடபழனி பரஞ்சோதி பாபா.. கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..
- ஆறடிக்கு ஆறடி அகலமுள்ள ஒரு குட்டி அறையில் அழகானதொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் அவர்.
- அவரை பார்க்க வருபவர்கள் யாரையும் அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மீறிப் பார்த்துவிட்டால், பாதிச்சுமை இறங்கிவிடும். நாலு வார்த்தை பேசிவிட்டால்? -பிரச்னைகள் அனைத்துமே தீர்ந்துவிடும்’’ என்கிறார்கள்..
- பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.
- பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...
- பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
- ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.
- என் சொந்த அனுபவம் நான் பாபா அவர்களை 2008ம் வருடம் தரிசிக்க சென்றேன் ஒரு bread pocket வாங்கி சென்றேன்.. முதலில் மெத்தை மேல் உள்ள படிக்கட்டில் சென்று உட்கார சொன்னார்.. காலை பிடிக்க சொல்லி வேட்டியை தூக்கி பிடித்தார் 13 bread pocket எனக்கு கொடுத்தார்.. எதற்கு இவ்வளவு நமக்கு கொடுக்கிறார் என்பது அப்போது புரியவில்லை.. வாங்கி விட்டு வெளியில் வந்தேன் வடபழனி கோவில் அருகில் சென்றபோது சரியாக 12 பிச்சைக்காரர்கள் என்னிடம் வந்து bread pocket வாங்கி சென்றுவிட்டார்கள்.. ஒரு pocket நான் எடுத்து வந்துவிட்டேன் இன்று வரை எதற்குகாக இப்படி நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.. அவர் சமாதி ஆவதற்கு 2 மாதம் முன்பு நான் அவரை தரிசிக்க சென்றேன் அப்போது முதலில் அவர் பேசவில்லை நான் அங்கிருந்து புறப்பட தயாரான போது அவர் என்னிடம் டேய் நான் ஓலை வீடு கட்டப்போறேன் என்று சொன்னார் அப்படி என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை அதன் பிறகே தெரிந்தது அவர் சமாதிஆனார் என்பது...
சிவாய நம
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி..
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக