சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
நூற்பா 70
சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே
பாணனும் தருமியும் பெத்தானும் உய்யப்
பாடியது அன்றிப் பைந்தமிழ்க் கழகத்
தலைவனைப் பழித்தும் தனிக்கவி பகர்ந்த
பரமனும் புலவன் என்பது பண்பே.70
இதன்பொருள்:
பாணபத்திரருக்காக “மதிமலி புரிசை” என்னும் திருமுகப் பாசுரத்தையும், தருமிக்காகக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற அகவற் பாவையும், பெத்தான் சாம்பானுக்காக "அடியார்க் கெளியன்” எனத்தொடங்கும் வெண்பாவையும், நக்கீரனை இகழ்வதாக, “அங்கம் குலுங்க” என்னும் ஒரு வெண்பாவையும் பாடியதால் சிவபெருமானையும் ஒரு தமிழ்ப்புலவர் என்பதே முறையாகும் என்றவாறு.
விளக்கம்:
இவ் வரலாறுகள் திருவிளையாடற் புராணம், புலவர் புராணம் ஆகியவற்றுள் உள்ளன. சிவபெருமானும் தமிழ்ப் புலவனே என்னும் இதே கருத்து இவரால் வேறிடத்தே “அரன்முனாள் தருமி பாணன் அன்புறு பெத்தான் கீரன் தரம்உலகு அறியப் பாடித் தமிழ்க்கவிப் புலவன் ஆனான்”1 எனக் கூறப்பட்டுள்ளது.
நன்றி : பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஓம் குருவே சரணம்
நீக்குஓம் குருவே சரணம்.....
பதிலளிநீக்கு