ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி அற்புதம் (உண்மைச்சம்பவம்)



விஜயத்தைப் பெயராக உடைய குமாரமான அடியார் ஒருவர் சுமார் 10

ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும், ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடமும் சேவை செய்து வருகிறார். ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம்

தீட்சை பெற்று இவரும் முருக உபாசனை செய்து வருகிறார். இவருக்கு

சென்ற வாரம் ஒரு அதிசயம் நடந்தது. விடியற்காலையில் எழுந்து ஜபம்

செய்வது இவரது வழக்கம். ஸ்ரீ ஸ்கந்த உபாசகரும் அவ்விதமே செய்யச்

சொல்லி இருக்கிறார். விடியற்காலையில் எழுந்து தர்ப்பை ஆசனத்தில்

அமர்ந்து தீட்சைகொடுக்கும் போது வலது செவியில் சொல்லப்பட்ட

மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என்பது இவருக்கு உபதேசம். அப்படியே

மாறாமல் செய்து வந்தார். அன்று அதிகாலை ஜபம் செய்ய எழும் முன்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் இவரைத் தட்டி எழுப்பி எழுந்து ஜபம் செய் எனச் சொல்ல

இவரும் அவ்விதமே செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகரும் இவர் அருகிலேயே ஜீவ

நாடி சுவடியுடன் அமர்ந்து கொண்டு ஜபம் செய்திருக்கிறார். ஜபம் முடிந்த பின்

விடிந்துவிட்டது எனத் தெரிந்து அருகில் பார்க்க அங்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர்

இல்லை. இது கனவும் இல்லை. நன்கு விழிப்பு நிலையிலேயே இந்த சம்பவம்

நடந்திருக்கிறது. பின் எப்படி இது சாத்தியம் என எண்ணிய அடியவர்

ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் இந்த தகவல்களைச் சொன்னார். அப்போது அந்த

நேரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் தனது வீட்டில்தான்இருந்ததாகவும்அன்று

எங்குமே செல்லவில்லை எனவும் கூறி இது அந்த ஞானஸ்கந்த மூர்த்தியின்

திருவிளையாடல்களாகத்தான் இருக்கும் என்று எண்ணி உடனே

முருகப்பெருமானை வேண்டி ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கேட்கலாம் என்ற

யோசனை சொன்னார். சொல்லி முருகனைப்பூஜித்து ஜீவ நாடி

சுவடியைப்பிரிக்க பின்வரும்பாடல்வந்த்து.

”உபாசகனது வடிவில்வந்ததுவும்

உமை மைந்தன்நானே

உற்றதொரு சாட்சியம்

உன்வீட்டின்வடகிழக்கில்

உதித்ததொரு துளசி செடி

உத்தமமாய் வெள்ளியில்

உயர்வாக விளக்கிட்டு வா

உயரிய சுவற்றில்உள்ள சித்ரபடம்

உடைந்த்துவும்உண்மையன்றோ

ஆசி! ஆசி! ஆசி! ”

ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் வந்தது முருகப் பெருமானே என்றும், உன்

வீட்டின் வட கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு துளசி செடி முளைத்து

இருக்கிறது என்றும்அதை வெள்ளி தோறும்விளக்கிட்டு பூஜித்து வா என்றும்,

வீட்டில் சுவரில் மாட்டி வைத்துள்ள படம் ஒன்று விழுந்து சுக்கு நூறாக

உடைந்தது என்றும் அதை சரி செய்து கொள் என்றும் முருகப் பெருமான்

ஜீவ நாடியில் உரைத்ததுவும் அவருக்கு நம்ப முடியாப் பேரதிர்ச்சியாக

இருந்த்து. முருகப் பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் இவர் வீட்டிற்கு

சென்றது உண்மை என உறுதிப்படுத்தவே மேலே உள்ள தவல்களைச்

சொல்லி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் துளசி செடி

முளைத்து இருப்பதும், சுவாமி படம் சுக்கு நூறாக விழுந்து உடைந்து

இருப்பதும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகருக்கு தெரியாது. மனத் தூய்மையோடு

முருகனுக்கும் முருகன் அடியார்களுக்கும் சேவை செய்து பூஜித்து வந்தால்

அந்த முருகன் இவ்விதமெல்லாம் திருவிளையாடல்களை நடத்துவார்

என்பதும் நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகன் தோன்றி

வாக்குரைக்கிறார் என்பதும் உறுதியாகிறது.

                                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!

1 கருத்து:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு