வெள்ளி, 11 டிசம்பர், 2015

எம்மதமும் சம்மதம் எனும் கௌமார நெறி

எம்மதமும் சம்மதம் என்று வெறும் வாயளவில் சொல்லக்கூடாது என்றும் சமய, சமரச, சமயாதீதம் எனும் கௌமார நெறியில் மிக உன்னத நிலை அடைகின்ற போதுதான் எம்மதமும் சம்மதம் என்பது உண்மை ஆகும். பரம் பொருள் ஒன்றுதான் எல்லா சமயங்களுக்கும் மூலம் என்பதை உணர்ந்து கொள்வதே சமயாதீத உணர்வு என வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தெரிவித்துள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தான்  கோவையில் கௌமார மடம் தோற்றுவித்த தவத்திரு இராமானந்த சுவாமிகள் அவர்களின் ஞானதேசிகர் ஆவார். அந்த வகையில் இன்று வரை இந்த கௌமார நெறி நமது கௌமார மடம் மூலம் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் இபோதைய சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் சமயாதீத கௌமார நெறியில் வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றார். அதற்கு உதாரணமாக கடந்த தீபாவளித்திரு நாள் விழாவை மத நல்லிணக்கத்தோடு மற்ற மதத்தினருடன் இணைந்து கொண்டாடி கௌமார நெறிக்கு எனது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்கள். அதை பின்வரும் படத்தில் காணலாம்.
படம்: சமயாதீத நெறில் சிரவை ஆதீனம் அவர்கள்
 இப்படி ஒவ்வொரு சமயத்தாரும் கௌமார நெறியான சமயாதீத உணர்வில் இருந்தால் நாட்டில் எங்கும் மதச் சண்டைகள் வருவதற்கு வாய்பே இல்லை எனலாம்.இளைஞர்கள் இதை ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொண்டு பொறாமை உணர்வை விட்டு அனைத்து மதத்தினரோடும் இனிமையாகப் பழகி இன்புற்று வாழ வேண்டும். இந்த மாற்றம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வர வேண்டும். அப்போதுதான் நமது நாடு சாதி,மத பேதமில்லாமல் சமத்துவமாகி சிறப்புறும். அண்மையில் நடந்த மழை வெள்ள பாதிப்பு அத்தகைய ஒரு சமயாதீத நெறியைக் கொடுத்து சாதி மதம் பாராமல் அனைவரும் உதவி செய்யும் ஒரு நிகழ்வாக அமைந்தது.ஆனால் துன்பம் வரும் போது மட்டுமல்ல நாம் எபோதுமே சமயாதீத உணர்வில் இருபோம் என எம் ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களைப் பிரார்த்தனை செய்கின்றேன்.
குருவே பரம் பொருள் என்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் காட்டிய கௌமார நெறியாகும்.
நன்றி:சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
படம்: சுவாமிகளின் 46 வது நாண்மங்கல விழாவில்(பிறந்த நாள்) எடுக்கப்பட்டதாகும்.
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக