பணத்திற்காக கவிதையை விற்கக்கூடாது
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.
புகலரும் பனுவற் பொறிபணம் கருதி விற்கத் துணிவது மேண்பாடு அன்றே.
இதன் பொருள்: இயற்றுதலுக்கு அரிய நூலை இயற்றி அதைப் பணத்திற்காக விலைப் பொருள் ஆக்குதல் சிறப்புடைய செயல் ஆகாது.
விளக்கம்: இந்நூற்பாவும் செல்வர்கள் தரும்பரிசலை உத்தேசித்து,"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன; காடறியும் மறவனை நாடு ஆழ்வாய் என்றேன்; பொல்லாத ஒருவனை நான்நல்லாய் என்றேன; போர்முகத்தை அரியாதானைப் புலிஏறு என்றேன்; மல்லாரும் புயம் என்றேன் சூம்பல்தோளை; வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்(தனிப்பாடல்) என்றது போல மாய்வார் போற்றும் செயலை விலக்கியதாகும். புலமை விலை மதிப்பற்றது. ஆதலால் அதை விலை பேசலாகாது.பதிவு: புலவர் ஆ.காளியப்பன்.
நன்றி: சிரவையாதீனம்
தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்,
கௌமாரமடாலயம், கோவை.
தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்,
கௌமாரமடாலயம், கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக