செவ்வாய், 30 ஜூன், 2020

கந்தன் மீது கவியமுது - 1


ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

வண்ண மயில் வாகனனே
பக்தஜன காவலனே

சரணம் சரணம் வேல் முருகா சரணம்
சரணம் சரணம் வேல் முருகா சரணம்

ஜோதி வடிவானவனே
சுடர் ஒளி வேலவனே

கண் கண்ட தெய்வமே கலியுக கந்தனே.. சரணம் சரணம் வேல் முருகா சரணம் வேல்முருகா

அவனியில் அவனின்றி எதுவுமில்லை
அவனின்றி எதுவுமே நடப்பதில்லை

திருப்புகழ் கூறிடுமே அவன் புகழை அவனை தொழுதிட எய்திடலாம் பெரும் புகழை

பன்னிரு கைகளும் காத்தருள வேணுமய்யா
பதிணென் கண்களும் பார்த்தருள வேணுமய்யா

வேல்முருகா சரணம் வேல்முருகா
வேல் முருகா சரணம் வேல்முருகா.

சிவாயநம!


நன்றி: 
ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

2 கருத்துகள்:

  1. அந்தியூர் முருகா போற்றி.
    புதுக்காடு பால முருகா சரணம்.
    மலைக்காரன் தோட்டம் மயில் வாகனா போற்றி..
    குருவாய் வந்தாய் திருவாய் மலர்ந்தாய்
    ஏட்டினில் அமர்ந்து ஏணிப்படியாய் ஏற்றம் தந்தாய் ஞான ஸ்கந்தா போற்றி.
    ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்...
    கருணை வடிவேலா கந்தா போற்றி...
    குருவடி சரணம் ஓம் குருவே சரணம்

    பதிலளிநீக்கு