சனி, 10 மார்ச், 2018

யோகானந்த பாரதி சாமிகள் ஜீவசமாதி - தர்மபுரி


தஞ்சையில் பிறந்த யோகானந்த பாரதி சாமிகள் தனது குருநாதர் சொக்கலிங்க தம்பிரான் அவர்கள் ஆணைப்படி பாரதம் முழுவதும் தலப்பயணம் மேற்கொண்டார்.

பல அற்புதங்களை நிகழ்த்தி பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் பிணிகளை நீக்கினார்..

இறுதியில் பாலக்கோடு கடமடை ரயில்வே கேட் அருகில் உள்ள வீரஆஞ்சனேயர் கோயில் அருகில் மூன்று ஆண்டுகள் தங்கி தவத்தில் இருந்தார்..

நித்தியானந்த ஆஸ்ரமத்தை 1994 ல் தோற்றுவித்தார்.

1995 ஆம் ஆண்டு மார்கழி சதய நட்சத்திரத்தில்
தமது 30 வது வயதில் நிர்விகல்பசமாதி நிலையை அடைந்தார்.

ஜீவசமாதி இருக்குமிடம்: தர்மபுரி – ஓசூர்சாலையில், பாலக்கோடு அருகில், இரயில்வே கேட், கடமடை, யோகானந்த நகர்.

சிவாய நம 
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி.

          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 9 மார்ச், 2018

ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் பயிற்சி வகுப்புகள்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் நடத்தும் திம்பசக்கரம் ஒரு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் உபாசனை ரகசியங்கள் ஒரு நாள் பயிற்சி வகுப்பு.

இடம்: சென்னை அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் ஹால்
நாள்: 21, 22.04.2018 சனி,ஞாயிறு

அடிப்படை ஜோதிடம் தெரியாதவர்களும் கலந்து கொள்ளலாம். முன் பதிவிற்கு பின்வரும் படங்களைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொள்ளவும். நன்றி

                                           

                                            
பயிற்சி வகுப்பில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
6382034853
6382039706
8668088735
                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜாதகமே மாறிப் போகும் அளவிற்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம்!


அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்திக்கும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கும் சேவை செய்யும் அடியவர் ஒருவருக்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம். ஸ்ரீஞானஸ்கந்தர் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசைப் பூஜையும், வருடந்தோறும் வைகாசி விசாகமும், தைப்பூசமும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பட்டு பாலமுருகனைக் குழந்தையாக தாலாட்டும் ஊஞ்சல் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. ஜீவநாடியில் வந்த வாக்கின்படி குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தை அருள் திருவமுது வழங்கப்பட்டது. ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்யும் அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் திருவமுது வழங்கப்பட்டது. அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் ஜாதக ரீதியாக பெண் வாரிசு யோகமே உண்டு. ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து இருவருடைய ஜாதகத்திலும் பெண் வாரிசு யோகம் மட்டுமே உண்டு ஆனால் முருகன் அருளால் ஆண்வாரிசு கிட்டும் என்றும் அப்படி ஆண்வாரிசு கிட்டினால் இதுவரை அவர்கள் முருகனுக்கு செய்த சேவையின் பரிசு இல்லை பெண்ணாக இருப்பின் அவர்கள் ஜாதக கிரகங்கள் தரும் பரிசு என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது. முருகப் பெருமானுக்கு உள்ளன்போடு சேவை செய்து வந்ததால் ஆண்வாரிசு யோகத்தை முருகப் பெருமானே கொடுத்தார். ஜாதகமே மாறும் அளவிற்கு முருகப் பெருமான் அற்புதம் நிகழ்த்தியுள்ளார். மற்றுமொரு சிறப்புத் தகவல் என்னவெனில் அடியவரின் மனைவியை ஆரம்பம் முதலே பகவத் கீதை படிக்குமாறு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதுபோல் அவரும் பகவத் கீதையை உள்ளன்போடு படித்து வந்தார். அதன் பயனாக பகவான் கிருஷ்ணாரின் அருள் இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடுநிசியில் 12.05 மணிக்கு கிருஷ்ணரின் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் ஆண்குழந்தை பிறந்து உள்ளது. இதுபோல் ஏராளமான அதிசயங்கள் ஆலயத்திலும், ஜீவநாடியிலும் நடந்து கொண்டிருக்கிறது.  கந்தனை சரணடைந்தவரை கந்தன் என்றும் கைவிடுவதில்லை. அதேபோல் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் வாக்கும் அவர் செய்யும் உபதேசமும்  நடைமுறையில் கடைபிடிக்கும்போது 100% பலன் தருவதை இது போல் பலர் அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நன்றி!
@சம்பூரணம், கேரளா
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

பரஞ்சோதி பாபா - வடபழனி சென்னை

  • கடவுள் தரிசனம் காண லட்சக்கணக்கானோர் கூடும் இடம் அது. ஆனால், வெகுசிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள். .
  • சமீபத்தில் நம்மிடம் வாழ்ந்த ஒரு மகான் வடபழனி பரஞ்சோதி பாபா.. கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..
  • ஆறடிக்கு ஆறடி அகலமுள்ள ஒரு குட்டி அறையில் அழகானதொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் அவர்.
  • அவரை பார்க்க வருபவர்கள் யாரையும் அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மீறிப் பார்த்துவிட்டால், பாதிச்சுமை இறங்கிவிடும். நாலு வார்த்தை பேசிவிட்டால்? -பிரச்னைகள் அனைத்துமே தீர்ந்துவிடும்’’ என்கிறார்கள்..
  • பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.
  • பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...
  • பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.
  • என் சொந்த அனுபவம் நான் பாபா அவர்களை 2008ம் வருடம் தரிசிக்க சென்றேன் ஒரு bread pocket வாங்கி சென்றேன்.. முதலில் மெத்தை மேல் உள்ள படிக்கட்டில் சென்று உட்கார சொன்னார்.. காலை பிடிக்க சொல்லி வேட்டியை தூக்கி பிடித்தார் 13 bread pocket எனக்கு கொடுத்தார்.. எதற்கு இவ்வளவு நமக்கு கொடுக்கிறார் என்பது அப்போது புரியவில்லை.. வாங்கி விட்டு வெளியில் வந்தேன் வடபழனி கோவில் அருகில் சென்றபோது சரியாக 12 பிச்சைக்காரர்கள் என்னிடம் வந்து bread pocket வாங்கி சென்றுவிட்டார்கள்.. ஒரு pocket நான் எடுத்து வந்துவிட்டேன் இன்று வரை எதற்குகாக இப்படி நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.. அவர் சமாதி ஆவதற்கு 2 மாதம் முன்பு நான் அவரை தரிசிக்க சென்றேன் அப்போது முதலில் அவர் பேசவில்லை நான் அங்கிருந்து புறப்பட தயாரான போது அவர் என்னிடம் டேய் நான் ஓலை வீடு கட்டப்போறேன் என்று சொன்னார் அப்படி என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை அதன் பிறகே தெரிந்தது அவர் சமாதிஆனார் என்பது... 
சிவாய நம 
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி..
                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சித்தர் நூரோந்து சுவாமிகள்

  • நூரோந்து சுவாமிகள் - நூரோந்து மலை அஞ்செட்டி, தேன் கனி கோட்டை 
  • நூரோந்து சுவாமிகள் சுமார் 850 வருடங்கள் முன் வாழ்ந்த சித்தர்..
  • பல அதிசய அற்புதங்களை நிகழ்த்தியவர் அவர் வழி சீடர்கள் 12 பேர் ஒரே இடத்தில் சமாதியில் இருப்பது சிறப்பு இதை 12 தலை முறைகளாக பாதுகாத்து வருகின்றனர்..
  • அடர்ந்த வனம் எங்கும் பசுமையான சூழல் பல முலிகைகளை கொண்டது இந்த மலை.
  • சுவாமிகள் வரலாறு சரியாக தெரியவில்லை இவர் மகிமையை கேள்விபட்டு மைசூர் மகாராஜா ஒரு வாளை இங்கு பரிசாக கொடுத்ததாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள் ..
  • மலை மேல் பல குகைகள் உள்ளதாகவும் அதை யாரும் தவறாக பயன் படுத்தாமல் ஒரு நாகம் அதை பாதுகாப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் ..
  • கல்யாணி குளம் என்று மலை மேல் ஒரு மூலிகை குளம் உள்ளது பல வித நோய் தீர்க்கும் இந்த குளம் சுவாமிகளால் உருவாக்க பட்டதாகவும் சுமார் 850 வருடங்களாக நீர் வற்றாமல் உள்ளது அதிசயம்..
  • விஞ்ஞானத்தால் விடை தெரியாத அதிசயம் பல உள்ளன அதில் ஒன்று தான் இந்த நூரோந்து சுவாமிகள் சமாதி இடம் இங்கு தான் எண்ணெய்க்கு பதிலாக இளநீரில் விளக்கு எரியும் அதிசயம் நிகழ்கிறது..
  • விளக்கு எண்ணெய்க்கு பதிலாக இளநீர் வாங்கி செல்ல வேண்டும் அவர் சமாதி பீடத்தை தவிர வேறு எங்கும் விளக்கு எறிவதில்லை..என்பது ஒரு அதிசய நிகழ்வு..
  • இங்கு இளநீரில் விளக்கு ஏற்றுவதால் பல வித பிரச்சினைகள் தீர்வதாக இங்கு வந்து சென்றவர்கள் தெரிவிக்கிறார்கள்..
  • சுத்தமான காற்று நீர் அற்புத வனம் பறவைகள் கீதம் என்று ரம்மியமான இயற்கை நமக்கு அளித்த வரம் அதை முறையாக பயன்படுத்தி சுவாமிகளை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற பிராத்திக்கிறேன்...
  • அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில்
  • அடர்ந்த வனம் மிருக நடமாட்டம் அதிகம் என்பதால் தகுந்த எச்சரிக்கை உடன் செல்வது நல்லது...
  • தாங்கள் செல்லும் போது சில மர கன்றுகளை அங்கு நடவும்..
  • பிளாஷ்டிக் பொருட்களை தவிர்க்கவும் சுற்று சூழல் பாதுகாக்க உதவவும்..

சிவாயநம

ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 19 டிசம்பர், 2017

கோவை கௌமார மடாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

கோவை கௌமார மடாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா 19.12.2017 செவ்வாய்க்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிரவையாதீனம் தவத்திரு முனைவர் குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிப்பெயர்ச்சியால் தமக்கும் தமது குடும்பத்தார்க்கும் இந்த நாட்டுக்கும் எந்த வித தீங்கும் நடக்காமல் இருக்க கூட்டுபிரார்த்தனைகள் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
அதில் சில படங்கள்




சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கௌமார மடாலயத்தில் திருக்குறள் போட்டி

 17.12.17. அன்று கௌமார மடாலயத்தில் கணபதி தமிழ் சங்கம் மற்றும் தவத்திரு சுந்தர சுவாமிகள் தமிழ் ஆய்வு மையமும் ஆண்டு தோறும் இணைந்து நடத்துகின்ற திருக்குறள் போட்டியில் சுமார் 150 பள்ளிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர் இவ் விழாவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றுகளும் கேடயங்களும் சிரவையாதீனம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ,திரு நித்யானந்த பாரதி மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. சில படங்கள்
                                     


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!