சனி, 2 மே, 2020

ஆலய வழிபாடு

கஜபூசைச் சுந்தர சுவாமிகள்  மூன்றாம் குருமகாசந்நிதானம் 
சிரவை ஆதீனம், கௌமார மடாலயம்.

ஆலயம் ஆ – விரிந்து நின்ற இறைவனது இயற்கையின்பமான சாந்நித்ய
தன்மையை அடக்கி விளங்கும்   ஞானிகள், யோகிகள் தமது
உபாசனைக் கண்கொண்டு காண்பதற்கும் மற்றுள்ள சரியை கிரியையாளர்கள்
வழிபாடு புரிந்து மாயை கண்மங்களைப் போக்கி உபாசனைக் கண் பெறுவதற்கும்
துணையாக லயம் – லயசக்திக்கு மூலகாரணமாய் விளங்கும் இடம் என்பர்.
உயிர்கள் இறுதியில் அடையதக்கது வீட்டின்பம்; அவ்வீட்டின் பத்துக்குரிய
மார்க்கங்கள்  நான்கு; அந்த மார்க்கங்களாவன சரியை, கிரியை, யோகம், ஞானம்
என்பன. அவை முறையே இறைவனைப்
 புறத்தே வைத்து வழிபடுவது,
அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபடுவது, அகத்தே கண்டுவழிபடுவது, பார்க்கும்
இடம் எங்கும் நீக்கம் அறக்கா ண்பது. இந்நான்கு நெறிகளும் முறையே சோபனமான
 விளங்குவன. “விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய் கனி போல் அன்றே பராபரமே” என்பார் தாயுமானவர்.
இவ்வாறு உள்ள மார்க்கங்களுக்கு ஆதாரமாக உள்ளது ஆலயம். இந்தப்
படிமுறையில் சென்றாலொழிய பேரின்ப வீடெய்தல் இயலாது என்பது நமது
சைவ சித்தாந்த ஆன்றோர் கண்ட துணிபாம்.
சிலர் இந்த முறையில் முதல் படியில் கூடக் கால் வைக்காமல், தம்மைப்
பரமஞானிகளாக எண்ணிகொண்டு "ஆலய வழிபாடு, விழாக் காண்டல்,
ஆராதனை வழிபாடு முதலியவை வேண்டா. அவை எல்லாம் கீழ்ப் படியில்
உள்ளவர்கள் செய்யத் தக்கவை. மேல்படியில் உள்ள எமக்கு பூசை செபதவம்
ஒன்றும் வேண்டாம்” என வாய் ஞானம் பேசித் திரிவர். ஆனால் நாவிற்கு
ருசியான உணவும், கண்ணிற்க்கு வியப்பான காட்சியும், ஏனைய புலன்களுக்குரிய
போகமும் தேடுவர்.  புறத்தே உண்ணல், உடுத்தல், உறங்கல் உள்ளளவும்
புறப்பூசையும் செய்ய வேண்டும். தூங்குகின்றவன் கைப்பொருள் தானே நழுவுதல்
போல உலகப் பொருள் எல்லாம் கடவுளாகக் கண்டு உண்ணல், உடுத்தல்,
உறங்கல் அற்றால் புறவழிபாடும் தானே அகன்றுவிடும்.
திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆண்டவன் தம்மை முதல்
குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த, உணர்ந்த வாதவூரடிகள்
ஆமாறுன்  திருவடிக்கே அகம் குழையேன் அன்புறுகேன்
பூமலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில்
தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே”.
என்பார்.
அவஞானம் தொலைக்கும், சிவஞானப்  அன்றபாலை எம் அன்னை
உமாதேவியார் தந்தருள உண்டு ஈன  சம்பந்தம் நீக்கிய ஞானசம்பந்தப்
பெருந்தகையாரும், 
----------சாய்காட்டெம் பெருநாற்கே 
பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே “
என்பார்.
இங்ஙனம் எல்லாப் பெரியோர்ளும் கூறுதல் காண்க. அரிய பெரிய
வேலைப்பாடுகள் அமைந்த மாட கூடங்களைக் கொண்ட நகரமாயினும்,
கோயில் என்ற ஒன்றை மாத்திரம் தன்பால் அமையக் கொள்ளவில்லையானால்
அதனை அப்பர் பெருமான்,
திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்-----------------------------
-----------------------------அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே”
என்பார்.
ஆதலில் நமது சைவப் பெருந்தகைகள் ஆலயம் இல்லாத
வெற்றிடத்தை எவ்வாறு கருதியிருந்தார்கள். கோயில்கள் இல்லாத ஒரு
நகரத்தைப் பொருள்படுத்திச் சென்றதாக அவர்களது வரலாறுகளில் உண்டா?
இறைவன் இல்லமாக விளங்கும் ஆலயங்களை வழிபட்ட பெரியோர்களைத்தான்
நாம் இன்று உரியோர்களாகவும்,
ஆசாரியன்மார்களாகவும். வழிபடுக்றோம்.
அவர்கள் பெருமைதான் இன்றும் பொருள்சேர் முகமாக மிளிர்கின்றது.
பரமுத்தராக இறைவன்
இன்னருளில் கலந்த திருவாதவூரடிகள்,
பாண்டியன் குதிரை வாங்கி வரும் பொருட்டுக் கொடுத்த பொன்த்திரளை எல்லாம்
திருப்பெருந்துறையில் ஆலயத் திருப்பணி செய்து, அதன் காரணமாகப்
பாண்டியன் கொடுத்த தண்டனை ஏற்றுச் சிவபெருமான் திருவருள் பெற்றதும்,
பத்திராசலம் இராமதாசர், தாணிசா என்ற இசுலாமிய அரசனுக்குச் சேரவேண்டிய
பொருளில் பத்திராசலக் கோயில் மணி செய்து சிறைப்பட்டு,
இராகவன் திருவருள் பெற்றதும் ஆலயவழிபாட்டின் காரணங்களாகும்.
இன்னும் நமது சமயாச்சாரிய மூர்த்திகள் தேவாலயங்கள் உட்பட நகர்ப்பறங்களில் கோபுர விமானங்களைக் கண்டு வழிபட்டமை திருத்தொண்டர்
புராணத்துள் காண்க.  அப்பரடிகள்  உழவாரத்தின் படையறாத் திருக்கரத்தோடு
ஆலய வழிபாட்டை நிறனவுறுத்தலையும் அவரது தமக்கையார் திலவதியார்
திருவதிகையில் சென்று புலர்வதன்முன் அலகிட்டு மெலுக்கும் இட்டுப் பூமாலை
புனைந்தேத்தி வழிபட்டமையும் அறிக.  அப்பரடிகள் ஆலயத்தில் தொண்டு
செய்வார்க்கு கிடைக்கும் பேரருள்களை“ஆலயம் தானும் அரன் எனத்
தொழுமே” என்ற 12ம் சூத்திரத்தாலும் கண்டு தெளிந்து ஆலய வழிபாடு செய்து
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் பேற்றிறினை எய்துவோமாக.
நன்றி:  சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக