வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஸுப்ரமண்யம் என்றால்

ஸுப்ரமண்யம் என்றால் நல்ல ப்ரஹ்மண்யன்ப்ரஹ்மண்யன்என்றால் வேதத்தை அனுசரிப்பவன்ப்ரஹ்மம் என்ற பதத்திற்குவேதம் என்ற அர்த்தமும் உண்டுவேத மந்திரத்தில் ஒருகுழந்தைக்கு தீட்சை கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்குப்ரஹ்மோபதேசம்எனவே அவன் ப்ரஹ்மச்சாரி ஆகிறான்.வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிய பரமாத்மாஸ்வரூபமாக இருப்பவர் ஸுப்ரமண்யர்.

வேதத்திற்கு முக்கியம் அக்னி உபாசனைஸுப்ரமண்யர் அக்னிஸ்வரூபம்ஏனென்றால் பரமேஸ்வரரின் நேத்ராக்னியிலிருந்துதோன்றியவர்தான் ஸுப்ரமண்யர்வேதஸ்வரூபம்வேதம்படிப்பதும் சொல்லிக் கொடுப்பதும் தொழிலாக உள்ள ஷட்கர்மநிரதராகிய ப்ராம்மணரின் தெய்வம் ஸுப்ரமண்யர்எனவேஆசார்யாளும் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “மஹீதேவ தேவம்என்று கூறியிருக்கிறார்மஹீதேவர் என்றால் ப்ராம்மணர்.அவர்கள் தெய்வம் (மஹீதேவ தேவம்ஸுப்ரமண்யர்.

நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் ஒவ்வொரு முகமாகவர்ணிக்கும் பொழுது,

ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா அது அந்தணர்வேள்வியோர்க்கும்மே” என்று கூறுகிறார்எனவே ஸுப்ரமண்யர்வேதத்திற்கும் வைதீகத்திற்கும் அதிதேவதை.

எந்த நேத்ராக்னியால் மன்மதனை பஸ்மம் செய்தாரோ அந்தநேத்ரா அக்னியில் இருந்து பிறந்தவர்தான் ஸுப்ரமண்யர்.

ஸுப்ரமண்யர் மநஸிஜ கோடி கோடி லாவண்யர்மநஸிஜன்என்றால் மன்மதன்ஆகவே ஸுப்ரமண்யர் கோடி கோடிமன்மதர்களின் அழகு ஒருங்கே சேர்ந்த அழகைப் பெற்றவர்.

பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் பகவத்பாதாள் மூன்றாம் அத்யாயம்மூன்றாம் பாதத்தில் முப்பத்திரண்டாவது ஸூத்ரத்தில் பாஷ்யம்எழுதும்பொழுது பிரம்மாவின் மானஸ புத்ரராகிய ஸனத்குமாரர்கூட தானே ருத்ரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காகஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார் என்று கூறியுள்ளார்திரிபுரரஹஸ்யத்தில் மஹாத்ம்ய காண்டத்தில் முப்பத்தேழாம்அத்யாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது.

ஸனத்குமாரர் சுகாசாரியார் மாதிரி பிரம்மஞானிஅவர் தன்கனவில் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில்தான் தேவ சேனாபதியாக இருப்பதாகக் கனவு காண்கிறார்இந்தக்கனவைப் பற்றித் தன் தகப்பனார் பிரம்மாவிடம் கூற அவர்ஒருநாள் நீ உண்மையாகவே தேவசேனாபதியாகி அசுரர்களைஸம்ஹாரம் செய்யப் போகிறாய்.” என்று கூறுகிறார்மேலும்பிரம்மா கூறும்பொழுது, “இந்த ஜன்மாவில் நீ எல்லாம் ஒரேபிரம்மம் என்று நினைப்பதால் இன்னொரு ஜன்மாவில் இதைச்செய்வாய்.” என்று கூறுகிறார்.

ஒருவருக்கு வாக்குமனம்சரீரம் ஆகிய மூன்றும்ஒன்றாகிவிட்டால் அவருக்கு ஒரு சக்தி வந்து விடும்அவர்கனவில் நினைப்பவை கூட உண்மையாக நடந்துவிடும்.ஸனத்குமாரர் பரப் பிரம்மத்தை தன்னில் தானாக அனுபவித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்உலகமே ஒரு கனவு என்றநிலையில் தான் கண்ட கனவைப்பற்றிச் சிந்திக்கவேயில்லை.

கனவில் கண்ட நிகழ்ச்சி பொய் ஆகிவிடக்கூடாதே எனபரமேஸ்வரன் கவலைப்பட்டார்எனவேதம்பதி ஸமேதராகபரமேஸ்வரன் அவர் முன் காட்சியளித்தார்எல்லாமே பிரம்மம்என்ற நிலையில் இருந்த ஸனத் குமாரருக்கு அவர்களைஉபசரித்து பூஜை செய்ய வேண்டும் என்ற நினைப்பேஏற்படவில்லை.

நீண்ட நேரம் நின்று பார்த்த பார்வதி பரமேச்வரர்கள் “ஞானி என்றகர்வத்தினாலே உலகத்தின் தாய் தந்தையாகிய எங்களைஅவமதித்துவிட்டாய்நாங்கள் சாபம் கொடுத்தால் என்னசெய்வாய்?” என்று ஸனத்குமாரரிடம் கேட்டார்கள்ஆனால்ஸனத்குமாரரோ “ருத்ரனாகிய நீ என்ன சாபம் கொடுத்தாலும்ஆத்மாவை பாதிக்காது” என பதில் கூறினார்.

இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த பார்வதி பரமேச்வரர்அவருடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டி “உனக்கு என்ன வரம்வேண்டுமானாலும் தருகிறேன்.” என்று கூறினார்.

ஆனால் ஸனத்குமாரர் “எதை அடைந்தபின் வேறு எதையும்அடைய வேண்டியது இல்லையோவேறு எதையும் அடையவேண்டிய ஆசையும் கூட இல்லாமல் நிறைந்த நிறைவாகஇருக்கும் எனக்கு உம்முடைய வரத்தினால் எந்தப் பயனும்இல்லை.” என்று பதில் கூறினார். “அதுமட்டுமல்லஉமக்குஏதாவது வரம் வேண்டுமானால் நான் தருகிறேன்.” என்றும்கூறினார்.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பரமேச்வரன் “மகாஞானியானநீ இந்த ஜன்மாவில் பிரம்மாவின் பிள்ளைஅவருக்குக் கிடைத்தஇந்த பாக்யம் எனக்குக் கிடைக்க அடுத்த ஜன்மாவில் நீ எனக்குமகனாகப் பிறக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஸனத்குமாரர் பதில் கூறும்பொழுது “உனக்குப் பிள்ளையாகப்பிறக்கிறேன்.” என்று வாக்கு கொடுத்தார்பார்வதி பரமேச்வரராகஅவர்கள் காட்சியளித்தும் “உங்களுக்குப் பிள்ளையாகப்பிறக்கிறேன்.” என்று கூறாமல் பரமேச்வரனை மட்டும் நோக்கிஉனக்கு பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று கூறினார்இதைக்கேட்டதும் பார்வதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிற போது அவர் நேராக தனக்கும்பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

சாஸ்திரங்களில் கணவன் எதைப் பிரார்த்தித்துக் கொண்டாலும்அது மனைவிக்கும் சேர்த்துத்தான் என்று கூறியிருக்கின்றன.எனவே மனைவி தனியாக வரம் கேட்கவேண்டும் என்றில்லை.கணவர் கேட்டதால் அது அவளுக்கும் சேர்த்துத்தான் என்பதால்மனைவிக்கும் புத்திரன்தான்.

ஆனால் ஸனத்குமாரராகிய பிரம்மஞானிக்கு கர்ப்பவாசத்தில்பிறக்க இஷ்டமில்லைபிரம்மஞானியாகிய அவர் அதைஅருவருப்பாகக் கருதினார்அப்படியே அவர் பார்வதி தேவியிடம்வேண்டினார்.
யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்மம் ஆகிவிடுவான்என்ற வரத்தை பஸ்மாசுரன் பரமேச்வரரிடமிருந்துபெற்றிருந்தான்அதன்படி அதைப் பரிசோதிக்க அவன்பரமேச்வரன் தலையில் கைவைக்க முயன்றபோது அவர்மறைந்து விட்டார்அம்பாளும் சாதாரணப் பெண்போல் தன்னைமாற்றிக் கொண்டாள்பரமேஸ்வரன் மறைந்ததைக் கண்டஅவன் அப்படியே உருகி ஒரு பொய்கையாக (குளமாக)மாறிவிட்டான்பஸ்மாசுரன் மறைந்ததும் பரமேச்வரன் மீண்டும்தோன்ற பார்வதியும் தன் திவ்யதேகத்தை மீண்டும் எடுத்துக்கொண்டதுடன்தன்னுடைய பதிவிரதா தர்மத்துக்குஅடையாளமாக அந்தப் பொய்கை அப்படியே இருக்குமாறுஅருள்புரிந்தாள்.

ஸனத்குமாரர் அடுத்த ஜன்மாவில் பரமேச்வரரின் தேஜஸாகப்பிறப்பதென்றும் பிறகு அம்பாள் அதை தன் சரீரமாகியபொய்கையில் அதைத் தாங்குவது என்று முடிவு செய்தாள்.

பரமேச்வரன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளைவெளியிட்டவுடன் கங்கை பிரம்மாவின் உத்தரவின் பேரில்அந்தப் பொறிகளை அந்தப் பொய்கையில் சேர்த்த பிறகு சரவணப்பொய்கையான அதில் ஸுப்ரமண்யர் அவதரிக்தார்.

பிறகு அவர் தேவர்களுக்கெல்லாம் சேனாபதியாகி அசுரர்களைவெல்கிறார்ஸனத்குமாரரின் கனவின்படி அவரே இப்படிசரவணப் பொய்கையில் பிறந்து கார்த்திகைப் பெண்களால்வளர்க்கப்பட்டு முன் ஜன்மத்தில் அவர் கண்ட கனவின்படி தேவசேனாபதியாகி அசுரர்களை வெற்றி கொண்டார்.
ஸ்வாமி என்றால் எல்லாக் கடவுள் களையும் குறிக்கும்பொதுச்சொல் என்றாலும் அது குமாரஸ்வாமியாகியஸுப்ரமண்யரையே குறிக்கும்அமரகோசம் என்ற சம்ஸ்க்ருதஅகராதியில் ஸ்வாமி என்பதற்கு,தேவஸேனாபதி:சூர:ஸ்வமீ:கஜமுகானுஜ என்றேகூறியிருக்கிறதுதேவர்களின்படைத்தலைவன்:சூரன்:ஸ்வாமி:யானை முகன் தம்பி என்றுஅர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக