ஞாயிறு, 30 டிசம்பர், 2018

ஜீவ நாடி வாசகரின் அனுபவம் - 7

I am a Siddha devotee from Germany. On June 2015 I get my first Jeeva Nadi reading per telephone. Normally it is not allowed to get a Jeeva Nadi reading per telephone. As I was suffering a lot, Lord Muruga and the Siddhas showed mercy upon me. On the first reading Lord Muruga gave accurate details about my life. From then on Murga is guiding me through the Jeeva Nadi and Skanda Upasager Swamigal. Murga gives me information about my health, job, family life and spiritual guidance. If there are some Problems, Muruga will tell me what remedies I have to do.
Sometimes I have to visit certain spiritual places in Germany that I've never heard of before. Murga will tell me exactly the location of the deity I have to visit and as a result, previously unknown temples and sacred places in Germany became known to me. Sometimes I have to do some Pranayama, Mantra and Puja or take some Ayurvedic medicine. Each prophecy will occur exactly as it was described in the Jeeva Nadi before. I felt so blessed to have such guidance through Jeeva Nadi, Skanda Upasager Swamigal and Muruga.
But suddenly the Jeeva Nadi Reading stopped for me due to bad karma. I got my last reading on February 2018. Every day I pray that I will get the Jeeva Nadi reading again. That Muruga and the Siddhas will guide me again. May Muruga and the Siddhas show mercy to this sinner.
                                       ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி வாசகரின் அனுபவம் - 6

Very valuable experience. Thanks to Jegadeeswaran Ayya for reading out the Jeeva NAdi. I too had many experience from the Jeeva Nadi which is very accurate.

RaghuNandhan, Chennai.

புதன், 28 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 5

அடியேன் ஜீவ நாடி பார்க்க ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் ஒரு பெண் மருத்துவரை அழைத்துச் சென்றேன். ஜீவ நாடி படிக்கப்பட்டது. மறுமணம் வேண்டாம் என்றவர்க்கு நிச்சயம் மறுமணம் செய்து கொள் என்றும் அந்த அமைப்பு உண்டென்றும் மகத்தான குழந்தை அருள் உண்டு என்றும் உரைத்து சில வழிபாட்டு முறைகள் உரைக்கப்பட்டது. அதன்படி அந்த மருத்துவரும் வழிபாட்டு முறைகளை நம்பிக்கையோடு கடைபிடித்து வந்தார். சில காலம் கழித்து நல்ல முறையில் மிகவும் அருமையான கணவரை மணந்தார். இன்று மணமாகி மகப்பேறு அடைந்து குருவிற்கு நன்றி சொன்ன வரலாறான அற்புதமும் உண்டு.

அதேபோல் எமது அத்தை பையனுக்கு முதல் நாடியிலேயே உத்தியோகத்தில் விரைவில் வெளிநாடு யோகம் உண்டு என்று எடுத்துரைத்து முருகன் கூறிய ஆலய வழிபாடு பரிகாரம் 3 மாதம்செய்து முடிந்த உடன் இப்போது சவுதிஅரேபியாவில் project க்காக company மூலமாகவே சென்று உள்ளார். முருகனது கருணையே கருணை. இப்படி எனக்கு குருவாகவும் ஜீவ நாடி மூலம் அருள் செய்து வரும் சுவாமிகளை அடியேன் ஸ்ரீஜெகதீஸ்வராய நமஹ என்றே சொல்வேன். சுவாமிகள் முருகனையே துதி என்றாலும் எனது வாழ்வில் குருவாக வந்ததால் குருவின் மந்திரத்தைச் சொல்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க. நன்றி!

இராமர் கண்ணன், திருமங்கலம்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 26 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 4

வணக்கம்.ஒரு மனிதன்"ஜீவ நாடி பார்க்க வேண்டுமெனில் அவன் விதியில் ஓர் அளவு புண்ணிய கர்ம இருக்க வேண்டும், ஏன் என்றால் இறைவனுடன் மற்றும் அகத்திய பெருமான் போன்ற புராண காலத்து சித்தர்களுடன் நேரடியாக உரையாடி நமது"கர்மவினை குறைப்பதற்கும் நமது ஏதிர்கால வாழ்க்கையின் விதி அறிந்து அதற்கு தகுந்தாற் போல் தக்க பரிகாரங்களை அறிந்து ,அவற்றை சரி செய்து நமது"விதி மாற்றும் வல்லமை பெறுவதற்க்கு"மிகுந்த கொடுப்பினை ஜீவ நாடி ஆகும் இப்பேறு வாய்க்க பட்டவர்கள்"இறையருள் பெற்ற புண்ணிய ஆன்மாக்கள் ஆவர்🙏.இதில் முருக பெருமான் அருளால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் திருமிகு.ஜெகதீஸ்வரன் அய்யா"தொடர்பு"நட்பு"கிடைத்தது ;மிக பெரிய "அதிர்ஷ்டம். கடந்த 10 ஆண்டுகளாக பலருக்கும் ஜீவ நாடி கேட்டுள்ளோம். அப்படியே 100% நடந்து நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றது. இன்னும் ஜீவ நாடி வாக்கின் படியே நாங்கள் நடந்து வருகின்றோம். இது எங்கள் பூர்வ புண்ணியமே. முருகா சரணம். குருவே சரணம்.
திரு.பரமசிவம், அகத்தியர் இறையருள் மன்றம், மதுரை
ஒம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 24 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 3

ஜீவ நாடியை மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டு வந்தேன். அதில் உரைத்தபடி  முருகன் அருளால் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. எங்கள் மகிழ்ச்சிக்கு ஜீவ நாடியில் வாக்குரைக்கும் முருகப்பெருமானே காரணம். ஜீவ நாடிக்கும், ஜீவ நாடியை படிக்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அய்யாவிற்கும் மிகுந்த நன்றியை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு குறிப்பிட்ட ஆலயத்தை மட்டும் மூன்று முறை தரிசனம் செய் என்று ஒரு பரிகாரம் மட்டுமே ஜீவ நாடியில் எனக்கு அருளப்பட்டது. அதை முறையாகக் கடைபிடித்தேன் இன்று கைமேல் பலன் கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. உண்மையில் ஜீவ நாடி அற்புதம்... நன்றி!
கிஷோர், பேங்களூர்.
                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 21 நவம்பர், 2018

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 2

நன்றி: http://tut-temple.blogspot.com


அனைவருக்கும் வணக்கம்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் 
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், இந்த முறை சஷ்டி விரதம் மேற்கொள்ள
 நமக்கு முருகப் பெருமான் ஆணையிட்டுள்ளார். இதோ மீண்டும் 
இரண்டாம் பகுதியில்
 ஜீவ நாடி அற்புதங்கள் தொடர்கின்றது.

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 1 ல் நம் அன்பர் ஒருவர் திருமண விஷயமாக 
ஜீவ நாடி படிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் படித்திருப்பீர்கள். அவருக்கு
 ஜீவ நாடி படிக்க உத்திரவு கிடைத்ததும் அவர் இணையத்தில் ஜீவநாடி பற்றி 
தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார். இதே போன்ற தேடுதல் அவர் பலமுறை 
செய்த போது, அவருக்கு திருஅண்ணாமலையில்  நடைபெறும்  மகேஸ்வர பூசை  பற்றிய பதிவு கண்ணில் பட்டுள்ளது. இந்த பூசை பற்றி அறியவும்,
செய்வதற்கும் நாம் கொஞ்சமாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 
எனவும், இந்த பூசை செய்தால் நாம் செய்த அனைத்து தீய கர்மாக்களின்
 தீங்கும் நம்மை விட்டு அகன்று முன்னோர்களின் ஆசி கிட்டும் எனவும் 
செய்திகள் கிடைத்தது.

உடனே திருஅண்ணாமலை ஆசிரமத்திற்கு அலைபேசியில் அழைத்து 
மேற்கொண்டு அந்த அன்பர் விபரங்கள் கேட்ட போது, பூசைக்கு ஆகும் 
பொருட்களை பட்டியலிட்டு மொத்தம் சுமார் பத்தாயிரம் செலவாகும் 
என்று கூற, நம் அன்பர் யாம் பொருளை ஏற்பாடு செய்துவிட்டு தொடர்பு
 கொள்வதாக கூறி விட்டு, மீண்டும் ஜீவ நாடி தேடலில்  மூழ்கலானார். 
ஜீவ நாடி படிக்க உள்ள செய்திக்கும், இந்த மகேஸ்வர பூசைக்கும் என்ன 
தொடர்பு என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. முருகனின் விளையாட்டை பொறுத்திருந்து பாருங்கள்.

இப்போது நம் அன்பருக்கு ஜீவ நாடி படிக்க உத்திரவு கிடைத்து விட்டது.
 அந்த நாளும் வந்தது. ஈரோடு அருகே உள்ள அந்தியூர் சென்று அங்கிருந்து 
மந்தை முருகன் கோயிலை அடைந்தார். அங்கு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்பாலிக்கின்றார். கோயிலின் பின்னே உள்ள மலையும், இயற்கையும் 
நம்மை அங்கே நிலை பெற செய்யும் என்பது கீழே உள்ள காட்சிகளைப் 
பார்த்தல் தெரியும். கோவிலின் பின்னே உள்ள மலை அகத்தியர் 
வடிவில் காட்சி தருவது கண்டு அதிசயித்தோம்.







ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை 27 முறை வலம் வந்து அங்கே அவருடைய ஜீவ  
நாடி படிக்க நம் அன்பர் காத்திருந்தார். முருகன் அருள் முன்னிற்க, அழைப்பு 
வந்ததும் உள்ளே சென்றார் நம் அன்பர். முதல் முறை ஜீவ நாடி பார்க்கப் 
போகிறோம் என்ற பதட்டம் ஒரு புறம். நல்வாக்கு முருகனிடமிருந்து வர 
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம். சிலருக்கு அவர்களுடைய நேரம்,
காலம், கிரக நிலை பொறுத்து நாடி வராது போவதும் உண்டு. இது போல் 
அமைந்து விட்டால் என்ன செய்வது? அதனால் தான் இங்கே ஜீவ நாடி பார்க்க 
செல்லும் முன்பு தினமும் நம்மால் இயன்ற வரை ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை
 போற்றி வருதல் நலம்.

சுமார் 1 நொடிப் பொழுதில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் 
சுவாமிகளுடன் பரஸ்பரம் அறிமுகம் நடந்தது. உடனே முருகனை போற்றி ஒரு 
பாடல் பாடி ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சுவடியைப்பிரித்தார்.
 அடுத்து ஜீவ நாடி படிக்கப்பட்டது. மடை திறந்த வெள்ளம்போல 
வாக்கு வந்து கொட்டிக்கொண்டே இருந்தது.  அன்பரின் பெயர் உரைக்கப்பட்டது. 
வீட்டின் நிலை சொல்லப்பட்டது. அன்பரின் தொழில்நிலையும் வந்தது. 
அன்பருக்கோ திருமண உறவு பற்றி கேட்க ஆசை. முதல் திருமண உறவு  
எப்போது 
முடியும்? இரண்டாம் திருமணம் எப்போது நடக்கும் என்பது போன்ற 
அடுக்கடுக்காய் கேள்விகள் இருந்தது. அடுத்து தான் முதல் திருமண 
உறவு முறியும், அடுத்த திருமணம் பற்றி இப்போது பதில் இல்லை என 
வந்தது. முதல் திருமண வாழ்க்கைக்கு கர்மக்கணக்கே காரணம். 
இது தீர வழி ஒன்று 
சொல்கிறேன் என்று கூறினார். அன்பருக்கு ஆச்சரியம் தாங்க 
முடியவில்லை. அன்பர்க்கு மட்டுமல்ல. நமக்கும் தான். திருஅண்ணாமலை 
மகேஸ்வர பூசை செய்ய சொல்லி பரிகாரம் வந்தது. ஏதோ விட்ட குறை, 
தொட்ட குறை ;போலவே இது இருந்தது. ஏற்கனவே நம் அன்பர் இது பற்றி 
பேசியதை பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருக்கின்றோம். பரிகாரம்
 முடித்து 10 மாதம் முடித்து ஜீவ நாடி கேட்க மீண்டும் உணர்த்தப்பட்டது.


வணக்கம் சொல்லி அங்கிருந்து அன்பர் விடை பெற்று வந்தார். பின்னர் 
நான்கைந்து மாதங்களில் மகேஸ்வர பூசைக்கான தொகையை தயார் செய்து திருஅண்ணமலை குடும்பம் சகிதமாக சென்று மகேஸ்வர பூசை செய்தார். 
பூசை செய்து இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததது. வழக்கில் தீர்ப்பு நம் அன்பர் பக்கம் 
சாதகமாக வந்தது.  சுமார் நான்காண்டுகளாக தீர்க்கப்படாதிருந்த இந்த பிரச்சினை ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் அருளால் முழுமை பெற்றதாக சொன்னார்.இதோ அடுத்த மறுமணம் சார்ந்து ஜீவ நாடி கேட்க சென்று 
வருகின்றார். அனைத்தும் முருகன் அருளாலே தான்.

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில் அமாவாசை பூசை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சில விபரங்களை மேலே இணைத்துள்ளோம். இங்கு சுமார் 18 அடி உயர் வேல் ஒன்று உள்ளது. இந்த வேலிற்கு பூசை செய்வதை காண நமக்கு கண் கோடி வேண்டும். எப்போது வாய்க்குமோ என்று தெரியவில்லை.





அடுத்த பதிவில் ஜீவ நாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

ஜீவ நாடி- வாசகரின் அனுபவம் - 2

Thamizhan Mediaa எனும் youtube channel ல் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடி குறித்து சில தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதன் கீழ் கருத்து தெரிவித்த ஒரு அன்பரின் கருத்து கீழே பதிவு செய்யப்படுகின்றது.
கருத்து:
நான் ஒரு ஆங்கில மருத்துவர்.....
அரசு பணியில் உள்ளேன்....
இந்த நாடியின் மகிமை கண்டு நான் மிகவும் பிரமித்துப் போய் உள்ளேன்.....

எனது உறவினர்கள் நண்பர்கள் அவருடைய மருத்துவ பிரச்சினைகள் எங்களால் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவ பிரச்சினைகள் இந்த ஜீவ நாடியின் மூலம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருள்மிகு ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களின் மூலம் தீர்த்து வைக்கப் பட்டுள்ளது....
இந்த இறையருளை கண்டு நான் மிகவும் பிரமித்துப் போய் உள்ளேன்.... முருகனின் அருள் மேலும் பரிபூரணமாக கிடைக்கட்டும் அனைவருக்கும் இந்த ஜீவ நாடியின் மூலம் நன்றி
Dr.Kumar, Coimbatore.

வெள்ளி, 16 நவம்பர், 2018

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி-1

 நன்றி: http://tut-temple.blogspot.com

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1

அனைவருக்கும் வணக்கம்.

இன்று சங்கடஹர சதுர்த்தி.

மூத்தோனை வணங்குகின்றோம். எந்த ஒரு புதிய முயற்சிக்கும் ஐங்கரனின்
 ஆசி முக்கியம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று பாடி, முருகனருள் முன்னிற்கவும், அகத்திய பெருமானின் 
அருளாளாளும் இந்தப் பதிவு அருளப்படுகின்றது.

என்ன ஒற்றுமை..முருகன் புகழ் பாட, அவர் அண்ணன் விநாயகரை வணங்கி
 இந்த தொடர்பதிவை ஆரம்பம் செய்கின்றோம். நாம் ஏற்கனவே கூறியபடி 
ஜீவ நாடி அற்புதங்கள் என்று தொடர்பதிவு அளிக்க நமக்கு குருவருள் 
கூட்டியுள்ளதை தெரிவித்து இருந்தோம். இதோ இன்றைய பதிவில் 
தொடர்கின்றோம். நாடி, ஓலைச்சுவடி,ஏடு பார்த்தல் என்பதெல்லாம் 
நம் நாட்டில் மட்டும் தான் காணக்கிடைக்கும் ஒரு அதிசயம் ஆகும். 
வேறெங்கும் இது போல் நாடி பார்த்தல் என்பது காண இயலாத ஒன்று. 
சரி நாம் ஜீவ நாடி அற்புதம் என்ற அனுபவத்திற்கு செல்வோம்.

அன்பர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய அலுவலக
 தோழன் திருமணத்திற்கு மயிலாதுறை சென்று இருந்தார்.அப்படியே 
வைத்தீஸ்வரன் கோயில் சென்று தரிசித்து, காண்ட நாடி பார்த்துள்ளார். 
திருமண விஷயத்தில் ஆர்வம் இருக்காதே பின்ன. காண்ட நாடிப்படி 
2013 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது. கண்டதே காட்சி..
கொண்டதே 
கோலம் என்பது போல் அவரே எதிர்பார்க்கா வண்ணம் திருமண வாழ்வில்
 புயல் வீசியது. விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் 
வழக்கு தொடுக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கும் 
2014 ஆண்டில் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு
 ஓட்டமும் நடையுமாக இருந்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நாடி மீதான ஆர்வம் அதிகரித்தது. 
பிரபலமான நாடிகளில் வாசிப்பு நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது திருவருள் சக்தி என்ற ஜோதிட மாத இதழில் முருக நாடி பற்றி எழுதி 
இருந்தார்கள். அவனுக்கு நம்பிக்கை போய் விட்டது. இந்நிலையில் நண்பர் 
சித்தர் மார்க்கத்தில் ஈடுபட்டு அகத்தியரை வழிபட தொடங்கி விட்டார். 
அகத்தியர் வழிபாட்டில் கிடைத்த நண்பர்கள் உதவியுடன் மீண்டும் முருக நாடி பற்றி பேச்சு தொடங்கியது.சரி.ஒரு முறை முயற்சி செய்து பாப்போம் என்று எண்ணி அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சரியாக தொடர்பு கிடைக்கவில்லை.

இணையத்தில் நாடி பற்றி தேடிய போது , மகேஸ்வர பூசை பற்றி கண்டு திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் இந்த பூசை செய்வார்கள் என்று கேள்விப்பட்டு, அங்கு திரு.சரவணன் சுவாமிகளை அழைத்து பேசிய போது, பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அன்பரால் மகேஸ்வர பூசையும் 
செய்ய முடியவில்லை. ஒரு புறம் முருக நாடி பார்க்க நமக்கு வழி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், மற்றொருபுறம் திருஅண்ணாமலையில்
 தயவு சித்தாஸ்ரமத்தில் மகேஸ்வர பூசை செய்ய முடியவில்லையே என்ற
 ஏக்கம் வேறு.

சரி...முருக நாடி பற்றி பேசிக் கொண்டிருப்பதால் சற்று முருகன் பற்றிய
 செய்திகள் பார்த்து விட்டு, ஜீவா நாடிஅற்புதங்கள் பற்றித் தொடர்வோம்.




நாம் நவராத்திரி  தரிசனங்களைப் பார்த்த போதே, நம் கண்ணில் முருக 
சிந்தனை பற்றிய செய்தி கண்ணில் பட்டது. ஆம்..சஷ்டி விரதம் பற்றி இனி காண்போம்.


 முருகனைத்தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் 
மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில்
 வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார
 சஷ்டி விரதம் எனப்படும்.

கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி'
என்றும், `ஆனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். ஆனந்த 
சுப்பிரமணிய பூஜை: ஆனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர் 
முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம்.

திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த (நாக)
சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.
முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம்.அல்லது, இணைந்த இருபாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்தமுருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும்விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் 
அதிகமாக உள்ளது.

இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது.இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும்நம்புகின்றனர்.

  கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் 
மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும்
 என்ற பழமொழியாக கூறுவார்கள். அடடா! பதிவின் தலைப்பின் விளக்கம் இப்பொழுது கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றோம்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ 
உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று 
எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். 
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது 
மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும்
 இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், 
நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி 
நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும்.

ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம்
 செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் 
வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, 
குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் 
விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம்
 ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து,
 பூப் போட்டு அலங்கரியுங்கள்.

 பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.

ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

 மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா 
சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். 
முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் 
அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் 
முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். 
பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் 
கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.

அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை 
நிறைவு செய்ய வேண்டும்.

வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை 
நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், 
புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி
 முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் ! ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் 
மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் 
அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய
 விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள்
 சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன்
 தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம்
 நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும்,
 இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் 
குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய 
என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன்
 என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். 
ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது 
அர்த்தஜாம பூஜையாகும்.

ஆறின் மகத்துவம் கண்டு தெளிகின்றோம் முருகா!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் , பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

மீண்டும் அந்த அன்பர் முருக நாடி படிக்க முயற்சி செய்துள்ளார். ஒரு நாள் 
சுமார் 50 முறை கூட அலைபேசியில் அழைத்தும் பலன்கிட்டவில்லை.இந்த சூழ்நிலையில் அவர் பஞ்சேஷ்டி அகத்தியர் சதய பூசைக்கு சென்றுள்ளார்.
அங்கு சில சித்த அடியார்கள் தொடர்பு கிடைத்தது. அதன் மூலம் முருக நாடி 
உறுதி செய்ய அன்பர் அலைபேசி எண் கிடைத்துள்ளது. அடுத்த நாள் காலை 
அவரை தொடர்பு கொண்டபோது, அந்த அன்பர் மீண்டும் அழைப்பதாக 
கூறினார்.

அன்றைய தினம் மதியம் அழைப்பில், தாம் இது போல் சில துன்பங்கள் அனுபவிப்பதாக கூறியுள்ளார் நம் அன்பர். அவர் உடனே பேசி முருக நாடி
 படிக்க உத்திரவு தந்து அதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட செய்தி நம் அன்பருக்கு கிடைத்தது.

பார்த்தீர்களா? ஜீவ நாடியின் மகிமையை. இந்த ஜீவ நாடி படிக்க நமக்கு 
உத்திரவு கிடைக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். குருவருள் இருந்தால் தான் இது போன்ற திருவருள் நமக்கு கிடைக்கும். எத்தனை  
நாட்கள் ஜீவ நாடி உத்தரவிற்கு அலைபேசியில் முயற்சி செய்திருப்பார் நம்
 அன்பர். எப்படி ஒரு பயணத்தில் அவருக்கு ஜீவ நாடி படிக்க உத்தரவு கிடைத்துள்ளது.அனைத்தும் முருகன் அருள் தான்.

அன்பர் ஜீவ நாடி படித்தாரா ? அவருடைய திருமண வாழ்வின் துன்பம் 
தீர்ந்ததா? என்பது போன்ற அற்புதங்கள் அடுத்த பதிவில் தொடரும்.
                       ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி- வாசகரின் அனுபவம் - 1




Thamizhan Mediaa எனும் youtube channel ல் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடி குறித்து சில தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதன் கீழ் கருத்து தெரிவித்த ஒரு அன்பரின் கருத்து கீழே பதிவு செய்யப்படுகின்றது.
கருத்து:
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி!!! குருஜி வணக்கம், தங்களுடைய இந்த பதிவை கேட்கும்போது முருக பெருமானின் கருணையை சொல்ல வார்த்தை இல்லை உணர்வு பூர்வமாக மட்டுமே அனுபவிக்க முடியும். தங்களிடம் 02.04.2017 அன்று நான் ஆண் வாரிசு வேண்டும் என்று ஜீவ நாடி பார்த்தேன் அதில் முருக பெருமான் ஆண் வாரிசு கிட்டும் என்று வாக்கு கொடுத்து ஒரு ஆலயத்தை பரிகாரமாக உரைத்தார், உரைத்தது போல் 07.03.2018 அன்று விசாக நச்சத்திரம், சஷ்டி திதியில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. முருக பெருமானின் அற்புதங்களை நாம் ஜீவ நாடி வாக்கு கேட்டு, பிறகு நமக்கு நடக்கும் பொழுது நம் கண்களில் சந்தோசம் கண்ணீராய் வரும். மக்களுக்கு வழி காட்டும் தங்களது சேவை முருக பெருமாளின் அருள் ஆசியினால் என்றென்றும் தொடரவேண்டும்.
S.T.மணிகண்டன், சென்னை.
நன்றி: Tamizhan mediaa, Youtube channel

                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

வியாழன், 1 நவம்பர், 2018

ஜீவ நாடியில் வந்த ஆச்சரியமூட்டும் பலன்கள் பரிகாரங்கள்


                                                  
இன்று திருப்பூரில் இருந்து ஒரு தம்பதி ஜீவ நாடி பார்க்க வந்தார்கள். வழக்கம்போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடியைப் பூஜித்து நாடி வாசிக்கத்துவங்கினார்கள். முருகப்பெருமானது அருளால் வந்தவர்கள் ஏற்கனவே நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி குறித்து கேள்விப்பட்டு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி வந்தார்கள் போலும். மட மடவெனெ ஜீவ நாடியில் வாக்கு வந்தது. ஒரு சிலர் என்ன வருகின்றது என்று பார்ப்போம் என்று சோதிக்கும் மனம்போக்கில் நாடி கேட்க அமர்ந்தால் ஜீவ நாடியில் சித்தர்களும் முருகப்பெருமானும் ஏதும் பெரிய அளவில் வாக்கு உரைப்பதில்லை என்பது அனுபவம். அதே சமயத்தில் முழு நம்பிக்கையுடன் வருபவர்களை சித்தர்களும் முருகப்பெருமானும் ஜீவ நாடியில் நல்ல வாக்கு சொல்லாமல் கைவிடுவதில்லை. அந்த தம்பதிகளுக்கு என்ன உரைத்தார் முருகப்பெருமான்…எடுத்த எடுப்பிலேயே வயிற்றில் ஒரு உறுப்பு நசியத் தொடங்கி இருக்கின்றதே மைந்தா வைத்தியம் கொள் என்றார்…ஆம் நாடி கேட்பவருக்கு சிறுநீரகத்தில் கிரியாட்டின் அளவு கூடி உள்ளதாக வந்தவர் தெரிவித்து அதை தீர்க்கும் வழிகள் அறியவே வந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு ஜீவ நாடி ஒரு குறிப்பிட்ட வைத்தியத்தைச் சொல்லி அங்கு செல் உனக்கு விடை கிட்டும் என்றது. அடுத்து தாய் தந்தை அனுகூலம் இல்லை குறிப்பாக தந்தையின் ஆன்மா சாந்தியில் இல்லை. தந்தையின் மறைவிற்கு பின் உனக்கு தொழிலிலும் சரிவு, உடன் பிறந்த ஒரு தமக்கையும் மறைவு, உனக்கும் ஆண் வாரிசு இல்லை இரண்டு பெண்தான் என்றது ஜீவ நாடி. அடுத்து மனைவி கழுத்தில் தாலி தவிர மற்ற எல்லா நகையும் அடகிற்கே போய் இருக்கும் என்றது ஜீவ நாடி. முற்றிலும் உண்மை என்று சொல்லி வந்தவர் கண்கலங்கிக் கொண்டிருந்தார். காரணம் சொன்னது அனைத்தும் 100% உண்மை. இதில் ஒன்று கூட ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு தெரியாது. ஜீவ நாடியில் என்ன வருகின்றதோ அதை உரைப்பது மட்டுமே அவர் பணி. நம்மைப் பற்றி முன் பின் தெரியாதவர் வெறும் ஓலையில் சுவாமிகள் கண்களுக்கு மட்டுமே தெரியும் எழுத்தில் இவ்வளவு துல்லிய பலன்களா என்று வாய் விட்டு அழுதார். அடுத்து உன் நோய் நிச்சயம் நீங்கும் என்றும் தந்தைக்கும் சகோதரிக்கும் ஒரு ஆன்ம சாந்தி செய்து கொள்ளவும் என்றும் அதற்காக ஓர் ஆலயம் சென்றாலே போதும் என்றும் அடுத்து வாக்கு வந்தது. அப்படி அந்த குறிப்பிட்ட ஆலய வழிபாடு முடித்தால் உடனடியாக நோய்க்கு ஒரு தீர்வும், பூர்வீகச் சொத்தில் இருக்கும் வில்லங்கம் முடிவுக்கு வரவும், இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவளைக் கரையேற்றிவிடுவாய் என்றும், தற்சமயம் இருக்கும் கடன் தீர விடிவு கிட்டும் என்றும் உரைத்த முருகப்பெருமான் இரும்பு சார்ந்த தொழிலே உனக்கு நல்லது என்றார். இதைக் கேட்ட அந்த நபர் இரும்பு தொழிலே செய்வதாகக் கூறினார். இப்படி இன்னும் பல அவர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்களையும் சில வழிபாடுகளையும் சொல்லி ஜீவ நாடி வாக்கை முடித்துக் கொண்டார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள். இங்கு சாந்தி பரிகாரம் என்பது பெரிய செலவு ஏதும் இல்லாத ஆலய வழிபாடே வந்துள்ளது. அவரது மனைவி மிகுந்த அழுகையுடன் ஆசி வாங்கினார். அவரும் ஆசி வாங்கி சுவாமிகள் கைகளிளேயெ திரு நீறு அணிவிக்கச் சொல்லி வணங்கினார். தங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டதாக கண்ணீர் மல்கி விடைபெற்றார்கள். அதற்கு குரு நாதர் அவர்கள் உங்களது பக்தியும் நம்பிக்கையுமே இப்படி துல்லிய வாக்கு வர காரணமாக அமைந்தது. நாம் எப்படி அனுகுகின்றோமோ அப்படியே ஜீவ நாடி நம்மை அனுகும் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இப்படி தினசரி ஜீவ நாடி மூலம் பல திருவிளையாடல்கள் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் நடந்து வருவது நிதர்ஸன உண்மையாகும்.
                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஜீவ நாடியின் சிறப்பு- பயன் அடைந்தவரின் கருத்து


ஒரு மனிதனின்வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின்சிறப்புமற்ற நாடிகளில்ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரேஎழுதப்பட்டிருக்கும்ஆனால் ஜீவநாடியில்ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத்தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும்அதுவும் ஒவ்வொருமனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும்இதுவேஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்தனக்குக் கிடைத்தஅகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து,அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன் ஐயா அவர்கள்சாதாரண மனிதர் முதல்அன்றையஇன்றைய பிரபலஅரசியல்வாதிகள்நடிகர்கள்தொழிலதிபர்கள் என பலரும்ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர்தமிழ்நாடுமுழுவதிலிருந்தும் ஏன்உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவநாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்அந்த வகையில் ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் அகத்தியர் வாக்கு கேட்ட பலர் இன்று நமது ஸ்ரீஞாஸ்கந்தர் ஜீவ நாடியில் 100% பலன் பெற்று வருகின்றார்கள் என்பதற்கு ஹனுமத்தாஸன் ஐயா மூலம் அகத்தியர் உரைத்த அதே இரகசியங்களை நமது ஜீவ நாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைக்கின்றார்கள் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும். பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும். அப்படி பலன் பெற்ற ஒருவரின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகின்றது.
Comment:
I see jagadeeshwaran sir and skanda naadi as a perfect step by step guide in life.in my past 7.5 search of naadi granthas finally came to a conclusion through the sincere and divine jagadeeshwarsn iyya.om gnana skanda murthi pugazh ongattum.om agatheesar pugazh ongattum.I can certainly feel hanumatgdasan iyya present currently as jagadeeshwaran sir.such a divine and enjoyable tone while doing naadi reading clearly indicates jagadeeswaran sir's sincerity towards the subject.
Udayshankar, Mumbai.
                                         
                                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!