நாங்கள் கேரளாவில் வசிக்கும் ஒரு குடும்பம். நாங்கள் ஸ்ரீ
ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது ஸ்ரீ
ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அருள்வாக்கு வந்தது. அதில் ஸ்ரீ ஸ்கந்த
உபாசகர் எங்களுடைய வீட்டின் முன்பு மா மரம் ஒன்று இருப்பதையும்,
அதில் பூ, காய் ஒன்றும் இல்லாததையும் குறிப்பிட்டு, பின் வீட்டின்
பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோ சுவற்றில் நன்கு
ஒட்டப்படாமல் இருந்ததையும், உரைத்தார். பின் வீட்டில் பச்சை கலர் மூடி
போட்ட பாக்ஸில் சாப்பிடுவதற்கான பொருள் இருந்ததையும், பின்
வீட்டிற்க்கு பின்புறம் ஏதோ ஒரு மிருகம் ஒன்று தெரிகிறது அது என்ன
என்றும் கேட்டார். நாங்கள் அந்த மிருகத்தை பார்த்திருக்கிறோம். அதை
கேரளாவில் மரப்பட்டி என்று அழைப்பதுண்டு. அது ஜீவ நாடி
அருள்வாக்கில் வந்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும்,
ஆச்சரியமாகவும், இருந்தது. ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கோ எங்களைப்
பற்றியோ, எங்கள் வீட்டைப் பற்றியோ, எந்த ஒரு தகவலும் அப்போது
தெரியாது. அது முதல் எங்கள் குடும்பம் முழுவதும் ஸ்ரீ ஞானஸ்கந்த
மூர்த்தியைச் சரணடைந்து விட்டோம். ஜீவ நாடியில் வரும் வாக்கின் படி
நடந்து வருகிறோம்.
நன்றி
சம்பூர்ணம் கேரளா
“ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”
it very nice one
பதிலளிநீக்குஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ