ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 3
ஜீவ நாடி என்பதற்கு ஜீவனுள்ள எழுத்துக்களைத் தோன்றி மறையச் செய்யும் என்றே
பொருள் உண்டு.
ஆனாலும் எல்லா நேரங்களில் தோன்றுகின்ற எழுத்துக்களைப்
பார்த்தே படிப்பது சுலபமாக இருப்பதில்லை.
பல நேரங்களில் சுவடியைப் பிரித்த உடனேயே சரளமாகப் பாடல் வடிவில் முக்காலமும்
வந்து விடுகின்றன.
அப்போது எந்த எழுத்துக்களும் சுவடியில் இருப்பதில்லை.
சில நேரங்களில் வரைபடங்கள் தோன்றும். சங்கு, சக்கரம்,
மற்றும் மந்திரங்கள் போன்றவை தோன்றும். அதை வைத்து
வழிபடும் தெய்வம், செல்கின்ற ஆலயம், பரிகாரம் போன்றவற்றை
அறிந்துக் கொள்ள முடிகிறது.
சில நேரங்களில் மூச்சுவிடவே இடைவெளி தராமல் வேகமாக
பாடல்கள் வருவதும் உண்டு.
இது அத்தனையும் வந்து
அமர்பவரின் கர்ம வினைகளையும், அவர்களது குல தெய்வ அருளையும், அவர்கள் கர்ம வினைகளையும், நம்பிக்கையையும்
பொறுத்தே அமைகிறது.
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.
நம்பியவர்க்கு நல்லாசி புரியும் நாடி.நம்பாதோரையும் அற்புதம் செய்து நம்ப வைத்து சரணாகதி அடைய வைக்கும் ஞான ஸ்கந்த மூர்த்தி ஜீவநாடி
பதிலளிநீக்கு