கோவையில் இருக்கும் ஆனைமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சேலைகள் ஏராளமாக உள்ளது.அவைகளை மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என மடாதிபதிகள் துறவியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அந்தச் செய்தியை நமது கௌமாரப்பயணத்தில் வெளியிட்டுருந்தோம்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி நமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களிடமிருந்து வந்தது. அதில் மடாதிபதிகள் மற்றும் துறவியர்களின் வேண்டுகோளை ஏற்று 10,000 சேலைகள் சென்னைக்கும், 10,000 சேலைகள் கடலூருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லாரி மூலம் ஆனைமலை மாசானியம்மன் ஆலயத்தில் இருந்து செல்கின்றது. இது நிச்சயம் பாராட்ட வேண்டிய செயல். கோவில் புடவைகள் என்பதால் அதை உடுத்தும் மக்களும் அருள் பெறுவார்கள். அதே சமயம் அந்த கோவில்களில் உள்ள அம்மன்களும் நம்மை ஆசீர்வதிக்கும். அதற்கு காரணமாக இருந்த சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களை இந்த கௌமார பயணம் போற்றி வணங்கி மகிழ்கின்றது.
Sir, I had seen this blog before 10 days and almost read the complete blog. Good information.Thanks
பதிலளிநீக்குSir, I had seen this blog before 10 days and almost read the complete blog. Good information.Thanks
பதிலளிநீக்கு