ஞாயிறு, 30 மார்ச், 2014

அம்பிகை அந்தாதி

32. பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்!
அன்னையே! அருள்ஞான அமுதூட்டும் 
அகிலாண்ட அம்மையே!
தன்னையே அறிந்தார்க்கு தந்தையும்
தம்மையும் தெரிக்காட்டும்
முன்னையே! முக்திதரும் முழுமுதற்
மெய்மையே! மும்மையே!
நின்னையே சரணானோம் நின்மலி!
நிறைவுதருவாய் அருவுருவே!
ஆருயிர் அன்னையே! கருணை மிகு இறை ஞானத்தினை ஊட்டுகின்ற, அகிலத்தை எப்போதும் ஆளுகின்ற அம்மைப் பார்வதியே! தன்னையே உணர்ந்து தெளிந்து அறிந்தாருக்கு, யாவருக்கும் தந்தையாகிய இறையோனையும், தாயாகிய தன்னையும் வெளிப்படுத்திப் புலப்படுத்தும் முந்தைப் பொருளே! வீடுபேற்று முக்தியினைத் தருகின்ற முழுமுதல் இறையாகிய உண்மைப் பொருண்மைப் பொருளே! உம்மை, இம்மை, மறுமை எனும் எக்காலமும் முக்காலமும் ஆகின்ற மூவகை நிலைப்பேறே! நின்னையே சரண் புகுந்தோம் மாசற்ற நிருமலி, நிமலை, நீலி, சிவசங்கரி, மாதேவி, மலைமகளே! நிறைவெனும் முழுமைப் பூரணத்தை அருளுவாய் அருவுருவான அன்னைப் பராசக்தியே!
தன்னை அறிந்து நடுநிலை தவறாது ஒழுகி, தேடலில் முனையும் தவ சீலருக்கு, முன்னைப் பொருளை, தந்தையை உணரக் காட்டும் ஞானாம்பிகை அன்னையாய், ஞானத்துள் பரம்பொருளைச் (ஈசனைச்) சுட்டும் தெய்வத்தின் தெய்வமாய், மூலப்பொருளாக, காலங்களைக் கடந்து காலமாகவே இலங்கும் பராசக்தியே! வையத்துள் கிடந்துழலும் வாழ்வு நிறைவுற்று, மோட்சம் பெற, பரி பூரணத்தை, முழுமையை, நிறைவினை நல்குவாயாக! என்பதாம்.
இனிமை மிகுத்துக் கண் கவரும் பச்சைக் கிளியாகப் பாசமும் நேசமும் ஆகின்ற அன்பின் உருவம், பராசக்தி ஓம் அம்மையள், அன்னை அம்பிகையே!

புதன், 26 மார்ச், 2014

ஐந்து வகை சித்தர்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் சித்தர்கள் ஐந்து வகைச் சித்தர்களாகப் பிரிக்கப்படுகின்றனர் என்கிறார். அந்த ஐந்து சித்தர்கள்;

1. சுவப்ன சித்தர் 

கனவு மூலமாகத் தெய்வ அருளைப் பெற்றுப் பூரணமடைபவர்கள்.

2. மந்திர சித்தர்

மந்திராபதேசம் மூலமாகப் பரிபூரணமடைபவர்கள்.

3. ஹடாத் சித்தர் 

புதையல் கிடைப்பதனால் அல்லவது பணக்காரன் மகளை மணப்பதனால் தீடீர் பணக்காரனாவது போல, திடீரெனப் பரிபூரணமடைபவர்கள் இப்பிரிவினர். பாபிகள் பலர், திடீரென்று எப்படியோ தூயவர்களாகி ஈசுவரனை அடைகின்றனர்.

4. கிருபா சித்தர்

ஈசுவர கிருபை மூலமாகப் பக்குவமடைபவர்கள். காட்டை வெட்டித் திருத்துகிறவன் பழைய கிணற்றையோ, கட்டிடத்தையோ கண்டுபிடித்தால் அவைகளையே சீர்படுத்திக் கொள்கின்றன. அது போல, சிலர் சிரமப்படாமலேயே பரிபூரணமடையும் பாக்கியசாலிகளாக இருக்கின்றனர்.

5. நித்ய சித்தர் 

புடலை, பூசனி முதலிய கொடிகளில் காய் தோன்றிய பிறகு பூவின் இதழ்கள் வெளி வருவதைப் போல, நித்ய சித்தர் பிறக்கும் போதே பரிபூரணமாய்ப் பிறப்பவர். முக்தியடைய அவர்கள் செய்வதாகத் தோன்றும் பிரயத்தனங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்கே ஆகும்.

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
குரு வாழ்க! குருவே சரணம்!

ஞாயிறு, 16 மார்ச், 2014

குலம் தழைக்க குலதெய்வம்

                        குரு வாழ்க! குருவே சரணம் !              

வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம்.

அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.

தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சள் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள்.

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம்தான்.

சித்தர்கள் வாழும் சுருளி மலை

மேற்கு தொடர்ச்சி மலை ...
வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும். இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25-வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-

" அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா? "
என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வதில்லை. கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்ன தானம் செய்தனர். அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங்காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான். 

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சுருளிமலை - தேவலோக கிரி கைலாசப் புடவு - இமயகிரி சித்தர் வனம்
எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில் [இமயமலை கைலாயம்] "இமயகிரி சித்தர்" என்றொருவர் இருந்தார். அவர் சிவபெருமானைத் தினமும் நேரில் பூசிக்கப் பெற்றவர். அவர் மீது சிவபெருமானுக்கு மிகவும் பிரியமுண்டு. அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் எக்கியங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள்.

அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர், ரிஷிகளுக்கு தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் "மகா லிங்க" சொரூப மாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.

பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகும், தேவலோக கானல்களையும், வனப்பூஞ் சோலைகளும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.

கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார். ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள் கூறியது " நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந்தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று இங்கு வருகையில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் " என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி, முனிவர், சித்தர்களைப் பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய இடம் பார்த்து ஆற்றோரம் இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும் படியாகவும் உள்ளே விசாலமாகவும் புடவு செய்து [குகை] குகைக்கு முன் பூத நாராயண சித்தரை காவலிருக்க வைத்துச் சொன்னதாவது,

இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள் தவ சிரேஷ்டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும். உள்ளே வரலாம், இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில்,

கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர் சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொடுக்க விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.

சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள், முனிவர், சித்தர்கள் இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து, "அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே உங்கள் தவம் முடிந்தவுடன் கைலாய வாழ்வு கொடுப்போம்" என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.

அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர் மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன் வெளிவருகின்றார்.

வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க விரும்புகின்றேன். ஆகையால் தங்களை யான் கைலாயத்தில் தினமும் பூசித்த வழக்கப்படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளி, சுவாமி லிங்க சொரூபமாயும், தாய் அம்மை சொரூபமாயும் அமர்ந்தனர்.

அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும் பார்த்து இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்தமையால் இந்தப் புடவுக்கு "கைலாசப் புடவு" என்ற பெயருடன் விளங்கட்டும் என்று பெயரிட்டனர். அன்று முதல் இந்தப் புடவு என்ற "கைலாச புடவு" "கைலாசநாதர் குகை" என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது. 

இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன் நுழைந்த அதிசயக் குகை இது ஒன்றுதான். 

வேல்மாறல் மஹாமந்திரம்

இது வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் அருளியது. பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மகிமை அளவில்லாதது.ஒரே செய்யுளே மாறி மாறி வருவது போல் அமைந்திருக்கும் இத்துதியைக் கவனமாகச் சொல்ல, எதிர்பாராமல் வரும் ப்ரச்னைகள் நீங்கும். 

சம்ஸ்கிருதம் போல், தமிழிலும் உச்சரிப்புக் கவனத்துடன் சொல்ல வேண்டிய துதிகள் கணக்கில்லாமல் உள்ளன. அவற்றுள் ஒன்று இது.

வேலும் மயிலும் சேவலும் துணை

திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

2 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

3 சொலற்(கு)அரிய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

4 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

5 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

6 சினத்(து)அவுணர் எதிர்;த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

7 துதிக்கும்அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

9 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

10 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

11 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

12 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

13 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

14 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

15 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

16 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

17 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

18 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

19 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

20 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

21 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்ப்அவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

22 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

23 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

24 திசைக்கியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

25 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

26 தளத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

27 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

28 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

29 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

30 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

31 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

32 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

33 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்;குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

34 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் மறத்தைநிலை கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

35 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

36 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

37 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

38 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

39 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

40 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஷக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

41 தனித்துவழி நடக்கும்;;என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

42 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅவை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

43 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

44 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குiஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

45 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

46 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

47 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

48 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

49 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(ப)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

50 பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புஷிக்கஅருள் நேரும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

51 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சுடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

52 ஸக்ஷரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்உறhp
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

53 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

54 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகிp வரைக்குஉறயை இடித்துவழி கானும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

55 தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

56 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

57 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழித்(து)அலற மோதும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

58 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

59 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்ப(து)என
மலர்ககமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

60 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

61 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

62 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

63 தருக்கிநமன் முருக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழக்குநிகர் ஆகும்
திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

64 சொலற்(கு)அhpய திருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகை