பட்டணம் மாரிமுத்து சுவாமிகளுக்கு அம்பிகை காட்சியளித்த போது அவர் பாடிய ஸ்ரீ வாரி ஜெபமாலை இங்கு கொடுக்கப்பப்பட்டுள்ளது. இதை ஆதரவோடு கற்போர், கேட்போர் அனைவருக்கும் எல்லா நலன்களும் பெருகி பேரானந்த பெருவாழ்வு பெறுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.
விருத்தம்
ஆதியெனும் பராபரியே யருளே தாயே
ஆனந்தி
புவனை வாலை யம்பிகையே நீ
சோதியே
யச்சுதனே யயனே வாணி
சோடசமே
திரிபுரையே சொரூபலக்ஷ்மி
நீதிதரு
மருமுகனே நீச தெய்வானை
நித்தியனே
வள்ளியணை மயிலும் வேலா
வாதிகளை
யதஞ்செய்யும் அனுமான் பாதம்
வணங்கி
சாமளி பாடல் வழுக்கிக் காப்பே
சித்தர்கள் துதி
ஸப்தரிஷி
மாமுனிவ ரடிகள் போற்றி
தாரணியைத்
தாங்கு மகத்தியன் போற்றி
சித்தர்களும்
பதிணெண்மர் தாள்கள் போற்றி
ஜெயந்தருகும்
புஜூண்டர் சீரடிகள் போற்றி
முத்தன்
கபீர் கமால் திருவடிகள் போற்றி
மூர்த்தி
மத்தான் சங்கிலி முத்தனடிகள் போற்றி
நித்தியமும்
நிருவாண தேசிகன் தாள்கள் போற்றி
நிரந்தரியைப்
பாட முத்தர் திருத்தாள் காப்பே
ஸ்ரீ பாலாம்பிகை ஜபமாலை
1.
ஓங்கார
ரூபவடி யுத்தமியே பத்தினியே
ஹரீங்கா சனத்தில் நிலைத்தவளே - பாங்காய்
2.
அறிவானந்த
குருவே யருளொளியே யம்பிகையே
பெரியானந்தந்
தரும் பேரொளியே – நெறியான
3.
அகரமொடு
வுகரமுநீ யானதொரு மகரமுநீ
சிகரமொடு
விந்து நாதத் தேவியுநீ – பகரவருள்
4.
பொற்பாதந்
தந்தருளும் பூரணியே காரணியே
சிற்பாதத்
தாண்டவியே ஸ்ரீங்காரி – சொற்போத
5.
ஓரெழுத்தா
யிரண்டாயுற்றுணரு மூன்றெழுத்தாய்
ஆறெழுத்து
ளஞ்சா யஷ்டா க்ஷரமாய் – சீரெழுத்தாய்
6.
அம்பதோ
ரக்ஷரமா யானசடா க்ஷரமாய்
தும்பத்
தரவுதித்த தூய பீஜாக்ஷரமாய் – எண்பத்தோர்
7.
எழுகோடி
மந்திரமா யெந்திரமாய் தந்திரமாய்
முழுகாடி
நின்ற முச்சுடரே தொழுதாடும்
8.
சீரான்
முக்கோணச் செழுஞ்சுடரே நல்ல
பேரான் வைங்கோணப்
பெம்மானே – நேரான
9.
ஆறுமுகமாய்
சட்கோண வம்பிகையாய் நின்ற
பெறுமுகமா
யெண்கோட்டின் பேச்சியே – திருமுகமே
10. நவகோண சக்கரத்துள் நாதபரை ஸ்ரீங்காரி
நவரசத்தின்
ஞானம் நல்குவாய் – பவநீக்கும்
11. சோடசமாய் நிற்குத் துரியமணிச்சுடரே
நாடவருளாளிக்கும்
நட்பே – கூடவரும்
12. நாப்பத்தி முக்கோண நாயகியே நலந்தருவாய்
கார்பதுனது
கடன் கட்டழகி – சீர்பூத்த
13. மூலாதாரத் தொளியாய் மூச்சுடரி னுச்சியுமாய்
மேலாதாரத்
திருந்த வெண்மதியாய்ப் – பாலூரப்
14. பண்ணுஞ் சிவயோகப் பராபரியே ஞானக்
கண்ணே கருணைக்
கற்பகமே – எண்ணுங்
15. காமக் குரோதிபதி கள்வர்களை நீ நசிப்பாய்
வாமதேவியே
வந்தருள் வாய் – தாமதஞ் செய்
16. அந்தக் கரணமா யைம்புலனா யைம்பொரியாய்
பந்தநிறை
தத்துவத்தின் பண்மையின் – விந்தையர
17. அனைவர்களும் போற்றுமாருயிரே நினதடியின்
வினையறிந்தோர்
நெஞ்சின் விளக்கே – தனையர்களில்
18. மத்தான் குருவாக்கு மகமேராய் நிகழ்த்துகின்ற
வித்தாரமே
யருளும் மெய்ப்பொருளே - மத்தகத்தின்
19. முடிவில் நின்ற பூரணியே முத்தொழிலும் படைக்க
வடிவுடைய
காரணியே யண்டம்வர – நொடியில்
20. முக்குணமாய் முப்பொருளாய் முச்சுடராய் மும்மலமாய்
திக்குணமாய்
பஞ்சதிசை வடிவாய் அக்கணமே
21. பிஞ்ஞகனாய் மாலாய் பேசரிய ருத்திரனாய்த்
தஞ்சம் யேச்வரனாய்
சதாசிவனாய் – பஞ்சவினை
22. சிருட்டி திதிலயமாய் தெளிந்த திரோபவமாய்
தெருட்டி
யனுக்கிரகமாய்த் தெளிவுரவே – சுருட்டி
23. மெஞ்ஞான நாட்டமாய் மேவுகந்த முனைநடுவே
அஞ்ஞானமே
யகற்று மம்மையே – மெஞ்ஞான
24. வாலை புவனை மணோண்மணியே யம்மை
தூலநக்ம
காரணியே சுதந்தரியே – காலை
25. இடைபிங்கலையாய் இரண்டுக்கும் மேல்நடுவாய்
கடையிற்
சுழுமுனைமேற் காண்பாய் – திடம்பெறவே
26. சரஸ்வதியாய் லக்ஷ்மியாய் சங்கரியா யின்னம்
பரஸ்பர மனோன்மணியாய்
பராசக்தி – சிரஸ்கதியாய்
27. அஷ்டலக்ஷ்மி சோடசத்தை யம்பிகையே யானவில
இஷ்டமாய்
என்னாவி லிருந்தருளும்… கஷ்டமெல்லாம்
28. நசித்திடவே வந்த நாரணியே காரணியே
வசித்திடமாய்
வாழ்க வரமரளும் – நிசத்திடமே
29. ஐயுங் கிலியம் ஸௌவுமாய் நின்ற
மெய்ய மடிநடுவு
மேல்முடியாய் – துய்ய
30. தாயேநீ ஸ்ரீயும் அவ்வு முவ்வு மவ்வுமாய்த்
தோயேநீ வவ்சிங்
பவ்யல்வுமாய் - நீயே
31. நம நம சிவ சிவ ரா ரா ரா ரா
நமசிவய ஸ்ரீங்
ஹரீங் கென்றும் அமையுமே
32. ஹரீம் ஸ்ரீம் ரக்ஷி நிரந்தரியே நீ
ஸ்ரீம் ஓம்
பகவதி சிற்சக்தி – பாங்காண
33. நாதவிந்து நாரணியே நலமுடனே யுன்னடியைப்
போதச்சிர
முடிமேற் போற்றியே – நீதமாய்
34. ஸ்ரீம் ஓம் சுவாமியே சிவசக்தி யுடலுரும்
சீமலிங்
சிங்வங் கென்று நான்றுதிக்கப் – பெரிய
35. தாயு நீ தந்தையு நீ தாரமு நீ பிள்ளையு நீ
ஆயு நீ சோடத்தை
யருளீவாய் – நீயும்
36. ஆங் ஹரீங் ஸ்ரீங் அம்பிகையே யுனைத்துதிக்கப்
பாங்குடனே
சௌபாக்கியம் படைக்குநீ – தாங்கும்
37. ஓம் நம ஸ்ரீம் பராசக்தி வாவென்று
நாம் ஜெபிக்க
நல்வாக்கிய நல்குநீ – தாம்
38. ஹரிஹி ஓம் ஆம் உம் வாரஹியம்மா வாலை
அறிஞர்களை
இகழ்வோரை யதஞ்செய்ய – வருவாய்
39. பூமளியே ஓம் ஹரீம் ஸ்ரீம் ஒவ்வும் நல்வும்
புலனை
வாமளியே
திரிபுரையே வருவாய் – சாமளியே
40. உள்ள வங் சிங் அங் உங் மங் காணாய் நீ
கள்ளமிலா
வங்குஷாய வென்று வாழ்த்த – தெள்ளமுதே
41. அன்பாய் அங்சங் ஹயீம் உங் பங் கென்றே
தென்பாக
வாலை வங் திங் ரீங் மங் – கின்பாய்
42. உத்தமியே பத்தினியே ஓம் ஹரீமென்று
நித்தியமும்
நினைவளிப்பாய் நெஞ்சகத்தே – நத்தியே
43. ஓம் ஹீரீம் மசிவசி யென்றுற்ற வாளை நினைக்க
பாங்குடனே
அஷ்டபாக்கியம் பண்பவளவாய் - ஓம்
44. ஹரீம் அம்மெனவே நேரில் நில்லா நரி பாம்பு
திருடரெல்லாம்
ஓம் ஹரீம்
வசியென்றால் உலகமெல்லாம் வழிபடுமே – நாம்
45. மந்திர வாளைச் சிந்தை மாகரத்திற் றாங்கிடவே
இந்திரசலா
– மீஸ்வரியே யெனக்களிப்பாய் – சிந்தைமலம்
46. அறுத்தென்னை யாட்கொள்ளும் அம்பிகையே நாட்டம்
திருந்திடுவாய்
நிருவிகேற்ப நீ நிதமும் – பெருத்த
47. அண்டமுதீந் யருளநீ யாதியுநீ சேதியுநீ
பிண்டமுநீ
டிபராணணுநீ பிரியமுந் – தொண்டர்
48. துதித்தேற்று நாயவிதி தூய வெளி யொளியு நீ
பதித்தோர்க்கு
அநேக சித்தி படைப்புநீ – உதித்பூ
49. யானைமுத லெண்பத்து நாலுலக்ஷபேத
சேனையாய்ச்
சேதனரைச் சிருட்டித்த – தேனே
50. கௌணசித்தி ஞானக்கேடிலா மெய்த்தவமே
மௌன சித்தி
தந்தருளு மாமணியே – சௌரன் முதல்
51. சனகாதி புசுண்டர் சித்தர் ஸரஸ்வதி யுனைத்துதிக்க
கனகாதி கற்பகமே
கடையேன் புருவமையம் – முனைஜோதி
52. அங்கங்குந் தானாய் யமர்ந்தருளும் பூரணியே
இங்கு வந்தேழையிட
ரருப்பாய் – துங்க
53. தாயி பரி பூரணியே சௌந்தரியே மீனாக்ஷி
ஆயிமஹா மாரிமுத்தம்
பிகையே – பேய்
54. பில்லி சூனிய முதலாய் புதை மருந்து வைப்பு
சல்லியம்
வொட்டிய வித்தை தான் நசிக்கும் – மெல்லியே
55. உனை நினைக்க வாதமுடன் பித்த சிலேத்துமமும்
வினை நசிக்கு
மீஸ்வரியே விரைவில்லா – தனையே
56. சிந்தை செய் பிரம்ம சாபந்திரும் சித்தர்
சாபமெல்லாம்
விந்தை நவ
நாயகர்கள் மெய்யுணர்வாம் – நிந்தை
57. எழியேனை செய்யு மூடரின் பமது
மங்கிடவே
விழியே துட்ட சம்மார வித்தகியே - ஒழிய
58. திருவை யெனுந் திருநீற்றால் திரிசூலினியே
மருவை யெனு
மகுட சங்காரி நீ - குருவாய்
59. சரியையெனு மூர்த்தி சண்முகியே வைணவியே
கிரியையெனு
மந்திரத்தின் கிருபா நிதியே – நெரிகை
60. யோக மெனுஞ் சராசர உச்சிவழி யூடுருவ
யேகமா யிருவிழியும்
மேற்சுழியில் – வேகமாய்
61. இமையாது நாட மெழிலுருவாய் நிற்பாய்
அமையாத பூரணமு
மமைக்கு நீ – உமையே
62. நாலு வேதப் பொருளாய் ஞானம் பிறப்பிடமாய்
சால பிரக்ஞானம்
பிரமுமாய் – மேலாம்
63. தானகம் பிரம்மாஸ்மி யுமாய்தத்தும் மசியாயாண்ட
மோன வறிதானந்த
முத்தியுமாய்த் – தானே
64. அயமாத்மா பிரம்ம மளித்திடுவாய் நீயே
தயவோ டெனையாண்ட
தற்பரியே – ஜெயந்
65. தருவாயில் வேளை சாயுச்ய நீண்ட
குருவாய்
கைவல்யங் கூடிடவுந் – திருவே
66. விதேக கைவல்ய வித்தகமே வாலை
ஸ்தானந்தத்
தருஞ்சற் குனியே – இதேயகுள்
67. நாடாது நாட நன்கெனக்கு நியருள்வாய்
கூடாமற்
கூடும் குருபறையே – வாடா
68. வகையெனக் கருள்புரிவாய் வாலை மனோண்மணியே
ஜெகந்தனிலே
யுன்பாடல் சீர்பெருக – இகந்தனிலே
69. எத்தனையோ கோடிபிழை யெத்தனையேழை செயினும்
பத்தினியே
நீ பொருத்துன்பதமருள்வாய் – நித்தியமும்
70. அருள் லக்ஷ்மி போற்றின் னபூரணி போற்றி
பொருள் லக்ஷ்மி
போற்றி போற்றியே – இருளருக்கும்
71. ஏகாஷரி போற்றி ஈஸ்வரியே போற்றி
யேகாஷரி
போற்றி யென்னுளத்தில் – வேகமே
72. உற்பனமே போற்றி ஓங்காரி போற்றி
சிற்பரியே
போற்றி ஸ்ரீங்காரி - கற்பகமே
73. காரணியே போற்றி காமதேனுவே போற்றி
பூரணியே
போற்றி போதம் போற்றி – சீரணியே
74. நாரணியே போற்றி நாதவொளி போற்றி
தாரணி லெனையாண்ட
தாய் போற்றி – பேரணியே
75. சிவகாமி போற்றி சிற்றம்பலம் போற்றி
பல மருத்தாண்ட
பரை போற்றி – தவகாமி
76. அம்பிகையே போற்றி யருள்வாலை போற்றி
வம்பனையே
ஆண்ட வள்ளல் போற்றி – அம்பரியே
77. வாணியே போற்றி யருள் போற்றி போற்றி
காணவருள்
போற்றி கண்மணியே போற்றி தோணியாய்
78. கரைபோற்றியாண்ட காதலியே போற்றி
உரையாய்ப்
புகண்டனுயிர் போற்றி விரைவே
79. விஷாலாக்ஷி போற்றி விற்பனியே போற்றி
திசைமுகனை
யீன்ற திருபோற்றி – நசையறவே
80. அன்பளிக்கப் போற்றி ஆனந்தி போற்றி
தென்பாய்
காமாஷி செயல் போற்றி – பொன்பாதம்
81. மீனாக்ஷி போற்றி மேருமகள் போற்றி
தானாக்ஷி
தேவர் துதி தாய் போற்றி – பூனாக்ஷி
82. மனோண்மணி போற்றி மாமணியே போற்றி
சினமருத்தாள்
போற்றி சின்மயம் போற்றி – தினமே
83. பாக்கிய லக்ஷ்மி போற்றி பக்தரக்ஷிகி போற்றி
யோக்ய லக்ஷ்மி
போற்றி யுலகெலாம் – ஆக்கியே
84. ஆண்ட நாயகி போற்றி ஐவரைமீன்ற
நீண்ட நாயகி
போற்றி நிமலியே – தாண்டவியே
85. நார்பத்து முக்கோண நாயகியே போற்றி
சீர்ப்பத்தி
ஞான சேவடி போற்றி – காப்பாய்
86. பிறகு முனி மரபும் பெரும்சுண்டன்தாயுநீ
தருஞ் சாந்த
னுத்தம சுகமுனிவன் – பெருக
87. காசி க்ஷேத்திர வாசி கபீர் கமால் மத்தான்
குரு
தேசிகள்
திருவடியைச் சென்னிமிசை ஆசையுடன்
88. பாச வினையறுத்த பண்ணவ நற்சங்கிலியின்
வாச வடிக்
கமலம் வாழ்பெறவே – நேசமாய்
89. நிரந்தரமாய் நின்றகுரு நிருவாண தேசிகனை
சிரந்தாண்ட
மாலை தேவியு நீ – வரந்தருவாய்
90. ஆசோடு மதுரம் சித்திரம் வித்தாராமாயறிந்தோர்
பேசிகின்ற
நல்வாக்குப் பெருவே – நேசமாய்
91. அருளெனக் களிப்பாய் ஆனந்தி பூரணியே
பொருளெனக்
கறிவானந்த போதமாய் – திருவளிக்கும்
92. பக்தர்கள் வாழ்தளவை நகர் பரவுகின்ற – திருமடத்துள்
பத்தினியே
நின்றெளிக்கும் பாக்கியமே – முக்தர்நிதி
93. வைகுந்தன் தன் மரபும் வாழ்விக்கும் வைணவியே
மெய்யுகந்து
வாழ்க மெய்த்தவந்தா – துய்ய
94. வாலையருள் வாழி மனோண்மணியே வாழி
சீல மயேஸ்வரி
வழி திருவாழி – சாலவுமே
95. மாரி முத்துப்பாலன் வாக்கின்றுதி வாழி
தேரித்துதிப்
போர்கள் செழிந்தோங்கி – வாழியவே
96. மூலமெனும் பிரணவத்தின் முடியோ உத்தரம்
உத்தமியாள்
பாதமது வோங்குந் தெற்கு
சீலமதாய்
கீழ்மேற்கின் இடவலத்தின் புஜமாய்
சிறந்த தியக்கரத்தின்
கேவல ஜாக்கிறமாய்
மாலருளும்
சொப்பனமும் மயங்கு சுழுத்தியதாய்
மயக்க மருந்துரிய
வடிவாகிய வதீத
வாலை குரு
நாகியாள் வளர்தரு ஸ்ரீங்கார
வட்ட முனை சார்ந்திடுவார்
அற்புதராவாரே
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக