வியாழன், 5 மே, 2016

கௌமார குமரகுரு IAS அகாடமி துவங்கப்பட உள்ளது

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆணைக்கிணங்க அவர்கள் ஆசியுடன் 09.06.2016 வியாழன் அன்று கௌமார குமரகுரு IAS அகாடமி துவக்கங்கப்பட உள்ளது. மைய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று அரசுப்பணிகளை ஏற்க இம்மையம் பயிற்சியளிக்கிறது.வங்கிப்பணிக்கும் நல்ல பயிற்சி அளிக்கப்படுகின்றன. நல்ல விழுமியங்களை உடைய அரசுப்பணியாளர்கள் அரசுப்பணிகளை ஏற்க வேண்டும் என்பதே இந்த அகாடமியின் தலையான நோக்கம். அனுபவமிக்க சிறந்த கல்வி வல்லுனர்கள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்பு கொள்ள:
திரு நஞ்சன், நிர்வாக அலுவலர் அலை பேசி எண்:  9443604168
கௌமாரச் செல்வி அ.மரகதம்   அலை பேசி எண்: 9894764557
திரு.இராமானந்தன் அலை பேசி எண்: 9842260609
திரு.ரமேஷ் (எ) மயூரநாதன் அலை பேசி எண்: 9636158914
                                             தவத்திரு குமர குருபர சுவாமிகள்
                                                                   தலைவர்
                                          கௌமார மடாலயம், கோயம்புத்தூர்.

முனைவர்.கி.குமாரசாமி, முதன்மைக்கல்வி ஆலோசகர்
முனைவர் பி.கனகராஜ், முதன்மை ஆலோசகர்
முனைவர் பி.கனகசபாபதி, முதன்மைத் திட்ட ஆலோசகர்

பயிற்சியில் சேர முன்பதிவு செய்து கொள்ள மேலே உள்ள அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 28 ஏப்ரல், 2016

பஞ்சேஷ்டியில் தீப வழிபாடு நடத்த நாள் உரைத்த ஜீவ நாடி


                                                             
                                  தீபம் ஏற்றி தொடங்கி வைக்கும் சித்தர் சுவாமிகள்
சென்னை வெள்ளம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் கொடுத்த பேட்டி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதாவது இன்னும் அதிகமான வெள்ள பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டும் என்பதே அது. அந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சித்தரிடம் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வெள்ளத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களைக் காக்க என்ன வழி என்று கேட்டனர். அதற்கு பஞ்சேஷ்டி எனும் தலத்தில் அதிகமாக தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என்று சித்தர் பதில் உரைக்க சிறு ஆறுதல் கிடைத்தது. இந்த தகவல்களை அறிந்த காரைக்குடி அகத்தியர் திருமைந்தன் ஐயா அவர்கள் மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் ஐயா உட்பட பல நபர்களுடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சென்று நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளிடம் பஞ்சேஷ்டியில் எந்த நாளில் தீபம் ஏற்றினால் இயற்கைச்சீற்றம் குறையும் என்று ஞானஸ்கந்தர்  ஜீவ நாடியில் முருகப்பெருமானிடம் கேட்டு உரைக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடியில் முருகனிடம் கேட்டு சித்ரா பௌர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று உரைத்தார்கள். அவ்விதமே அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் குழுவினர் வேல் தீபம், சக்திகல தீபம் பிரமிடு தீபம் சிவ லிங்க தீபம் என 2108 தீபங்களை ஏற்றி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தினார்கள். ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை இருந்ததால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் இந்த தீப வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் அமாவாசை அன்று ஒரு நாள் மட்டுமே கருவறையை விட்டு வெளியே வரக்கூடியவர் இந்த தீப வழிபாட்டை துவங்கி வைத்து ஆசி கூறியது மிகவும் ஆச்சரியாமாக இருந்தது என்று அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். உலக நன்மைக்காக ஜீவ நாடியில் நாள் உரைத்து தீப வழிபாட்டிற்கு அருள் கொடுத்த ஞானஸ்கந்த மூர்த்தியை அனைவரும் ஒரு நிமிடம் கண்மூடி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம். அதன் படங்களில் சில....




ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-47


அதிருகின்ற கழல்களை அணிந்திருக்கின்ற உனது திருவடிகளைப் பணிந்து வணங்கும் உனது அடியேனாகிய  நான் அபயம் நீயே  என்று உண்மையாகிய  நிலையைக் காணுமாறு எனது இதயத்தில் இருந்து கிருபையாகிய கருணை புரிந்து எனது இடர்களும் சங்கையாகிய சந்தேகங்களும் கலங்கி ஒழிந்துபோகுமாறு அருள்வாயே. 
                                           
உமக்கு எதிராக ஒருவருமில்லாமல்  நடனமாடும் இறைவனாகிய சிவபெருமானின் ஒரு பாகமாகிய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் பாலனே, 
                                                      
பதிகள் எங்கிலும் இருந்து விளையாடி, பல குன்றுகளிலும் அமர்ந்த பெருமாளே என்று நமது கௌமார குரு நாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடியே திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக மலர்கின்றது.
                                               
திருப்புகழ்
அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
     அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து  க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி  நடமாடும்
     இறைவன் தனது பங்கி  லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து  விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த  பெருமாளே 

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                          
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

திங்கள், 25 ஏப்ரல், 2016

நாய் வளர்க்க அறிவுறுத்திய ஜீவ நாடி

                       தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
எழுத்துக்கள் எதுவுமே எழுதப்படாத வெறும் பனை ஓலையில் ஒளி வடிவிலும் வரி வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து ஜீவ நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் கரைக்கும்படியும் பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். உண்மையான ஜீவ நாடி என்பது  கலியுகத்தில் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். நாடி ஜோதிடம் என்றாலே முகம் சுளிக்கின்ற ஒரு நிலையை தவறு செய்பவர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜீவ நாடியைப் பொறுத்தவரை எந்தவித எழுத்துக்களும் இல்லாமல் யாராலும் எழுதப்படாமல் சித்தர்களும் தேவதைகளும் தோன்றி வாக்குரைப்பதாகும். இது அருள்வாக்கு எனும் பட்டியலிலும் இடம் பெறாது. அருள்வாக்கு என்பது உள்ளுணர்வினால் உரைப்பது. ஜீவ நாடி என்பது ஓலைச்சுவடியில் தோன்றும் சித்தர்களால் உரைப்பது. ஜீவ நாடி படிக்க பூர்வ ஜென்ம தவவலிமையோடு மிகுந்த ஒழுக்கம் தேவையாகும். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் பற்றி அனைவருமே நன்கு அறிவார்கள். தவ வலிமையோடு சீரிய ஒழுக்கம் உடையவர். முன் ஜென்ம கௌமார நெறியில் வந்தவர். இப்படி தொழில் முறையில் அல்லாமலும் வியாபார ரீதியில் அல்லாமலும் அருள் நோக்கிலேயே நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செயல்பட்டு வருவதால்தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையை எந்தவித விமர்சனங்களும் இன்றி செய்ய முடிகின்றது என்பது நிச்சயம், நிதர்சனம். சத்தியமான உண்மையாகும்.இப்படி இருக்கின்ற நிலையில் ஒருவர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் நிலையில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஜீவ நாடி கேட்டு தற்போது விரைவில் குழந்தை பிறக்கின்ற நிலையில் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிகாரங்கள் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டு இப்போது இன்னும் ஒரு மாதத்தில் முருகன் அருளால் குழந்தை பிறக்க இருக்கின்றது. அவருக்கு மீண்டும் ஜீவ நாடி உரைக்கும் போது ஓலைச்சுவடியில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு ஒரு நாய் வடிவம் காட்சி கொடுத்திருக்கின்றது. அதைப்பார்த்த சுவாமிகள் உன் வீட்டில் இருக்கும் வயதான நாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்து வளர்க்குமாறு உரைத்த உடனேயே வந்தவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம் இது பற்றி சுவாமிகளுக்கு ஏற்கனவே தெரியாது.சுவாமி உண்மைதான் இப்போது இருக்கும் நாய் வயதாகிவிட்டதால் படுத்த படுக்கையாக இருக்கின்றது என்பதால் சென்ற வாரம் தான் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்ய பணம் கொடுத்திருக்கின்றேன் என்றார். அதற்கு நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அதுதான் நல்லது குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் ஒரு நாய் வளர்க்கத் துவங்கினால் அது பைரவர் ஆசியைப் பெற்றுத்தரும் என்று உரைத்தார்கள். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் மகிமை தெரிவதில்லை. அருளாளர்கள் நம் சுவாமிகளிடம் இருக்கின்ற சக்தியை உணார்ந்து பலன் அடைகின்றார்கள் என்பது கண்கூடு.

                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அரசு பணி கிடைக்க அருள் புரிந்த ஜீவ நாடி

                                                  ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே 100% பலித்து வருகின்றது. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களுக்கு முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் வாக்குரைத்து வளமான வாழ்வைத் தந்தருள்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தமது 13 வயது முதலாகவே முருக உபாசனை செய்து இந்த ஜீவ நாடி படிக்கின்ற தவ வலிமையைப் பெற்று இருக்கின்றார்கள். இந்த விதமாக ஒரு இளைஞர் ஜீவ நாடி கேட்க ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளை வணங்கி அமர்ந்தார். அந்த இளைஞனுக்கு உடனடியாக அரசுப் பணி கிடைக்கும் என்று வாக்கு உரைத்தார். அந்த இளைஞர் மகிழ்ச்சியடைந்தார். அதே போல் அரைஞான் கயிறு அணியாமல் இருக்கின்றாய் அது உனக்கு நலமல்ல உடனே அரைஞான் கயிறு அணிந்து கொள்ளவும் என்று அறிவுரை முருகப்பெருமான் ஜீவ நாடியில் சொல்வதாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் உரைத்த உடனேயே அந்த இளைஞனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தாம் மட்டுமே அறிந்த இந்த இரகசியத்தை முருகன் உரைத்து விட்டாரே என்று சொல்லி கண்ணீர் மல்கினார் அந்த இளைஞர். இப்போது அந்த இளைஞனுக்கு ஜீவ நாடி மீது நம்பிக்கை வந்தது. அடுத்து சில ஆலயப்பரிகாரங்களை உரைத்து இதை செய்து விட்டு அடுத்து ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வந்து கேட்கும்படி முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தார். பரிகாரங்களைப் பொறுத்தவரை மக்களது கர்ம வினைகளைத் தீர்க்கும் நோக்கிலேயேதான் முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைக்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு சிறு வயது முதலாகவே பொருள் மீது பற்று இல்லை. அவர் நினைத்திருந்தால் ஜீவ நாடி மூலம் பல லட்சங்களை ஈட்டியிருக்க முடியும். எனவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் எந்த விதமான பரிகாரங்களையும் தாம் செய்து தருவது கிடையாது. அதேபோல் மூலிகை ரட்சைகள் போன்ற பொருட்களையும் உரிய நபர் மூலம் மக்கள் பெற வேண்டும் எனும் நோக்கில் உதவி மட்டுமே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செய்கின்றார். இந்த கலி யுகத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். இதைப் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை நேரில் சந்தித்துப் பயன் அடைந்தவர்கள் நன்கு அறிவார்கள். காணிக்கை இல்லாமல் ஜீவ நாடி உரைத்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்பட்டு ஜீவ நாடி உரைப்பவருக்கும் கேட்பவருக்கும் தோசம் ஏற்படும் என்பதால் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டே ஜீவ நாடி உரைக்க வேண்டும் எனும் குரு உத்தரவின்படியும் ஜீவ நாடியில் முருகனின் வாக்கின் படியும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொள்கின்றார்கள். அதையும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது கண்கூடு. தனது குடும்ப தேவைக்கு என தனது எம்.சி.ஏ எம்.பில் படிப்புக்கேற்ற தொழில் செய்கின்றார். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடியே அந்த இளைஞர் ஆலயப்பரிகாரங்களை செய்து உடனடியாக அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆச்சரியமான உண்மையாகும். அது மட்டுமல்லாது அரைஞான் கயிறையும் அணிந்து கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளையே குருவாக ஏற்று வாழ்வில் ஏற்றம் கண்டு வருகின்றார் அந்த இளைஞர். இது போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வழியாக முருகப்பெருமான் தினமும் இப்படி ஏதேனும் ஒரு திருவிளையாட்டை நடத்தி வருகின்றார்.
                      ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார் சிரவையாதீனம் அவர்கள்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ரூபி மெட்ரிக் பள்ளியில் கௌமார மடாதிபதி சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஆசி வழங்கினார்கள்.
                                                           நன்றி:தினமணி நாளிதழ்
திருவள்ளுவர் சிலை திறப்பு 
ஆசியுரை
வள்ளுவன் தான் வகுத்த வழியில்
எள்முனை கூட மாறாமல் வாழும்
வள்ளலாம் எம் ஞான ஆசான்
பள்ளியில் சிலை திறந்தார் சிறப்பு
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

முருகன் கௌபீனத்தைக் கண்டுரைத்த ஜீவ நாடி


கொங்கு மண்டலத்தில் உள்ள மிகச்சிறப்பான முருகன் தலத்தில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளைச் சந்தித்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் அருள்வாக்கைக் கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான முறையில் வாக்குரைத்து வந்த முருகப்பெருமான் திடீரென உன் வீட்டில் என் கௌபீனம் இருக்கின்றது அதை ஏன் ஒரு பெட்டியில் போட்டு அடைத்து வைத்திருக்கின்றாய் அந்தப் பெட்டியைத் திறந்து அந்த கௌபீனத்தைப் பூஜித்து வா என்று உரைத்தார். அதைக்கேட்ட அந்த அர்ச்சகர் முருகா…முருகா..என்று உரக்கக்கூறி கண்ணீர் மல்கினார். சத்தியமான உண்மை இந்த ஜீவ நாடியில் வாக்குரைப்பது அந்த முருகப்பெருமானே…ஏனென்றால் அந்த கௌபீனம் பழனியில் இருந்து பெறப்பட்டதாகும். கடந்த 3 ஆண்டுகளாக என் வீட்டில் இருக்கின்றது. அதை ஒரு சிறு பெட்டியில் பூட்டி அறியாமையினால் வைத்துவிட்டேன் முருகப்பெருமானே இனிமேல்  உன் வாக்குப்படியே அதை பூஜை செய்கின்றேன் என்று கூறி இன்னும் பல்வேறு இரகசியங்களை ஜீவ நாடி மூலம் அறிந்து கொண்டு விடைபெற்றார் அந்த அர்ச்சகர். இப்படி மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களை ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடி மூலமும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலமும் நடத்தி வருகின்றார்.
            ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!