திருவருள் இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்
136 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை)
139 திருவருள் இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்
நூற்பா139
சீறி இகழ்வார் தெருத்தலை வாயில்
தோறும் அலைவுறீஇச் சுழலும் பாவலன்
செக்குஒரு கவியால் செம்பொன் ஆகப்
பாடவும் செய்யும் பழுதுஇலா அருளே.
இப்பாடலில் கூறப்படும் வரலாறு என்ன என்று தெரியவில்லை. பொருள் ஈகைகுணம் சற்றும் இல்லாத இரவலரைச் சினம் கொண்டு துறத்தும் கஞ்சன் வீட்டு வாயிலில் அலைந்து கொண்டிருக்கும் புலவன் கூடச் செக்குமரம் பொன்னாக மாற்றும் கவியை இயற்றுவதும் ஈசன் அருளே.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
ஒம் குருவே சரணம்
பதிலளிநீக்கு