கந்தன் மீது கவியமுது - 3
மாதவம் செய்திடல் வேண்டும்
மால் மருகனை ஷண்முகனை வணங்கிட மாதவம்
செய்திடல் வேண்டும்
சின்ன சங்கரா சிங்கார வேலவா 
சின்ன சங்கரா சிங்காரவேலவா 
அறுமுக ஈஸ்வரா உமையவள் பாலகா 
ஆதி தெய்வமான முருகனை வணங்கிட மாதவம்
செய்திடல் வேண்டும்
கந்தன் அவன் பெயரை சொல்ல சொல்ல கர்மவினை தீரும் 
மெல்ல மெல்ல 
விதி என்றும் வினை என்றும் ஏன் செல்ல வேண்டும்
கதி என்று சரண் அடைய அவன் அருள் ஒன்றே போதும்
சிங்கார மயிலேறி செவ்வேல் கொண்டு வந்தருள வேண்டும் 
வேண்டும் வரம் யாவையும் தந்தருள வேண்டும்.
சிவாயநம
சிவாயநம
நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.


 
ஓம் குருவே சரணம்.ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
பதிலளிநீக்கு