புதன், 26 மார்ச், 2014

ஐந்து வகை சித்தர்கள்



ஸ்ரீ ராமகிருஷ்ணர் சித்தர்கள் ஐந்து வகைச் சித்தர்களாகப் பிரிக்கப்படுகின்றனர் என்கிறார். அந்த ஐந்து சித்தர்கள்;

1. சுவப்ன சித்தர் 

கனவு மூலமாகத் தெய்வ அருளைப் பெற்றுப் பூரணமடைபவர்கள்.

2. மந்திர சித்தர்

மந்திராபதேசம் மூலமாகப் பரிபூரணமடைபவர்கள்.

3. ஹடாத் சித்தர் 

புதையல் கிடைப்பதனால் அல்லவது பணக்காரன் மகளை மணப்பதனால் தீடீர் பணக்காரனாவது போல, திடீரெனப் பரிபூரணமடைபவர்கள் இப்பிரிவினர். பாபிகள் பலர், திடீரென்று எப்படியோ தூயவர்களாகி ஈசுவரனை அடைகின்றனர்.

4. கிருபா சித்தர்

ஈசுவர கிருபை மூலமாகப் பக்குவமடைபவர்கள். காட்டை வெட்டித் திருத்துகிறவன் பழைய கிணற்றையோ, கட்டிடத்தையோ கண்டுபிடித்தால் அவைகளையே சீர்படுத்திக் கொள்கின்றன. அது போல, சிலர் சிரமப்படாமலேயே பரிபூரணமடையும் பாக்கியசாலிகளாக இருக்கின்றனர்.

5. நித்ய சித்தர் 

புடலை, பூசனி முதலிய கொடிகளில் காய் தோன்றிய பிறகு பூவின் இதழ்கள் வெளி வருவதைப் போல, நித்ய சித்தர் பிறக்கும் போதே பரிபூரணமாய்ப் பிறப்பவர். முக்தியடைய அவர்கள் செய்வதாகத் தோன்றும் பிரயத்தனங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்கே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக