வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

நாடி ஜோதிடம்: உண்மைச்சம்பவம்



முப்பத்தாறாண்டுகளுக்கு முன்மதுரை ஆதீனத்தின்முந்திய ஆதீன

கர்த்தராகிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் கூறிய உண்மைச் சம்பவம் இது.

 மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக தஞ்சை

மாவட்டத்தில் ஓ¡¢டத்திற்குச் சென்றார்.அவருடைய ஏடு கிடைத்தது. ஜோதிடர்

படித்துக் கொண்டே வந்தார். எல்லாம் சரி யாகவே இருந்தது. திடீரென்று

பாதியிலேயே நின்றுவிட்டது. ஏனெனில் அதற்கு மேல் தொடர்ச்சியாக

இருக்கவேண்டிய ஏடுகளைக் காணோம்!

 ஜோதிடர் கூறினார்.

 "இந்த ஏடுகள் என்னுடைய மூதாதைகளுக்குச ்சொந்தம். என்

தந்தையாருக்குப் பிறகு நானும் என் தம்பியும் பாகப்பிரி வினை செய்து

கொண்டோம்.அப்போது சரி பாதி ஏட்டுச்சுவடிகளை என்னுடைய தம்பி

எடுத்துக்கொண்டான். இப்போது நான் படித்த சுவடியின் மீதிப் பாகம்

என்னுடைய தம்பியிடம் இருக்கலாம். அவனிடம் சென்று பாருங்கள்.

 தற்சமயம் அவன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கிறான்.", என்று

கூறி ஜோதிடர் தன் தம்பியின் விலாசத்தையும் கொடுத்தார்.

 சில காலம் கழித்து மதுரைக்காரர், திருவனந்தபுரத்திற்குச் சென்றார்.

 பாதி வழியில் ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். அவருடன் சென்ற

நண்பர்தப்பினார். விடுபட்டுப் போன அந்த ஏடுகளில் என்னதான் இருந்தது

என்பதைப் பார்க்க அவர் ஆர்வம் கொண்டார். ஆகையால் திருவனந்தபுரம்

சென்று இளைய ஜோதிடரைச் சந்தித்து அவருடைய அண்ணன் கூறிய

விபரங்களைச் சொல்லி அவர்கொடுத்த சுவடிக்கட்டின் முதல் பாகத்தின்

ஏடுகளைக் கொடுத்தார்.

 அவற்றை வைத்து மீதிப் பகுதியைத் தேடிக் கண்டு பிடித்து இளைய

ஜோதிடர் படிக்கலானர்.

 அப்பகுதியில் ஒரே ஓர் ஏடுதான் இருந்தது.

 அதன் ஆரம்பத்தில்ஒரே ஒரு வாசகம்மட்டுமே காணப்பட்டது.

 'மலையாள தேசஞ்சென்று

 மரணத்தில் ஏகுவானே"

என்றிருந்தது!

 சாகவேண்டிய தருணத்தில் அவர் மலையாளதேசம் செல்லவேண்டி

யிருந்தது.ஏட்டைத்தேடி அவர் மலையாள தேசம் சென்றார்.

 முழுச்சுவடியும் தஞ்சாவூரி லேயே இருந்திருந்தால் அவர் மலையாளம்

சென்றிருக்கமாட்டார்.

 ஏடு தேடும் நோக்கமே இல்லாமலிருந்திருந்தால் அவர் தஞ்சைக்கும்

சென்றிருக்கமாட்டார்.

 காரணம்/காரி யம் ஆகியவற்றிற்கிடையே எவ்வளவு சிக்கலாக

தொடர்புகள்அமைந்துள்ளன , பார்த்தீர்களா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக