வெள்ளி, 3 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 2


துள்ளி விளையாடி வரும் தோகைமயில் மேலே
வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருக்கும் கந்தவேலே

குறுநகை தவழ்ந்திடும் குருகுகப் பெருமானே
குறைகளை நீக்கிடும் குருபர பெருமானே

இன்பம் துன்பம் எதிலும் நீ துணை வர வேண்டும் வெள்ளிமலைநாதன் எங்கள் பெருமானே

கண்ணிமை போல் காத்தருள வேண்டும் பன்னிரு கைகளால் சேர்த்தருள வேண்டும்
வெள்ளிமலை நாதன் எங்கள் பெருமானே

பிறவிப்பிணி தீர்க்கும் பேரின்ப நெறி சேர்க்கும் கந்தனே கலியுகக் கடவுளே கண்கண்ட தெய்வமே
வெள்ளிமலை நாதனே எங்கள் பெருமானே..

சிவாயநம!


நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

1 கருத்து:

  1. கந்தன் வடிவாய் விளங்கும் என் குருவே சரணம்...ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்...
    குருவாய் குறைகளை களைந்து உண்மைநிலையை உணர செய்து உயர்வழிகாட்டும் என் குருவிற்கு குருபௌர்ணமி தினத்தில் கோடானகோடி சரணங்கள்....

    பதிலளிநீக்கு