சனி, 15 பிப்ரவரி, 2014

முருகன் வேறு பெயர்கள்



• முருகன் - அழகுடையவன்

• குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.

• குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .

• காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.

• சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.

• சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.

• வேலன் - வேலினை ஏந்தியவன்.

• சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.

• கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.

• கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

• சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.

• தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.

• வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.

• சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.

• மயில்வாகனன்

• ஆறுபடை வீடுடையோன்

• வள்ளற்பெருமான்

• சுப்ரமணியன்

• சோமாஸ்கந்தன்

• முத்தையன்

• சேயோன்

• சேந்தன்

• விசாகன்

• சுரேஷன்

• செவ்வேள்

• சரவணபவன்

• கடம்பன்

• ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.

• சிவகுமரன் - சிவனுடைய மகன்.

• வேலாயுதன், சிங்கார வேலன் - வேல்என்ற ஆயுதத்தினை உடையவன்

• ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்

• சரவணன் -

• கார்த்திகேயன் -

• குமரன் -

• சுவாமிநாதன் -

• செந்தில்நாதன் -

• அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.

முருகன் குறித்த பழமொழிகள்

• வேலை வணங்குவதே வேலை.

• சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய

தெய்வமில்லை.

• வயலூர் இருக்க அயலூர் தேவையா?

• காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.

• அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?

• முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம்

இல்லை.

•சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால்

அகப்பையில் வரும்)

• கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

• கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்

• பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

• சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.

• செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?

• திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

• வேலனுக்கு ஆனை சாட்சி.

• வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.

• செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக