அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள் அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்
கோல விழியும் குரு நகையும் பிறை நிலவும்
சிவவடிவில் விளங்கிடும்
எழிலரசி அனுதினமும் அடியவர் காண
அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
முப்பெருந்தேவி என்று உயர்மறைகள் போற்றுமே
ஐம்பூத கோள்கள் உனைப் பணிந்து பணியாற்றுமே
தமிழ் போற்றும் தேவாரம் திருவாசகம் இவையாவும் தாயே உன் பதம் போற்றுமே
செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் தாயே
தரணியை காத்தருளும் நாயகி நீயே
தீமை விலக நன்மை பெருக ஞானம் விளைய நலம் பல பெருக
ஆதவன் தொழும் பேரொளியை தினம் துதித்து உடன் அழைக்க
அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள்
அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்.
சிவாயநம!
நன்றி
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்,
தருமபுரி.
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.ஓம் குருவே சரணம்
பதிலளிநீக்கு