தஞ்சாவூர் பெரிய கோயிலில்வாராஹி அம்மனுக்கு ஒரு சன்னிதி
இருக்கிறது. இதைப்பற்றிய சில மர்மமான, விசித்திரமான் செய்திகளை மறைந்த
மேதை டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் கூறினார்.
பெரிய கோயில் என்று இப்போது சாதாரணமாக அழைக்கப்படும்
பெருவுடையார் அல்லது பிரஹதீஸ்வரர் கோயில், ராஜராஜ சோழரால்
கட்டப்பட்டது. 1012ஆம் ஆண்டில் இது திருக்குடமுழுக்குப் பெற்றது. ஆனால்
அங்கு இருக்கும் வாராஹி தேவியின் திருஉரு அந்தக் கோயிலுக்கும் முந்தி
உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தது. அந்த தேவியின் மூர்த்தம் எப்படியும்
7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உள்ளதாக இருக்கலாம்.
அந்தக்காலகட்டங்களில்
வாராஹி, நிசும்பசூதினி, மகிஷாசுரமர்த்தி, வைஷ்ணவி, சப்தமாத்ருகா,
போன்ற
தெய்வங்களின் வழிபாடு செல்வாக்குடன் விளங்கியது. பல
அரசபரம்பரையினருக்குக்
குலதெய்வமாக விளங்கினர்.ஆகவே, பெருவுடையார் கோயிலுக்கும்
முற்பட்டே
அந்த வாராஹி தேவியின் உரு இருந்திருக்கிறது.
தேவார காலத்திலேயே 'தஞ்சைத் தளிக்குளத்தார்' என்னும் கோயில்
ஒன்று தஞ்சாவூரில் இருந்திருக்கிறது. அது எந்த இடத்தில் இருந்தது என்பது
அறியப்படவில்லை. ஆனால் பெருவுடையார் கோயில் கட்டப்பட்டப்பின்னர்
அந்தக்கோயிலின் பிரஸ்தாபமே இல்லை.
ஆகவே தஞ்சைத்தளிக்குளத்தார்கோயிலின்இருப்பிடத்திலேயே
பெருவுடையார் கோயில் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள்
கருதுகின்றனர்.
இருக்கலாம். அந்த வாராஹியும் அந்தக் கோயிலில் ஏற்கனவே
இருந்ததாகக்கூட
இருக்கலாம். சோழர்கள் தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், அந்தப்
பக்கங்களில் முத்தரையர் போன்றோர் இருந்திருக்கின்றனர். முத்தரையர்,
பாண்டியர் போன்றோர் வாராஹி போன்ற தேவியரை வணங்கியவர்கள்.
ஆக, தஞ்சை வாராஹி, பழமையானவள். எங்கிருந்து வந்தாள்?
தெரியாது. எங்கிருந்தோ வந்தவள்.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வாராஹி தேவிக்கு
மண்டபம் ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். அதற்குக் கும்பாபிஷேகமும் செய்ய
எண்ணியிருந்தார்கள்.
தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜசோழன் சிலை வைக்கவேண்டும்
என்று கருணாநிதி 1975-வாக்கில் நடவடிக்கைகள் எடுத்தார்.
அது மத்திய அரசு/தொல்பொருள்துறையினர் ஆகியோருக்கும் தமிழக
அரசுக்கும்
இடையே பெரிய பிரச்னை ஆகியது. அக்கோயில், தொல்பொருள் சின்னமாக
விளங்கியதால் அதில் புதிய நிர்மாணங்கள் எதையும் நிறுவ சட்டத்தில்
இடமில்லை
என்று வாதிக்கப்பட்டது.
'ராஜராஜ சோழனின் சிலையை வைக்கக்கூடாது; ஆனால் வாராஹிக்கு
மட்டும் புதிதாக மண்டபம்கட்டலாமா?' என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
ஆகவே வாராஹியின்மண்டபத்தை இடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
அந்த மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அதே தேதியில், தி.மு.க.அரசு,
மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சில மாதங்களில் எமெர்ஜென்சி,
தேர்தல்
போன்றவை வந்து, இந்திரா காந்தியும் தோற்றுப்போனார்.
ராஜராஜ சோழர், ஏதோ ஓர் ஆண்டில் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில்
பிறந்தவர். அவர் 985-ஆம் ஆண்டில் பட்டத்துக்கு வந்தார். ஆனால் எந்தத்
தேதியில்
அவர் பட்டதுக்கு வந்தார் என்பது அறியப்படவில்லை.
பெருவுடையார் கோயிலில் ஐப்பசி சதயந்தோறும் ராஜராஜசோழரின் பிறந்தநாள்
கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.
1983-ஆம் ஆண்டு இன்னொரு விபரீதம் நடந்தது.
அப்போதிருந்த தமிழக அரசு, ராஜராஜசோழரின் முடிசூட்டின் ஆயிரமாவது
ஆண்டுவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது. ஆனால் உண்மையிலேயே
அது
998-ஆம் ஆண்டுவிழாதான்.
ராஜராஜசோழரின் செப்புச்சிலைக்குப் பொது இடத்தில் முடிசூட்டுவிழாச்
செய்ய
ஏற்பாடாகியது. அது இன்னொரு பிரச்னையாக உருவாகியது. முடிவில் தெய்வ
சன்னிதியிலேயே அவ்விழாவைக் கொண்டாடுவது என்று முடிவாகியது.
அப்போது
பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் கையால் முடிசூட்டுவது என்று முடிவு
செய்தார்கள்.
அதன்படியே செய்யப்பட்ட முடிசூட்டுவிழாவின் போது, அப்போதிருந்த
முதலமைச்சர் எம்ஜியார், முதன்முறையாகமயக்கமடைந்தார். கோயில்
வாசலில் அது
நிகழ்ந்தது. அதன்பின்னர் சில நாட்களில் அவருடைய நிலைமை மிகவும்
மோசமாகிவி ட்டது. அதனை அடுத்து பிரதமர் இந்திரா காந்தியும்
சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டு ஐப்பசி சதயத் திருவிழாவும்
நடைபெறவில்லை. அநத ஐப்பசி சதயத்தன்றுதான் இந்திரா காந்தியின் அந்திம
யாத்திரை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக