செவ்வாய், 2 டிசம்பர், 2014

முருகனின் விஸ்வரூப தரிசனம் !


குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே, அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார். இந்த தரிசனத்தின் போது, முருகனின் சேனைத்தலைவர் வீரபாகு, முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார். இதன் அடிப்படையில், தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தரிசனத்தின் போது, வள்ளியம்மன் கோயிலில் "செந்திலாதிபன் சுப்ரபாதம்' பாடப்படும். அதன்பின் பள்ளியறை தீபாராதனையும், கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடக்கும். அதன்பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும், கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக