சனி, 1 ஆகஸ்ட், 2020

நடுவர் நல்லது கெட்டதை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும்


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
            புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை)

     110  நடுவர் நல்லது கெட்டதை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

நூற்பா : 115                                                                                                                                                                                                                          
நன்றிடை தீதும் தீதிடை நன்மையும் 
ஒன்றுமாறு உணர்வோர்  ஒவ்வோன் புலவனே
எந்த ஒரு நல்ல பொருளிடத்தும் சில தீய பண்புகளும், எத்தகைய தீய பொருளிடத்தும் சில நல்ல குணங்களும் இயல்பாக விரவியே இருக்கும்., ஆனால் இதை உள்ளபடி உணர்வோர் ஒரு சில அறிஞரே என்றவாறு

முற்றிலும் நல்ல பொருள் அல்லது மனிதர் என்றோ, அவ்வாறே அனைத்து வகையாலும் தீயபொருள் அல்லது மனிதர் என்றோ இல்லை, எங்கும் இரண்டும் விரவியே காணப்படும், இது பற்றியே,. “குணம்நாடிக் குற்றமும் நாடிஅவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்றார் வள்ளுவப் பெருந்தகை.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

3 கருத்துகள்:

  1. அய்யா தங்கள் அனுமதி கொடுத்தால் நாடி பதிவுகளை மற்றவர்களியிடம் பகிர்ந்து கொள்ளலாமா? நாடி பற்றி பல நபர்களுக்கு தெரியவில்லை அவர்கள் புரிந்து கொள்ள உதவும்

    பதிலளிநீக்கு