ஞாயிறு, 17 மே, 2020

தவறாகப் பாடுவோரை யாரும் மதியார்.
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய
அறுவகை இலக்கணம்

நூற்பா: 53
தவறாகப் பாடுவோரை யாரும் மதியார்
கொண்டத் துறையினை கோதுபடக்கூறின் மண்டலத்தாரும் மதியார் அன்றே.
இதன் பொருள்: தாம் பாடத் தொடங்கிய துறையைத் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் யாருமே அவரைப் போற்ற மாட்டார்கள்.
விளக்கம்: அகத்துறையோ புறத்துறையோ எதுவாக இருப்பினும், அல்லது இலக்கணம், தத்துவம் முதலிய அறிவுத் துறைகளில் எதுவாக இருப்பினும்
சொல்ல வந்ததை குற்றம் இல்லாமலும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். அதில் தவறு இருந்தால் அறிஞர்கள் மட்டுமல்ல
பாமரர்களும் மதிக்க மாட்டார்கள் என்பது கருத்து. மண்டலத்து ஆரும் மதியார் எனவும் மண்டத்தாரும்  மதியார் எனவும் இரட்டுறமொழிதலாகக் கொள்க.

நன்றி: பதிவு: ஆ.காளியப்பன் அவர்கள்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம்,கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக