ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.
படம்: சூன்-5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை கெளமார மடாலய ஆதினம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் திருமடத்தின் வளாகத்தில் மடாலய பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று கள் நடவு செய்தார்.
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக