செவ்வாய், 13 டிசம்பர், 2016

ஜீவ நாடியில் வந்த ஒரு அதிசயத் தகவல்


  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் முன்பு ஒரு பெண்மணி வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே உன் வீட்டில் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கும் தெய்வம் என்ன? என்று கேட்டார் முருகப்பெருமான். மிகவும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் குரல் தழு தழுத்தபடி எங்கள் மாமியார் கொடுத்த சீதனம் அந்த பெட்டி என்றார். சீதனமாகக் கொடுத்தது சரி அந்த பெட்டிக்குள் இருக்கும் தெய்வத்திற்கு உனது மாமியார் எப்படி பூஜை செய்திருப்பார் நீ இப்படியே பூட்டி வைத்தால் சாப்பாட்டிற்கே வழி இருக்காது என்றார் முருகப்பெருமான். அந்தப் பெண் கதறி அழுதுவிட்டார். ஆம் சுவாமி இப்போது சாப்பாட்டிற்கே வழியில்லை. அது அன்னபூரணி சிலை என்றார். அன்னபூரணியை அடைத்துவைத்தால் அன்னம் எப்படிக் கிடைக்கும் என்றார் முருகப்பெருமான். சரி அந்த தெய்வத்தை எடுத்து பூஜை செய்து வா உடனடியான திருப்பம் வரும் போ. என்று முடித்துக் கொண்டார் முருகப்பெருமான். அந்தப்பெண்ணிற்கு இன்னும் எதிர்காலம் எப்படி இருக்கும் என பலன்கள் வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் 100% வந்த வரைக்கும் மிகத் துல்லியமாக இருப்பதால் வீட்டிற்குச் சென்ற உடனேயே அந்த அன்னபூரணி சிலையைப் பெட்டிக்குள் இருந்து எடுத்து வெளியே வைத்து தூப தீப நைவேத்தியத்துடன் கற்பூர ஒளிகாட்டி போற்றி வழிபட்டார். அடுத்த நாளே நீண்ட காலமாகப் பிரிந்து சென்ற கணவனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. ஒரு வித வெறுப்புடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாலும் ஒரு வித மன நிம்மதி ஏற்படுவதை உணர்ந்தார். வீட்டில் ஒரு படி அரிசி கூட இல்லை. அவ்வளவு வறுமை. ஆனாலும் முருகனது வாக்கில் நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் ஏற்கனவே நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு பல ஆண்டுகளாக வருகின்ற அடியவர் ஒருவர் ஜீவ நாடி மூலம் முருகன் நடத்தி வரும் திருவிளையாடல்களை அந்த பெண்ணிற்கு உரைப்பார். அவர்கள் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது போல் நமது வாழ்விலும் அதிசயம் நடக்கும் என நம்பினார். அடுத்து ஒரு வாரத்தில் அந்தப் பெண்ணின் கணவன்  நேரிலேயெ வந்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இப்போதைக்கு இதை வைத்து குடும்பம் நடத்து என்றும் தாம் விரைவில் ஒன்று சேர்வோம் என்று உரைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த அம்மையாருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்னபூரணியிடம் சென்று அழுது முருகா..முருகா..எனத் துதித்தார். அடுத்த முறை ஜீவ நாடி கேட்க வரும்போது இந்த அதிசயங்களை நமது சுவாமிகளிடம் விவரித்ததோடு ஒரு படி அரிசி இல்லாமல் இருந்த எங்கள் வீட்டில் 25 கிலோ அரிசி இப்போது இருக்கின்றது என்றும் தனது தொழிலில் தினமும் நானூறு ரூபாய் வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டு நெகிழ்ந்தார். இத்தனை அதிசயங்களையும் நடத்திய முருகப்பெருமானே இதற்குக் காரணம். அடியேன் ஒரு கருவி மட்டுமே. முருகன் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் உன்னத தெய்வம். மக்கள் மீது கருணை கொண்டே ஜீவ நாடியில் தோன்றுகின்றார். அதேபோல் அகத்தியப்பெருமானும் நமது ஜீவ நாடியில் அவ்வப்போது தோன்றி முருகப்பெருமானுடன் உரையாடும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது. அந்த அனுபவங்களை மற்றுமொருமுறை பகிர்ந்து கொள்கின்றேன். என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

               ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 15 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-5

6. ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் இருந்து தப்பிக்க ஜீவ நாடி வழி காட்டுமா?

    ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும். 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள். 2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
ஒருவரின் பூர்வ ஜென்மத்தின் பாவங்களின் பதிவுகளைக் கழிக்கவே ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் பாதிப்புகள் வருகின்றது. ஜீவ நாடியில் முருகனின் மீது நம்பிக்கை வைத்து வந்து ஜீவ நாடி கேட்பவருக்கு பூர்வ ஜென்ம பாவ பதிவுகளைக் கண்டறிந்து உடனடியான நல்ல வழியை ஜீவ நாடி காட்டுகின்றது. பரிகாரம் செய்தால் பாவம் தீருமா? என்றால் அப்படி பரிகாரம் அறிந்து ஏழரைச்சனி அஷ்டமச்சனி பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற விதியமைப்பு இருப்பவர்கள்தான் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வந்து கேட்க முடிகின்றது. ஜீவ நாடி நடத்துகின்ற திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம் 100% உண்மையும் சத்தியமும் பண ஆசையில்லாத தூய்மை நிலையும் கடைபிடிக்கப்படுவதால்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். எனவேதான் அடியேன் ஜோதிடம் சொல்வதில்லை முருகனின் வாக்கு மட்டுமே ஜீவ நாடியில் என்ன வருகின்றதோ அது மட்டுமே உரைக்கப்படுகின்றது. அதனால் அடியேன் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்வதில்லை. சிறு காணிக்கை மட்டுமே நாடி படிக்க பெற்றுக் கொள்ளப்பட்டு அந்த காணிக்கைகள் அன்னதானம் மற்றும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே பணம் நிரந்தரமானது அல்ல மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்ந்தவன் அடியேன். அதனால்தான் மிகுந்த நேரக் குறைவான சூழ் நிலையிலும் ஜீவ நாடி உரைக்கும் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்து வருகின்றேன்.

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 10 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-4


5.ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன் ஐயா அவர்கள். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். அந்த வகையில் ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் அகத்தியர் வாக்கு கேட்ட பலர் இன்று நமது ஸ்ரீஞாஸ்கந்தர் ஜீவ நாடியில் 100% பலன் பெற்று வருகின்றார்கள் என்பதற்கு ஹனுமத்தாஸன் ஐயா மூலம் அகத்தியர் உரைத்த அதே இரகசியங்களை நமது ஜீவ நாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைக்கின்றார்கள் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும். பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும்.
              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 4 நவம்பர், 2016

வெளிவந்து விட்டது


முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி கடந்து 20 ஆண்டுகளாக உரைத்து நடந்த அதிசயங்கள் ஆச்சரியங்கள், இரகசியங்கள், உண்மைச்சம்பவங்கள் என வித விதமான தலைப்புகளில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட “சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் நூலும் ஆருடம் குறித்த இதுவரை வெளிவராத பல்வேறு இரகசியங்கள் அடங்கிய “அற்புதபலன் கூற உதவும் அபூர்வ ஆருடம்” எனும் ஜோதிட நூலும் இப்போது வெளிவந்து விட்டது. விருப்பமும் பிராப்தமும் இருக்கும் நமது கௌமார பயணம் வாசகர்கள் இந்த நூல்களை வாங்கி வடிவேல் முருகனின் திருவிளையாடல்களைக் கண்டு இன்புற்று எல்லா நலன்களையும் பெற நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் பொற்பாதங்களைப் போற்றுகின்றோம்.

வெளியீடு:
அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை
செல்:7299921880, 9710921880

இங்ஙனம்
கௌமாரபயண வலைதள நிர்வாகிகள்

                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-3

4. ஒருவர் செய்யும் தொழில் பற்றி ஜீவ நாடியில் என்ன தெரிந்து கொள்ளலாம்?

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் ஒருவருடைய தொழில் பற்றி 100% மிக மிகத்துல்லியமாக பதில் வருகின்றது. 
தொழிலைப் பொறுத்தவரையில்

  1. வேலை கிடைக்குமா?
  2. அரசுப் பணி அமையுமா?
  3. சொந்தத் தொழில் செய்யலாமா?
  4. எந்த தொழில் செய்தாலும் லாபம் இல்லை என்ன செய்யலாம்?
  5. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?
  6. எந்தத் தொழிலைத் தொட்டால் கோடீஸ்வர யோகம் வரும்?
  7. கூட்டுத்தொழில் யோகம் உண்டா?
எனும் கேள்விகளுக்கு 100% மிகத்துலியமான பதிலை முருகப்பெருமானும் அகத்திய முனிவரும் ஜீவ நாடியில் தோன்றி ஒருவரது பூர்வ ஜென்ம தொழில் எது என்று கண்டறிந்து அதன் அமைப்பில் 100% கோடான கோடி லாபம் தருகின்ற தொழில் எது என்று உரைத்து விடுகின்றனர். நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் எப்போதும் பெரிய பெரிய தொழிலதிபர்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு ஜீவ நாடியின் துல்லிய தொழில் குறித்த வாக்கே காரணம் ஆகும். ஜாதகம் யோகமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தொழிலே அமைவதில்லை காரணம் பூர்வ ஜென்ம பதிவுகளின் தாக்கமே. அந்த தாக்கத்தைக் கண்டறிந்து ஜீவ நாடியில் வருகின்ற வழிகளைக் கேட்டு கடைபிடித்தால் உடனடியான ஒரு திருப்புமுனை வருவதற்கு இப்போது ஜீவ நாடியை நாடி கடந்த 20 ஆண்டுகளாக பலர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதே சாட்சியாகும்.  ஒரு சிலருக்கு பெரிய தொழில் யோகம் இருக்கும் ஆனால் சாதாரண சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள் முருகனின் ஜீவ நாடியை தொடர்ந்து இடை வெளி விட்டு ஒரு வருடத்தில் 6 முறை கேட்டு அதன்படி சில வழிபாடுகளைக் கடைபிடித்தவர்கள் ஒரே வருடத்தில் பத்து ஆண்டுகள் சம்பாதிக்கும் வருமானத்தை எட்டி விட்டார்கள். ஜீவ நாடி முழுக்க முழுக்க இறை அருளால் உரைக்கப்படுவதால் பணம் என்பது குறிக்கோள் இல்லை. பயனடைந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் செய்த திருப்பணியே இன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமாக அமைந்துள்ளது எனலாம். ஜாதகத்தில் தொழிலைக் குறிக்கும் 10மிடமும் 10மிட அதிபதியும் எப்படி இருந்தாலும் ஜீவ நாடி மூலம் தொழில் பற்றித் தெரிந்து கொண்டு பூர்வ ஜென்ம பதிவுகளைக் களைந்துவிட்டால் உடனடியான ஒரு தொழில் வாய்ய்பு வருவதை அனுபவத்தில் காணலாம். அப்படி முருகனை நாடி வந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தம் இருப்பவர்களே 100% நம்பிக்கையுடன் வந்து நாடி கேட்க முடிகின்றது. பிராப்தம் இல்லை எனில் இது பொய் என்று யாரேனும் ஒருவர் நம்பிக்கையைக் கெடுத்து ஜீவ நாடியை நாட விடாமலேயே செய்து விடுவர் என்பதும் அனுபவம். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து முருகனிடம் கேளுங்கள்...அவர் நிச்சயம் இல்லை என்று சொல்லுவதில்லை...முருகன் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல...பக்தியையும் அன்பையும் நாம் முருகன் மீது வைத்தால் அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள்வார் அந்த முருகன்... என்பது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் வாக்காகும்.
                                                                                                                                      தொடரும்...
                                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



திங்கள், 31 அக்டோபர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-2


3.திருமணம் ஆக வேண்டி இருப்பவர்களுக்கு ஜீவ நாடி என்ன சொல்கின்றது?
 ஒருவருக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? என்று 100% மிகத்துல்லியமாக ஜீவநாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைத்துவிடுகின்றார்கள்.நீண்ட காலமாகத் திருமணம் ஆகவேண்டி காத்து இருப்பவர்கள் ஜீவ நாடி கேட்க வந்து அமரும்போது திருமணம் குறித்த அனைத்துவிதமான தகவல்களும் வருகின்றது. பூர்வ ஜென்மத்தில் ஆண்கள் அல்லது பெண்களிடம் வாங்கிய சாபம் ஏதேனும் இருப்பினும் அதை நீக்கும் வழிகளை எந்த ஒரு ஒளிவு மறைவின்றி ஜீவ நாடி உரைக்கின்றது. ஜீவ நாடி சொல்லும் வழிகளைக் கடைபிடித்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணமே ஆகாது என்று வெறுப்படைந்தவர்கள் கூட 100% உடனடியாக திருமணம் ஆகும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள். தங்கள் சாபங்கள் தீரும் வரை தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் வாக்குகளைக் கேட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு திருமணம் நடந்துவிடுகின்றது. இதை விடுத்து சன்னியாசியாகும் அமைப்பு, காதல் திருமணம் செய்யும் யோகம், துறவு செல்லும் தகுதி என மிகத்துல்லியமாக ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்து நல்வழிகாட்டி ஒருவரின் வாழ்விற்கே ஒரு கலங்கரை விளக்கமாக ஜீவ நாடி திகழ்கின்றது எனலாம். அதேபோல் இல்லறவாழ்வில் சதா சண்டையிட்டு ஒற்றுமை இல்லாத தம்பதிகளுக்கும் ஜீவ நாடி நல்ல வழி காட்டி வருகின்றது. விவாகரத்து வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஸ்திரீ சாபத்தை ஜீவ நாடி மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட உடனேயே ஒரு முடிவுக்கு வருவதைப் பார்த்து வருகின்றோம். அப்படி விவாகரத்துப் பெற்றவர்கள் உடனடியான மறுமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் ஜீவ  நாடியில் வழி கிடைக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை 100% ஜீவ நாடி மீது நம்பிக்கை வைப்பதும் முருகனை நாடி வந்து ஜீவ நாடி கேட்டு இன்னவன் வாழ்வில் ஒரு வசந்தம் வரவேண்டும் என்ற பிராப்தமும் இருக்க வேண்டும் என்பதும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். பிராப்தம் இருப்பவர்களுக்கே ஆருடம் எனும் முறையில் இதுபோன்ற தகவல்களைப் படிக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குகின்றார் எனலாம்.
தொடரும்…
                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 26 அக்டோபர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-1

இந்தத் தொடர் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தொடராகும். ஜீவ நாடியைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அளித்த பதில் தொரடாக அனைவருக்கும் பகிரப்படுகின்றது.இதன் மூலம் வாசகர்கள் ஜீவ நாடி குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.
1.ஜீவ நாடியை நம்பலாமா?
ஜீவ நாடியை நம்பலாமா? வேண்டாமா? என்பது அவரவர்களின் அனுபவத்தைப் பொறுத்த விஷயம். ஆனால் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பொறுத்தவரை 100% முருகப்பெருமானின் வாக்கு. சில நேரங்களில் அகத்தியரும் முருகனும்உரையாடும் வடிவில் வாக்கு வருகின்றது. 100% முழு நம்பிக்கை யாருக்கு இருக்கின்றதோ அவர்களே நமது ஜீவ நாடியை வந்து கேட்க முடியும். நம்பிக்கை இல்லாமலும், விளையாட்டாகவும் ஜீவ நாடியை அனுகுவது சித்தர்களின் கோபத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் தேவையில்லாத நிகழ்ச்சிகள் நடந்துவிடும் என்பதால் நம்பிக்கை இல்லாமல் ஜீவ நாடி கேட்க முயற்சிக்கக் கூடாது. நம்பி வந்து விட்டால் அவர்களை 100% எப்படியேனும் முருகன் கரையேற்றி விடுகின்றார் என்பதை ஏற்கனவே ஜீவ நாடி கேட்டு வரும் பலரின் அனுபவம். நமது ஜீவ நாடி 100% சத்தியமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. எனவே 100% அனைவரும் நம்பி தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம்.
2.ஜீவ நாடியில் எல்லாமே வருமா?
 நமது ஜீவ நாடியில் ஜோதிடம் உரைப்பது போல் உரைப்பார்கள் என்று கருதக்கூடாது. முருகனும் அகத்தியரும் ஜோதிடம் சொல்வதிலை. மாறாக வந்து அமர்ந்த உடனேயே அவர்கள் அருள் வெள்ளம் உங்கள் மீது பாய்ந்து அதன் மூலம் உங்கள் முன் ஜென்மத்தின் அனைத்துவிதமான செயல்களின் பதிவுகளையும் நீக்கி இந்த ஜென்மத்தை நீங்கள் எதற்காக எடுத்துள்ளீர்களோ அதை விரைவில் புரியவைத்து பல்வேறு அதிசயங்களை நடத்துவது 100% கடந்த 20 ஆண்டுகளாக கண்கூடாக நடந்து வருகின்றது.அதே போல் அந்த நேரத்தில் என்ன உரைக்க வேண்டும் நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் விதியமைப்பும் அனுமதியும் உள்ளதோ அதை மட்டுமே முருகன் நாடியில் உரைக்கின்றார். உதாரணமாக ஒருவருக்கு திருமணம் 30 வயதில் நடப்பதாக வைத்துக் கொள்வோம், அவருக்கு 10 வயது நடக்கும் போது திருமணம் குறித்து கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவு. ஆனால் அதேசமயத்தில் நாடியில் அந்த 10 வயது சிறுவனுக்கு திருமணம் குறித்த செய்திகள் வந்தால் நம் பிராப்தம் என்று கேட்டுக் கொள்ளலாம். நாமாக கேட்பது அவசியத் தேவைகளாக இருக்க வேண்டும். ஜாதகம், ஜோதிடம் பார்க்கும் போது ஒரு சிலர் இப்படி பல கேள்விகளைக் கேட்பது உண்டு. ஆனால் தெய்வமும் சித்தர்களும் நமக்காக கீழே இறங்கி வந்து நாடியில் தோன்றி வாக்குரைக்கும் போது நாம் எவ்வளவு பக்தி சிரத்தையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்த உடனேயே உங்கள் கேள்விகளின் பதில் கேட்டு யாம் பிரார்த்தனை செய்து சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வருவதை அப்படியே பாடுகின்றோம். இறுதி வரை அமைதியாக இருந்து கேட்டு விட்டு ஜீவ நாடியில் வந்துள்ள வழிபாடுகளை கடைபிடிக்கத் துவங்க வேண்டும். மீண்டும் அடுத்து எப்போது வந்து ஜீவ நாடி கேட்க வேண்டும் எனும் குறிப்பும் நாடியிலேயே வந்துவிடும் என்பதால் மீண்டும் அடுத்த நாடி கேட்க பொறுமையாக குறிப்பிட்ட நாள் வரை காத்திருக்க வேண்டும்.
                                                                                                                             தொடரும்...
                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!