வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஆன்மீக ஆற்றல்கள்தரும் உதிர வேங்கை ஒரு அறிமுகம்!



மின்னல்மற்றும்கதிர்வீச்சுகளில்இருந்து மனிதர்களை பாதுகாக்கும்,

மனித ரத்தம்போல சிவப்பு நிறத்தில்பால்வடியும், பல்வேறு

மருத்துவக்குணங்கள்நிறைந்த உதிர வேங்கை மரங்கள்இருக்கின்றன.

முதிர்ந்த உதிர வேங்கை மரத்தின்தண்டு பகுதியை வெட்டினால்,

மனிதர்களின்ரத்தம்போல, பால்போன்ற பிசின்வருவதோடு, மஞ்சள்

நிறத்தில்காணப்படும்பூக்களின்மேல், சிறுத்தை உடலில்உள்ள

புள்ளிகள்போல காணப்படுகின்றன. இதனால், இந்த மரத்துக்கு, 'உதிர

வேங்கை' மரம்எனப்பெயர்., ''வேங்கை மரம்உள்ள பகுதியில், மின்னல்

தாக்காது. மோசமான கதிர்வீச்சுகள், இடி, மின்னலில்இருந்து

பாதுகாக்கும்சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால

கோவில்களின்கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில்

அமைத்தனர், நமதுஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலய கொடிமரமும்

இந்த உதிர வேங்கை மரத்தினால்செய்யப்பட்ட்து. எவர்ஒருவர்இந்த

கொடிமரத்தை வணங்கிஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தை 27 முறை

சுற்றி வழிபடுகிறார்களோ அவர்களது அனைத்துப்பிரச்சினைகளும்

தீர்வதை அனுபவத்தில்பார்த்து வருகிறோம். தெய்வீக ஆற்றல்களை

இழுத்துக்கொடுப்பதில்இந்த உதிர வேங்கை மரம்முக்கிய இட்த்தைப்

பெற்றிருக்கிறது எனலாம். '' உதிர வேங்கை மரத்தின்தாவரவியல்

பெயர், 'பிட்ரோடர்டஸ்!' மரத்தின்சிவப்பு நிற பிசின்உலர்ந்ததும்

கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக

வைப்பர். இதனால், தோல்நோய்வராமல்தடுக்க முடியும். தற்போது

இந்த மரங்கள்வனப்பகுதியில்மட்டுமே காணப்படுகின்றன.

நிலப்பகுதியில்அரிதாகவே காணப்படும்.

                ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !!!

ஜீவ நாடியில் வந்த மகேஸ்வர பூஜை!



ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் பல பேருக்கு மகேஸ்வர பூஜை செய்யச் சொல்லி வருகிறது. அதை எப்படி எங்கு செய்வது என்று பலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக எனது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் ஆசியாலும் அவர் வழிகாட்டுதலாலும் இந்த பதிவு. திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.


குறிப்பு: பட்த்தில் நீங்கள் காண்பது 27.5.2014 அன்று ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடந்த மகேஸ்வர பூஜை, அந்த அற்புதமான பூஜையைச் செய்பவர் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் அவர்களாவார்.

இது எல்லாப்பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம் என்று  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள். அத்துடன்  நமது ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும் அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். கர்ம வினை தீர அன்னதானமே ஒரே வழி. யாருக்கு பிராப்தம் இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.
மகேஸ்வர பூஜை செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு  மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.)


                           
  ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !!!

  

புதன், 4 பிப்ரவரி, 2015

ஜீவநாடி அதிசயங்கள் (உண்மைச் சம்பவம்)



 நாங்கள் கேரளாவில் வசிக்கும் ஒரு குடும்பம். நாங்கள் ஸ்ரீ 

ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது ஸ்ரீ 

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அருள்வாக்கு வந்தது. அதில் ஸ்ரீ ஸ்கந்த 

உபாசகர் எங்களுடைய வீட்டின் முன்பு மா மரம் ஒன்று இருப்பதையும், 

அதில் பூ, காய் ஒன்றும் இல்லாததையும் குறிப்பிட்டு, பின் வீட்டின் 

பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோ சுவற்றில் நன்கு 

ஒட்டப்படாமல் இருந்ததையும், உரைத்தார். பின் வீட்டில் பச்சை கலர் மூடி 

போட்ட பாக்ஸில் சாப்பிடுவதற்கான பொருள் இருந்ததையும், பின் 

வீட்டிற்க்கு பின்புறம் ஏதோ ஒரு  மிருகம் ஒன்று தெரிகிறது அது என்ன 

என்றும் கேட்டார். நாங்கள் அந்த மிருகத்தை பார்த்திருக்கிறோம். அதை 

கேரளாவில் மரப்பட்டி என்று அழைப்பதுண்டு. அது ஜீவ நாடி 

அருள்வாக்கில் வந்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், 

ஆச்சரியமாகவும், இருந்தது. ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கோ எங்களைப் 

பற்றியோ, எங்கள் வீட்டைப் பற்றியோ, எந்த ஒரு தகவலும் அப்போது 

தெரியாது. அது முதல் எங்கள் குடும்பம் முழுவதும்  ஸ்ரீ ஞானஸ்கந்த 

மூர்த்தியைச் சரணடைந்து விட்டோம். ஜீவ நாடியில் வரும் வாக்கின் படி 

நடந்து வருகிறோம்.

 நன்றி

சம்பூர்ணம் கேரளா 

                                   “ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 24!



   ஒரு 70 வயதான பெரியவர் தனது பேரனுக்கு நாடி கேட்டதை சென்ற

இதழில் எழுதியிருந்தேன். தனது பேரனுக்கு மிகப் பிரமாதமான முறையில்

ஜீவ நாடியில் அருள்வாக்கு 100% அப்படியே துல்லியமாக வந்ததால்

தனக்கும் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார் பெரியவர். சரி

முருகனது விருப்பம் என்று சுவடியைப் பூஜித்துப் பிரித்தேன். பின்வரும்

பாடல் வந்தது.

முன் ஜென்ம தொடர்புடைய

முருகனது பக்தன்

முருகனுக்கு ஆலயம்

முழு அளவில் அமைக்க

முழுத் திட்டம் வெற்றியாகும்

முன்னவன் மூத்தவன்

முந்தி பூஜை கொள்பவன்

முழுமுதற் கடவுளாம்

மூஷிக வாகனன் தனக்கு

முதன்மையாய் ஆலயம்

முதலிலே கொண்டாய்

முன்னர் மூஷிகமும் உண்டு

முள்செடியில் நீலநிறப் பூ உண்டு

முக்கியமாய் நீர்த்தேக்கம் உண்டு

மூவான திசையிலும்

முதன்மையாய் குருவுண்டு

முக்கிய துர்க்கை உண்டு

முந்தி வழிபடும் குந்தத்திற்கு

முன்னே வழியில்லையே ஏன்?”

   இதைப் படித்த பின்பு அதிர்ந்து போனேன். வயதில் மூத்தவராக

இருந்தாலும் கண்ணீர் மல்கினார். போற்றினார். புளங்காயிதம் அடைந்து

புத்துணர்ச்சி கொண்டு குதூகலித்தார். இப்படியும் நடக்குமா? என்று

எண்ணி எண்ணி உவகைக் கொண்டார்.

   காரணம் இவர் ஒரு ஆலயம் கட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக

முருகன் ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்து

வந்திருக்கிறார். ஆனால் அதற்கு வழி கிட்டவே இல்லை. எனவே முதலில்

விநாயகருக்கு அதுவும் வலம்புரி விநாயகருக்கு ஆலயம் கட்டி அதற்கு

முன்பு மூஷிக வாகனம் பிரதிஷ்டை செய்து வலப்புறம் தட்சிணாமூர்த்தி,

பின்புறம் விஷ்ணு, இடப்புறம் துர்க்கை என கோஷ்ட தெய்வங்களை

வைத்து பூஜித்து வருகிறார்.

   இந்த விஷயம் எதுவுமே எனக்குத் தெரியாது. இவர் யார் எந்த ஊர்

என்று கூடத் தெரியாது. ஆனால் நீல நிறப் பூ பூக்கும், அருகில்

நீர்த்தேக்கம் உண்டு. வலம்புரி கணபதி உண்டு என்று நேரில் சென்று

பார்த்தது போல் 100க்கு 100 துல்லியமாக உரைத்ததால் அவரை

அவராலேயே நம்ப முடியாமல் திக்கு முக்காடி அந்த கந்தவடிவேலன் தன்

மீது காட்டிய கருணையைக் கண்டு மெய்சிலிர்த்தார்.

 
 எனது அண்ணனான கணபதிக்கு கோவில் எழுப்பிவிட்டாய். நானும்

அருகில் கோவில் கொள்ள விரும்புகிறேன் என்று முருகன் உரைத்த

உடனேயே இன்னும் மெய்சிலிர்த்தார். நடு நடுங்கிப் போய்விட்டார். இது

எப்படி சாத்தியம் என்று எண்ணி முருகா முருகா என்று கூக்குரல் இட்டு

அழுதார். தொழுதார். இவரது மனைவி இவரை தேற்றினார். உடன்

இருந்தவர்களும் ஏதோ ஒரு சக்தி ஆட்கொள்வதை உணர்ந்து உவகையிலும்,

உள்ளப் பூரிப்பிலும் உற்ற துணை நீயே உமைபாலனே, கந்தனே, வேலனே

என்று துதித்தார்கள். இவர்கள் துதித்த துதியில் மகிழ்ந்த முருகப்பெருமான்

ஜீவ நாடியில் மேலும் உரைத்தார்.

“சங்கடம் நீக்கும்

சதுர்த்தியது தோறும்

சரியான பூஜை

சாயுங்காலம் கொள்”

   என்று உரைத்தார் முருகப் பெருமான். அதாவது அந்த விநாயகர்

கோவிலில் சங்கடஹர சதுர்த்தி தோறும் அந்தி சாயுங்காலமான மாலை

வேளையில் பூஜை செய்து வா என்றார் முருகப் பெருமான். சுவாமி,

எனக்கு விபரம் தெரிந்தது முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையை மட்டுமே

மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் செய்து வருகிறோம். வேறு எந்த

நாளிலும் பூஜையில்லை என்றனர். மிகச் சரி அதுவே போதும் என்று

உரைத்தேன்.

   அந்த ஆலயத்தில் இந்த பூஜை மட்டுமே நடப்பதை முருகப் பெருமான்

நாடியில் துல்லியமாக உரைத்ததால் சந்தோஷம் இன்னும் இரட்டிப்பானது.

மேலும் உரைத்தார் முருகப் பெருமான்.

“குந்தமென ஆயுதம்

குமரனவன் என்கையில்

குதூகலமது தரும் ஆயுதம்

குவலயத்தில் இதற்கு மேலாயுதமில்லை

குந்தமெனும் வேலாயுதம் தனை

குறைவில்லா மூவிரண்டு அடியாக

கணபதிக்கு பின்புறம்

கச்சிதமாய் பிரதிஷ்டை செய்

குராவடிக் குமரனைத் தொழுது

இளையனார் வேலூர் என்ற ஊர்

உண்டங்கு சென்று அதிகார வேல் உண்டு

அர்ச்சித்து வா போதுமே

குடும்பத்தை யாம் காப்போம்

குறை நீக்குவோம் விரைவில்

கோவிலது கொள்ளுவேமே ஆசி!”

   இப்போது கந்த வடிவேலன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆறு

அடியில் வேல் செய்து கணபதிக்கு அதற்கு முன் அந்த வேலை

இளையனார் வேலூரில் உள்ள அதிகார வேலிடம் இட்டு பூஜித்து பின்பு

ஸ்தாபிதம் செய்ய வேண்டும். அவ்விதம் ஸ்தாபிதம் செய்து பூஜித்து

வந்தால் விரைவில் முருகப் பெருமான் கோவில் கட்ட வழி பிறக்கும்

இதைக் கேட்டதும் அந்தப் பெரியவர் முருகா உனக்குக் கோவில்

கட்டவே யாம் உயிருடன் இருக்கிறேன். எனக்கு ஆயுளையும்,

அதிசக்தியையும் தந்து நீயே உடனிருந்து நடத்த வேண்டும் என்ற

கோரிக்கையை வைத்தார். முருகப் பெருமான் ஆசி என்றார்.

    யாரோ ஒருவர் வந்து அமர்கிறார் உனக்கு அது நடக்கும், இது

நடக்கும் என்று சொல்லாமல் உள்ளது உள்ளபடி கூறி உமைபாலன் கந்தன்

ஜீவ நாடியில் நெற்றியடி அடித்துவிட்டார். ஜாதகம் பார்க்கவில்லை, இராசி,

நட்சத்திரம் கேட்க வில்லை. நவ கிரங்களையும் ஆய்வு செய்யவில்லை.

திசா, புத்தி கணிக்கவில்லை. காரணம் இதில் எனது ஜோதிடத் திறமை

எதையும் நான் கையாளவில்லை. ஒரு மீடியமாக அமர்ந்து சுவடியில்

என்ன வருகிறதோ அதை மட்டுமே படித்தேன். ஜாதக ஆராய்ச்சி

செய்திருந்தால் கூட இவ்வளவு துல்லியமாக வருமா? என்பது சந்தேகமே.

எனவேதான் மனித சக்திக்கு மேற்பட்ட அமானுஷ்ய சக்திகளை மக்கள்

பெரிதும் விரும்புகின்றனர். பெரியவர் பூரிப்புடன் மரியாதை செய்து

வணங்கி விடைபெற்றார்.

                           “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தைப்பூசம்!!!



தைப்பூசம் என்றால் என்ன?

தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால், பழநியில் மட்டும் முருகன் கோயிலில் இவ்விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா!பழநிமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், அம்பாள் சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி உள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலுள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாள் கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில், தைப்பூசத்திருநாள் முருகனுக்குரியதாக மாறி விட்டது. தற்போதும் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்கிறார்.ஆனாலும், பக்தர்கள் மலை மேல் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர்.


தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?

நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

தைப்பூச திருநாளில் சிறப்பு!

தைப்பூசம். பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக நீரும், அதிலிருந்து உலகமும் தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள். சூரபதுமனை அழிக்க ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பிரம்மவித்யா சொரூபமான வேலாயுதத்தை சக்திதேவி தந்ததும் இந்த நாளில்தான். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தாமிரபரணியின் கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த திருநாளும் இதுவே. தைப்பூசத்தன்று நெல்லைப்பர் கோயில் விழாக்கோலம் காணும்.

திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.தைப்பூச திருநாளில்தான் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்பித்ததாக விவரிக்கிறது மயிலாப்பூர் தலபுராணம்.

பூச நட்சத்தரத்தின் பிரதான தேவதை குரு பகவான். ஆகவே, தைப்பூசத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும். 1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் வடலூரில் ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளாலர் ஜோதியில் கலந்தும் ஒரு தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.


                                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி அற்புதம் (உண்மைச்சம்பவம்)



விஜயத்தைப் பெயராக உடைய குமாரமான அடியார் ஒருவர் சுமார் 10

ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும், ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடமும் சேவை செய்து வருகிறார். ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம்

தீட்சை பெற்று இவரும் முருக உபாசனை செய்து வருகிறார். இவருக்கு

சென்ற வாரம் ஒரு அதிசயம் நடந்தது. விடியற்காலையில் எழுந்து ஜபம்

செய்வது இவரது வழக்கம். ஸ்ரீ ஸ்கந்த உபாசகரும் அவ்விதமே செய்யச்

சொல்லி இருக்கிறார். விடியற்காலையில் எழுந்து தர்ப்பை ஆசனத்தில்

அமர்ந்து தீட்சைகொடுக்கும் போது வலது செவியில் சொல்லப்பட்ட

மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என்பது இவருக்கு உபதேசம். அப்படியே

மாறாமல் செய்து வந்தார். அன்று அதிகாலை ஜபம் செய்ய எழும் முன்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் இவரைத் தட்டி எழுப்பி எழுந்து ஜபம் செய் எனச் சொல்ல

இவரும் அவ்விதமே செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகரும் இவர் அருகிலேயே ஜீவ

நாடி சுவடியுடன் அமர்ந்து கொண்டு ஜபம் செய்திருக்கிறார். ஜபம் முடிந்த பின்

விடிந்துவிட்டது எனத் தெரிந்து அருகில் பார்க்க அங்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர்

இல்லை. இது கனவும் இல்லை. நன்கு விழிப்பு நிலையிலேயே இந்த சம்பவம்

நடந்திருக்கிறது. பின் எப்படி இது சாத்தியம் என எண்ணிய அடியவர்

ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் இந்த தகவல்களைச் சொன்னார். அப்போது அந்த

நேரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் தனது வீட்டில்தான்இருந்ததாகவும்அன்று

எங்குமே செல்லவில்லை எனவும் கூறி இது அந்த ஞானஸ்கந்த மூர்த்தியின்

திருவிளையாடல்களாகத்தான் இருக்கும் என்று எண்ணி உடனே

முருகப்பெருமானை வேண்டி ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கேட்கலாம் என்ற

யோசனை சொன்னார். சொல்லி முருகனைப்பூஜித்து ஜீவ நாடி

சுவடியைப்பிரிக்க பின்வரும்பாடல்வந்த்து.

”உபாசகனது வடிவில்வந்ததுவும்

உமை மைந்தன்நானே

உற்றதொரு சாட்சியம்

உன்வீட்டின்வடகிழக்கில்

உதித்ததொரு துளசி செடி

உத்தமமாய் வெள்ளியில்

உயர்வாக விளக்கிட்டு வா

உயரிய சுவற்றில்உள்ள சித்ரபடம்

உடைந்த்துவும்உண்மையன்றோ

ஆசி! ஆசி! ஆசி! ”

ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் வந்தது முருகப் பெருமானே என்றும், உன்

வீட்டின் வட கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு துளசி செடி முளைத்து

இருக்கிறது என்றும்அதை வெள்ளி தோறும்விளக்கிட்டு பூஜித்து வா என்றும்,

வீட்டில் சுவரில் மாட்டி வைத்துள்ள படம் ஒன்று விழுந்து சுக்கு நூறாக

உடைந்தது என்றும் அதை சரி செய்து கொள் என்றும் முருகப் பெருமான்

ஜீவ நாடியில் உரைத்ததுவும் அவருக்கு நம்ப முடியாப் பேரதிர்ச்சியாக

இருந்த்து. முருகப் பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் இவர் வீட்டிற்கு

சென்றது உண்மை என உறுதிப்படுத்தவே மேலே உள்ள தவல்களைச்

சொல்லி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் துளசி செடி

முளைத்து இருப்பதும், சுவாமி படம் சுக்கு நூறாக விழுந்து உடைந்து

இருப்பதும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகருக்கு தெரியாது. மனத் தூய்மையோடு

முருகனுக்கும் முருகன் அடியார்களுக்கும் சேவை செய்து பூஜித்து வந்தால்

அந்த முருகன் இவ்விதமெல்லாம் திருவிளையாடல்களை நடத்துவார்

என்பதும் நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகன் தோன்றி

வாக்குரைக்கிறார் என்பதும் உறுதியாகிறது.

                                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!

சனி, 31 ஜனவரி, 2015

ஜீவ நாடி பேரதிசயம் (உண்மைச்சம்பவம்)



மும்பை அகத்தியர் அடியவர் திரு. கணேசன் ரத்தினம் என்பவருக்கு 25.1.2015

ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது.

அப்போது வந்த பாடல். அவரைப் பற்றி எதுவுமே ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு

தெரியாது. ஆனாலும் அவர் அகத்தியர் அடியவர் என்பது மட்டும் தெரியும்.

முருகப்பெருமான் அவரை ஒரு இல்லறவாசி என்றும் சன்னியாசி இல்லை

குடும்பத்தில் இருந்து கொண்டேதான் இறை சேவை செய்வார், இவர் வீட்டில்

அகத்தியை சிலை உண்டு, குறிப்பாக அகத்தியரே இவருக்கு கொடுத்த

யோக தண்டம் உண்டு அந்த தண்டத்தை அடிக்கடி அக்த்தியர் சூட்சுமமாகத்

தொட்டு செல்கிறார், இவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு, இவர் தனுசு

ராசியில் பிறந்திருப்பார், இப்போது ஏழரை சனி என்றாலும் சித்தர்களை

பூஜிப்பவர்களுக்கு ஏழரை சனி ஒன்றும் செய்யாது, இவரது பிறப்புறுப்பில்

சிறு மச்சம் உண்டு, இவ்ர் முன் ஜென்மத்தில் அகத்தியர் அடியவர், சீடன்,

அகத்தியர் மைந்தன் இவர் ஆறுமுக ருத்திராட்சம் போட வேண்டும்,

அக்த்தியர் இவரிடம் ஒலி வடிவில் பேசி வருகிறார், அகத்தியர் சொன்னபடி

இவர் சிவப்புக் கடுக்கண் அணிய வேண்டும், 55 வயது பின்னால் அபூர்வ

ஆன்மீக யோகம் உண்டு, சித்ர பட வடிவில் சிவலிங்கம் உண்டு, அகத்தியர்

இவர் மூலம் பல அரிய சித்தாடல்களை நட்த்துவார் போன்ற ரகசியங்களை

100% மிகத் துல்லியமாக முருகப் பெருமான் ஜீவ நாடி மூலம் உரைத்தார்.

அடுத்து பல ரகசியங்களை வைகாசியிலே உரைப்பதாகவும் உரத்திருக்கிறார்

முருகப்பெருமான்.

ஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடியில்வந்த பாடல்:

இடமான நலமான முறையான வகையான

கண்டதிவன்எதிர்காலச்சிறப்புரைப்போம்கேள்

மகிமை புகழ்கடுக்கண்அதை

முனிவனவன்அணியச்சொன்னது

முன்னேற்ற நலமே அணியலாம்நட்பு

இளமை முதல்என்சீடன்ஆசியது

இவனுக்கும்உண்ணுண்டு செப்பு

ஆனதால்மூவான சந்தானம்

அடுத்தடுத்து கொடுத்தோம்

கொடுத்ததுவும்செழிக்கும்

செழிக்குமது இனிக்கும்

இனிக்குமது இவன்வாழ்வு

இல்லறத்தோடு ஆன்மீகம்

பூரணசன்னியாசி இல்லையே

பூவுலகில்புண்ணியங்கள்

பல செய்து பல செய்து

பலர்வாழ்வை சீராக்குவான்

இல்லத்தில்இன்முகமாய்

இனிமையாய்சிரிக்கின்ற

சிலை உண்டு குருமுனிவன்தனக்கு

சீராக பூஜையும்உண்டுண்டு நட்பு

யோக தண்டம்தந்ததுவும்அகத்தியன்

ஆதலால்சூட்சுமமாய்அதில்அக்த்தியனும்உண்டே

அந்த யோகதண்டம்கையிலே அடிக்கடி இவன்தொடுவான்

இடுக்கன்பல களையும்மார்க்கம்தேடி வரும்மக்களுக்கு

இன்முகத்தோடு அருள்வாக்கு போலும்

அகத்தியன்வாக்குரைப்பான்இவனிடம்

என்சீடனின்சீடன்இவன்முன்சென்மத்திலே

அகத்தியனின்மைந்தன்இவன்

வாக்கு பலிக்கும்வரம்கிடைக்கும்

இவன்வம்சம்தழைக்கும்

இல்லறத்தாள்இவன்மனைவி அடிக்கடி

மூட்டு வலி முதுகு வலி இடுப்புவலி

என வலியால்அவதிப்பட்டாளும்

அவளுக்கும்ஆயுள்தீர்க்கமாமே

அஞ்சிடாதே நலமுண்டு

சிவலிங்கம்உண்டு இவன்வீட்டில்

சித்ர பட வடிவில்சிறப்புண்டு

சேவித்து வா சிறப்பாகும்

ஆறுமுக ருத்திராட்சம்போடுவது நல்லதே

சிவப்பு கடுக்கண்அணிந்து கொள்

ஐம்பாணம்ஐந்து பின்அபூர்வ ஆன்மீகமாமே

வில்லதிலே பிறந்து சொல்லதிலே அகத்தியன்

வந்து சொல்லிடும்நிலை பெர்றுவான்கேள்

ஏழரை சனி காலம்என்ன செய்யும்இவனை

சித்தர்கள்பூஜையது செய்வதாலே

சிவலிங்கம்ஒட்டி இவன்சிறுமச்சம்

சிறு அளவில்கொண்டதாலே

சிவன்மைந்தன்அகத்தியனோடு

போகனும்பதஞ்சலியும்மறந்திடாதே

நவமிரண்டு சித்தர்களும்நலம்அருள உள்ளதால்

நலமாக ஒலி வடிவில்உரைத்து வரும்முனிவனின்

நல்வாக்கை கடைபிடித்து வா போதுமே

மற்றவை பலவற்றை பாங்காகப்

பக்குவமாய்ப்பகர்ந்திடுவோம்

விசாகமது கொண்ட வைகாசித்திங்களிலே

ஆசி! ஆசி! ஆசி!

• இவர் பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து

அகத்தியர்அருளால்கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை

தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம்

செய்தவர்.

•பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக

தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர்

• ஒருமுறை திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது

இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு

தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர்

கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர்

முன்பு பெரிய தாடியுடன்அகத்தியர்தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

• நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த

அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார்.

• அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால்

கருவுறும்பாக்கியத்தைக்கொடுத்து இருக்கிறார்

• இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு

இவருக்கு சரியாக வரவில்லை.

• 24.01.2015 அன்று அகத்தியர் நீகடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று

சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று

சொல்லியிருக்கிறார்.

• உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை

என்று இவர் மனதில் பட உடனே ஸ்ரீஸ்கந்த உபாசகரைத் தொடர்பு

கொண்டார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகரும் முருகனிடம் உத்தரவு கேட்க என் சீடனின்

சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க ஸ்ரீஸ்கந்த உபாசகரும்

இவருக்கு ஜீவ நாடி படித்தார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து

வர வேண்டும் என்ற உத்தரவு வர அதற்கு தகுந்த நபர் மும்பை

கணேசன்தான் என எண்ணி மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

மும்பை கணேசனிடம்ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றியும்ஸ்ரீஞானஸ்கந்தர்

ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்ல நான்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பொதிகை செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று

மும்பை கணேசன் சொல்ல இத்தனை அதிசயங்களை அந்த அகத்தியரும்

முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள். இதுதான் ஜீவ நாடி படித்த

பிண்ணனி ஆகும்.

• நாடியில் முருகன் உரைத்த பின்பே இந்த தகவல்கள் மும்பை கணேசன்

அவர்களால் பகரப்பட்டது. அதன் முன்பே இத்தனை ரகசியங்களை

முருகன்ஜீவ நாடி மூலம்உரைத்து விட்டார்.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!!!!!!!!