ஔவைப்பிராட்டியின் சிறப்பு
79 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
புலமை இலக்கண- மரபியல்பு
79 ஔவைப்பிராட்டின் சிறப்பு
நூற்பா: 84
படுபலா உருள்பனை பழம்தரப் பைந்தமிழ்
பாடிய கிழவியும் பழுதுஇலா தவளே
வெட்டப்பட்ட பலா மரமும், துண்டிக்கப்பட்டு உருளும் 84
இதன்பொருள்:
பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு.
விளக்கம்:
இந்நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
ஓம் குருவே சரணம்
பதிலளிநீக்கு