நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நேற்று (10.12.2015)வியாழக்கிழமை இரவு அமாவாஸை பூஜை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் அபிடேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டது. சுமார் 500 பகதர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். பூஜையின் சிறப்பாக மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம், கார்த்திகேயன் உட்பட பல அன்பர்களும், அம்பாள் உபாசகர் ஆதவன் அவர்களும், அகத்தியர் திரு மகன் எனும் ஆன்மீகப் பெரியவரும் வேல் வடிவில் செய்யப்பட்ட விளக்கில் 108 தீபங்கள் ஏற்றியும், பைரவ்ர் தீபம், கும்ப தீபம் என வகை வகையான தீபங்களை ஏற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முன்னிலையில் கூட்டு வழிபாடு நடத்தினர். இந்த வேல் தீபம் செய்யும் முறைகளை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டதாகும். அதே போல் இந்த தீபங்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உட்பட பல்வேறு சிவாலயங்களில் ஏற்றி வழிபட்டு இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களால் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்காக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பூஜையின் முடிவில் ஜீவ நாடியில் இந்த வேல் தீப பூஜைக்கு அகத்தியரே எழுந்தருளி ஆசி கொடுத்ததாகவும், இன்னும் பல்வேறு சித்தர்கள் சூட்சுமமாக வந்ததாகவும் வாக்கு வந்தது. அதன் படங்களை நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக இங்கு வெளியிடுகின்றோம்.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தீபங்களை ஏற்றத் தொடங்குதல்
பைரவர் தீபம்
வேல் தீபம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குThanks..
பதிலளிநீக்குVetri vel muruganuku arogara
பதிலளிநீக்குஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி
பதிலளிநீக்குஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி
skandavel murganaku arogara.,.,.,.
பதிலளிநீக்கு