சனி, 12 டிசம்பர், 2015

சிரவை ஆதீனம் அவர்கள் அந்தியூர் வருகை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 25.10.2015 ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை 8.30 மணிக்கு அங்காளம்மன் ஆலய குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் வருகை தந்து குடமுழுக்கை திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி நடத்தினார்கள். 
                படம்: அந்தியூரில் குடமுழுக்கை நடத்தும் சிரவை ஆதீனம் அவர்கள்
இப்போது 48 நாட்கள் முடிந்து மண்டல பூஜை நிறைவு விழா நாளை(13.12.2015, ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்க இருக்கின்றது. இந்த விழாவிற்கு எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம், முனைவர்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் எழுந்தருள்கின்றார்கள். மஹா சந்நிதானங்களை ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சார்பாகவும், கௌமார பயணத்தின் சார்பாகவும் வரவேற்று வணங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

என்றும் என் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அகத்தியர் வடிவில் காட்சி தரும் மலை

ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வாசிக்கும் போது அகத்தியர் வாக்கு வந்தது அதைக் கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இந்த ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பின்புறம் உள்ள மலையை உற்றுப் பார் உனக்கு ஒரு காட்சி தருவேன் என அகத்தியர் உரைத்தார். அவரும் நீண்ட நேரம் உற்ரு உற்ருப் பார்த்தும் எந்த வித காட்சியும் கிட்டாமல் வழ்க்கம்போல் அகத்தியர் ஐயா ஏமாற்றிவிட்டார் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மதுரை இறையருள் மன்றம் பரம் சிவம் அவர்கள் இந்த மலையை தனது அலை பேசியில் புகைப்படம் எடுத்து தனது வீட்டில் அந்த படத்தையே அகத்தியரை தியானித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அந்த மலையே அகத்தியர் வடிவில் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்த்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடமும் அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இதைத் தெரிவித்து மகிழ்ந்தார். சித்தர்கள் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை என்றும் நாம் புரிந்து கொள்வதில்தான் பிழை இருக்கின்றது என்றும் பின்பு ஒருமுறை அந்த அகத்தியரே ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தார். நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக அந்த மலை வடிவில் உள்ள அகத்தியர் படத்தை இங்கு வெளியிடுகின்றோம்.
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம் பின்பு றம் அகத்தியர் வடிவில் மலை
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

அகத்தியரை வரவழைத்த வேல் தீப வழிபாடு

 நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நேற்று  (10.12.2015)வியாழக்கிழமை இரவு அமாவாஸை பூஜை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் அபிடேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டது. சுமார் 500 பகதர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். பூஜையின் சிறப்பாக மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம், கார்த்திகேயன் உட்பட பல அன்பர்களும், அம்பாள் உபாசகர் ஆதவன் அவர்களும், அகத்தியர் திரு மகன் எனும் ஆன்மீகப் பெரியவரும் வேல் வடிவில் செய்யப்பட்ட விளக்கில் 108 தீபங்கள் ஏற்றியும், பைரவ்ர் தீபம், கும்ப தீபம் என வகை வகையான தீபங்களை ஏற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முன்னிலையில் கூட்டு வழிபாடு நடத்தினர். இந்த வேல் தீபம் செய்யும் முறைகளை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டதாகும். அதே போல் இந்த தீபங்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உட்பட பல்வேறு சிவாலயங்களில் ஏற்றி வழிபட்டு இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களால் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்காக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பூஜையின் முடிவில் ஜீவ நாடியில் இந்த வேல் தீப பூஜைக்கு அகத்தியரே எழுந்தருளி ஆசி கொடுத்ததாகவும், இன்னும் பல்வேறு சித்தர்கள் சூட்சுமமாக வந்ததாகவும் வாக்கு வந்தது. அதன் படங்களை நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக இங்கு வெளியிடுகின்றோம்.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தீபங்களை ஏற்றத் தொடங்குதல்
                                                                பைரவர் தீபம்

         வேல் தீபம்
                                  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

எம்மதமும் சம்மதம் எனும் கௌமார நெறி

எம்மதமும் சம்மதம் என்று வெறும் வாயளவில் சொல்லக்கூடாது என்றும் சமய, சமரச, சமயாதீதம் எனும் கௌமார நெறியில் மிக உன்னத நிலை அடைகின்ற போதுதான் எம்மதமும் சம்மதம் என்பது உண்மை ஆகும். பரம் பொருள் ஒன்றுதான் எல்லா சமயங்களுக்கும் மூலம் என்பதை உணர்ந்து கொள்வதே சமயாதீத உணர்வு என வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தெரிவித்துள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தான்  கோவையில் கௌமார மடம் தோற்றுவித்த தவத்திரு இராமானந்த சுவாமிகள் அவர்களின் ஞானதேசிகர் ஆவார். அந்த வகையில் இன்று வரை இந்த கௌமார நெறி நமது கௌமார மடம் மூலம் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் இபோதைய சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் சமயாதீத கௌமார நெறியில் வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றார். அதற்கு உதாரணமாக கடந்த தீபாவளித்திரு நாள் விழாவை மத நல்லிணக்கத்தோடு மற்ற மதத்தினருடன் இணைந்து கொண்டாடி கௌமார நெறிக்கு எனது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்கள். அதை பின்வரும் படத்தில் காணலாம்.
படம்: சமயாதீத நெறில் சிரவை ஆதீனம் அவர்கள்
 இப்படி ஒவ்வொரு சமயத்தாரும் கௌமார நெறியான சமயாதீத உணர்வில் இருந்தால் நாட்டில் எங்கும் மதச் சண்டைகள் வருவதற்கு வாய்பே இல்லை எனலாம்.இளைஞர்கள் இதை ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொண்டு பொறாமை உணர்வை விட்டு அனைத்து மதத்தினரோடும் இனிமையாகப் பழகி இன்புற்று வாழ வேண்டும். இந்த மாற்றம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வர வேண்டும். அப்போதுதான் நமது நாடு சாதி,மத பேதமில்லாமல் சமத்துவமாகி சிறப்புறும். அண்மையில் நடந்த மழை வெள்ள பாதிப்பு அத்தகைய ஒரு சமயாதீத நெறியைக் கொடுத்து சாதி மதம் பாராமல் அனைவரும் உதவி செய்யும் ஒரு நிகழ்வாக அமைந்தது.ஆனால் துன்பம் வரும் போது மட்டுமல்ல நாம் எபோதுமே சமயாதீத உணர்வில் இருபோம் என எம் ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களைப் பிரார்த்தனை செய்கின்றேன்.
குருவே பரம் பொருள் என்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் காட்டிய கௌமார நெறியாகும்.
நன்றி:சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
படம்: சுவாமிகளின் 46 வது நாண்மங்கல விழாவில்(பிறந்த நாள்) எடுக்கப்பட்டதாகும்.
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

திருப்பூரில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உதயம்

கோவை கௌமார மடாலயத்தில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருப்பூரில் கௌமார பிரசாந்தி அகாடமியின் புதிய கிளை ஒன்று  தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் இனிய உதயம் ஆகியுள்ளது. கௌமாரம் பிரசாந்தி அகாடமி பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
http://kaumaramprashanthiacademy.org/

நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றும் எம் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


புதன், 9 டிசம்பர், 2015

நன்றி! நன்றி!! நன்றி!!!

கோவையில் இருக்கும் ஆனைமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சேலைகள் ஏராளமாக உள்ளது.அவைகளை மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என மடாதிபதிகள் துறவியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அந்தச் செய்தியை நமது கௌமாரப்பயணத்தில் வெளியிட்டுருந்தோம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி நமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களிடமிருந்து வந்தது. அதில் மடாதிபதிகள் மற்றும் துறவியர்களின் வேண்டுகோளை ஏற்று 10,000 சேலைகள் சென்னைக்கும், 10,000 சேலைகள் கடலூருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  லாரி மூலம் ஆனைமலை மாசானியம்மன் ஆலயத்தில் இருந்து செல்கின்றது. இது நிச்சயம் பாராட்ட வேண்டிய செயல். கோவில் புடவைகள் என்பதால் அதை உடுத்தும் மக்களும் அருள் பெறுவார்கள். அதே சமயம் அந்த கோவில்களில் உள்ள அம்மன்களும் நம்மை ஆசீர்வதிக்கும். அதற்கு காரணமாக இருந்த சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களை இந்த கௌமார பயணம் போற்றி வணங்கி மகிழ்கின்றது.




நன்றி:சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்


என்றும் என் ஞானதேசிகர் பணியில் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

இன்று கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவதார நாள்

                               தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்

கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவதரித்தார்கள்.  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவார்கள். அந்த வகையில் சுவாமிகள் அடியேனுக்கு பரம குரு நாதர் ஆவார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் விசாகம் அன்று கௌமார மடத்தில் சுவாமிகள் அவதார விழா பூசை   நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. சுவாமிகள் செய்த கஜ பூஜை அனைவராலும் இன்றும் மெய் சிலிர்க்கும் வகையில் போற்றப்பட்டு வருகின்றது.

இது போல் ஒரு பூஜையை இது வரையில் யாருமே செய்ததில்லை. இனி எவரும் செய்ய இயலாது. அப்போதே உரிய படி பதிவு செய்திருந்தால் இந்த கஜ பூஜை கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கும். இந்த கஜ பூஜை நடத்தி 25 ஆண்டுகளாகி அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு 108 கோ பூஜை, கஜபூஜை, 1008 திருவிளக்கு பூஜை கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திரு உருவம் திறப்பு, சீர் மிகு சிரவை ஆதீனம் எனும் நூல் வெளியீடு, அறுபத்து மூவர் நீராட்டு என தனது ஞானாதேசிகரைப் போற்றும் விதமாக எனது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கஜ பூஜை வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள். நமது கௌமார பயண வாசகர்களும், என்னிடம் தொடர்பில் இருப்பவர்களும், நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் அடியார்களும் இந்த நிகழ்வையெல்லாம் நினைத்து இன்று ஒரு நாள் முழுவதும் தவத்திரு சுந்தர சுவாமிகளின் பெருமைகளைப் போற்றிப் பேசியும் அவரது புகைப்படத்தின் முன்பு அமர்ந்து ஒரு அரை நிமிடமாவது பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


கொங்கு நாடு செய்த தவப் பயணாய் அவதரித்தவர் நம் சுந்தர சுவாமிகள். அவருக்கு நாம் என்ன கொடுத்தாலும் ஈடு இணை ஆகாது எனவே தூய்மையான பக்தியைச் செலுத்தலாம். தமிழ்ப்பற்று இருப்பவர்கள் நம் சுந்தர சுவாமிகள் இயற்றிய சுந்தரர் சொற்றமிழை படித்து ஆய்வு செய்து இன்புறலாம். ஆலய வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் சுந்தர சுவாமிகள் திருப்பணிகள் செய்த கௌமார மடாலயம், அவினாசி, திருச்செங்கோடு, திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல் போன்ற தலங்களை இன்று தரிசனம் செய்யலாம். வழிபாடு செய்பவர்கள் தமிழ் முறையில் வழிபாடு செய்து சுவாமிகளின் செயல்களைப் போற்றலாம். இப்படி ஏதேனும் ஒரு வகையில் நமது சுவாமிகளைப் போற்றி வழிபட்டு குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியில் இணைந்து குருவருளால் அந்த தண்டபாணிக்கடவுள், ஞானஸ்கந்தப் பெருமானின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கஜ பூஜை வெள்ளி விழா நிகழ்வின் படங்கள் நம் கௌமார பயண வாசகர்களுக்காக,
                                                                 108 கோ பூஜை


கஜ பூஜை


அறுபத்து மூவர் நீராட்டு

கஜ பூஜை சுவாமிகள் திருவுருவச்சிலை திறப்பு
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

ன்றும் எம் ஞானதேசிகர் பணியில்
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்  

                                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!