வியாழன், 28 ஏப்ரல், 2016

பஞ்சேஷ்டியில் தீப வழிபாடு நடத்த நாள் உரைத்த ஜீவ நாடி


                                                             
                                  தீபம் ஏற்றி தொடங்கி வைக்கும் சித்தர் சுவாமிகள்
சென்னை வெள்ளம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் கொடுத்த பேட்டி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதாவது இன்னும் அதிகமான வெள்ள பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டும் என்பதே அது. அந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சித்தரிடம் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வெள்ளத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களைக் காக்க என்ன வழி என்று கேட்டனர். அதற்கு பஞ்சேஷ்டி எனும் தலத்தில் அதிகமாக தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என்று சித்தர் பதில் உரைக்க சிறு ஆறுதல் கிடைத்தது. இந்த தகவல்களை அறிந்த காரைக்குடி அகத்தியர் திருமைந்தன் ஐயா அவர்கள் மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் ஐயா உட்பட பல நபர்களுடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சென்று நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளிடம் பஞ்சேஷ்டியில் எந்த நாளில் தீபம் ஏற்றினால் இயற்கைச்சீற்றம் குறையும் என்று ஞானஸ்கந்தர்  ஜீவ நாடியில் முருகப்பெருமானிடம் கேட்டு உரைக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடியில் முருகனிடம் கேட்டு சித்ரா பௌர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று உரைத்தார்கள். அவ்விதமே அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் குழுவினர் வேல் தீபம், சக்திகல தீபம் பிரமிடு தீபம் சிவ லிங்க தீபம் என 2108 தீபங்களை ஏற்றி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தினார்கள். ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை இருந்ததால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் இந்த தீப வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் அமாவாசை அன்று ஒரு நாள் மட்டுமே கருவறையை விட்டு வெளியே வரக்கூடியவர் இந்த தீப வழிபாட்டை துவங்கி வைத்து ஆசி கூறியது மிகவும் ஆச்சரியாமாக இருந்தது என்று அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். உலக நன்மைக்காக ஜீவ நாடியில் நாள் உரைத்து தீப வழிபாட்டிற்கு அருள் கொடுத்த ஞானஸ்கந்த மூர்த்தியை அனைவரும் ஒரு நிமிடம் கண்மூடி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம். அதன் படங்களில் சில....




ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக